!
|
Posted Date : 15:12 (18/12/2013)Last updated : 11:12 (24/12/2013)
பத்திரப்பதிவு: மோசடியைத் தவிர்க்க பக்கா வழிகள்!
இந்திய அளவில் பத்திரப்பதிவு நடைமுறைகளில் தமிழ்நாடு இரண்டாவது இடம் வகிக்கிறது. முதலிடத்தில் ஆந்திராவும், மஹாராஷ்ட்ரா, கர்நாடகா மூன்று, நான்காம் இடத்திலும் உள்ளன.
தமிழகத்தில் பத்திரப்பதிவில் இன்னும் என்னென்ன மாற்றங்களை மேற்கொண்டால் முதன்மை மாநிலமாக முன்னேற்ற முடியும்? குறிப்பாக, மோசடிகளைத் தவிர்க்க எந்த மாதிரியான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்? இந்த விஷயங்களில் மற்ற மாநில நடைமுறைகளில் உள்ள சிறந்த விஷயங்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
கிரயப் பத்திரத்தில் சொத்தின் புகைப்படம்!
கிரயப் பத்திரத்தில் சொத்தின் புகைப்படம் இடம் பெறும்போது, மோசடிகளை பெருமளவு குறைக்க முடியும். இதற்கான நடவடிக்கை, இந்தியாவில் முதல்முறையாக மத்தியப்பிரதேசத்தில் 2005-ல் கொண்டுவரப்பட்டது. அதாவது, கிரயப் பத்திரத்தில் குறிப்பிடும் சொத்தின் புகைப்படத்தைக் கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்கிற நடவடிக்கையை அமல்படுத் தினார்கள்.
இதனைத் தொடர்ந்து குஜராத், உத்தரப்பிரதேசம் மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்களிலும் அமல்படுத்தப் பட்டது. காலி நிலங்களுக்கு ஒரு புகைப்படமும், வீடு அல்லது அடுக்குமாடி கட்டடங்களுக்கு இரண்டு புகைப்படங்கள் (முன்பக்கம் மற்றும் பக்கவாட்டுப் படம்) இணைக்கப்பட்டன. இந்த நடைமுறையைத் தமிழகத்திலும் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
![]()
பத்திரப்பதிவின்போது விற்பவரின் பெயரில் உள்ள பட்டா சமர்ப்பிக்க வேண்டும். இந்தியாவில் பல மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களில் சமீபத்தில் வழங்கப்பட்ட நில உரிமைச் சான்றை (பட்டா) கிரயப் பத்திரம் பதியும்போது விற்பவர்கள் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.
ஆனால், தமிழகத்தில் தற்போது சொத்தை விற்பனை செய்ய பத்திரம் பதியும்போது, விற்பவர் பெயரில் உள்ள பட்டாவைக் கொண்டுவருவது கட்டாயம் என கோவை உள்பட 9 மாவட்டங்களில் மட்டும் நடைமுறையாக உள்ளது. இதைத் தமிழகம் முழுக்க கொண்டுவர வேண்டும்.
ஆன்லைன் வில்லங்கச் சான்றிதழ்!
ஆந்திராவில் வில்லங்கச் சான்றிதழ்களை 1998-ம் ஆண்டு முதல் பதிவுத் துறையின் வெப்சைட் மூலம் பார்க்கும் வசதி (e-encumbrance) ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதாவது கடந்த 30 ஆண்டு காலத்துக்கான வில்லங்கத்தை தெரிந்து கொள்ள முடியும். இந்த வசதி கடந்த 2000ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் இந்த வசதி 2002-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. வீட்டில் இருந்தே எப்போது வேண்டுமானாலும் சொத்து விவரங்களைப் பார்த்துக்கொள்ள முடியும். இதனால் ஏதாவது மோசடி நடந்திருந்தாலும் தெரிந்துகொள்ள முடியும். தமிழ்நாட்டிலும் இந்த நடைமுறையைக் கொண்டுவர நடவடிக்கை
![]()
பவர் ஆஃப் அட்டர்னி!
தமிழகத்தில் கடந்த 2010 முதல் பவர் ஆஃப் அட்டர்னி தொடர்பாக பல நல்ல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதன்மூலம் பத்திரப்பதிவு மோசடி பெருமளவு குறைந்துள்ளது. இந்தியாவிலேயே முதல் மாநிலமாக பவர் ஆஃப் அட்டர்னி தரப்பட்டிருக்கும் விஷயத்தை வில்லங்கச் சான்றிதழில் குறிப்பிடும் வசதி தமிழகத்தில்தான் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
ஆந்திர மாநிலத்தில் எலெக்ட்ரானிக் பவர் ஆஃப் அட்டர்னி (e-General Power of Attorney) நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வசதி, ஆந்திராவில் பத்திரப்பதிவு வெப்சைட்டில் உள்ளது.
பவர் ஆஃப் அட்டர்னி பத்திரம் யார் எழுதினார்கள், யார் ஏஜென்ட், அந்த பவர் பத்திரம் தற்போதும் அமலில் உள்ளதா மற்றும் அந்த பவர் பத்திரம் மூலம் எழுதப்பட்ட பிற பத்திரங்கள் எவை என்பதை ஒருசில விநாடிகளிலே தெரிந்துகொள்ளும் வசதியும் உள்ளது. இந்த வசதி தமிழகத்திலும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் பவர் ஆஃப் அட்டர்னி, ஒரு வருடத்துக்குதான் செல்லுபடியாகும். இதைத் தமிழகத்திலும் அமல்படுத்தலாம்.
பத்திரப்பதிவு: தொடர் விவரங்கள்..!
நமது அண்டை மாநிலமான புதுச்சேரியில் அமலில் உள்ள ஒரு சிறப்பான நடைமுறையைத் தமிழகத்திலும் அமல்படுத்தலாம். புதுச்சேரியில் ஒரு பத்திரம் பதிவு செய்யும்போது, அந்தப் பத்திரத்தின் தாய்ப்பத்திரம் மற்றும் மூலப்பத்திரத்திலும் இந்தப் பத்திரப்பதிவு விவரம் குறிப்பிடப்படுகிறது.
உதாரணத்துக்கு, 2013-ல் பதிவு செய்யப்பட்ட கிரயப் பத்திரத்துக்கு 2002-ம் ஆண்டு தாய்ப்பத்திரம் மற்றும் 1987-ம் ஆண்டு மூலப்பத்திரம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். சொத்து பதிவு செய்யும்போது அசல் தாய்ப்பத்திரம் மற்றும் அசல் மூலப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அந்த மூலப்பத்திரத்தில் 2002-ம் ஆண்டு மற்றும் 2013-ம் ஆண்டு பத்திரப்பதிவு எண் குறிப்பிடப்படும்.
எந்த பத்திரம் பதிவு செய்யப்பட்டாலும் குறிப்பிட்ட மூலப்பத்திரம் மற்றும் தாய்ப்பத்திர விவரங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதன்மூலம் போலிப் பத்திரங்கள் தவிர்க்கப்படுகின்றன. இந்த நல்ல நடைமுறையைத் தமிழகத்திலும் அமல்படுத்தலாம்.
![]()
கட்டணத்தில் பெண்களுக்கு சலுகை..!
இந்தியாவில் சில மாநிலங்களில் பெண்கள் பெயரில் பத்திரம் பதிவு செய்யப்பட்டால், முத்திரைத்தாள் கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. (பார்க்க அட்டவணை) தமிழகத்திலும் இதுபோன்ற கட்டணச் சலுகைளை அமல்படுத்தலாம். இதன்மூலம் பெண்களுக்கு கூடுதல் சமூக அஸ்தஸ்து கிடைக்கும். மேலும், குடும்பச் சொத்துகள் எளிதில் விற்கப்படுவது குறையும்.
கட்டணத்தைக் குறைக்க வேண்டும்!தமிழகத்தில் பத்திரப்பதிவு மற்றும் முத்திரைத்தாள் கட்டணம் குறைக்கப்பட வேண்டும். தமிழகத்தில் தற்போது முத்திரைக் கட்டணம், சொத்தின் அரசு வழிகாட்டி மதிப்பில் 7% மற்றும் பத்திரப்பதிவு கட்டணம் 1 சதவிகிதமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் பல மாநிலங்களில் இதைவிட மிகக் குறைவான கட்டணம் உள்ளது.
முத்திரைத்தாள் பதிவுக்கான கட்டணம் மிக அதிகமாக இருப்பதால் பலரும் பத்திரம் பதிவு செய்யாமல், பவர் ஆஃப் அட்டர்னி நிலையிலேயே வைத்திருக்கிறார்கள். இதனால் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க பத்திரப்பதிவு கட்டணத்தைக் குறைக்கலாம்.
குறைவான முத்திரைத்தாள் கட்டணம் உள்ள மாநிலங்கள் என்று பார்த்தால், குஜராத்தில் 4.9 சதவிகிதமாகவும், மஹாராஷ்ட்ரா, ஒடிஷா மற்றும் இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் 5 சத விகிதமாகவும், ஆந்திரப்பிரதேசத்தில் 4 சத விகிதமாகவும், ஜார்கண்ட் மாநிலத்தில் 4 சத விகிதமாகவும் உள்ளன.
குறைவான பத்திரப்பதிவு கட்டணம் உள்ள மாநிலங்கள் எவை என்று பார்த்தால், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 10,000 (அதிகபட்சம்) ரூபாயும், ஹரியானாவில் 15,000 (அதிகபட்சம்) ரூபாயும், இமாச்சலப்பிரதேசத்தில் 25,000 (அதிகபட்சம்) ரூபாயும் மஹாராஷ்ட்ராவில் 30,000 (அதிகபட்சம்) ரூபாயும் உள்ளன.
மேலே குறிப்பிட்டுள்ள சில மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் பத்திரப்பதிவு மற்றும் முத்திரைத்தாள் கட்டணத்தில் உச்சவரம்பு தொகையை நிர்ணயிக்க வேண்டும்.
இதர மாநிலங்களில் உள்ள சிறப்பான பத்திரப்பதிவு நடைமுறைகளைத் தமிழகத்தில் கொண்டுவருவதன்மூலம், தமிழகத்தில் பத்திரப்பதிவில் ஏற்படும் மோசடிகளை வெகுவாகக் குறைத்துவிடலாமே!
|
இந்த வலைப்பதிவில் தேடு
பத்திரப்பதிவு: மோசடியைத் தவிர்க்க பக்கா வழிகள்
அகலக்கால்... அபாயம்! சறுக்கலை சரிசெய்த சவாலான நிதித் திட்டமிடல்
கஷ்டம் வரும்போதுதான் கடவுள் ஞாபகம் வரும். இப்போது சிலருக்கு கடவுளோடு நிதி ஆலோசகர்களின் ஞாபகமும் வருகிறது. கணேஷ், சுதா தம்பதிகள் ஏறக்குறைய அந்த மாதிரியான ஒரு தம்பதிதான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணேஷ்(40), சுதா(36) இருவரும் என்னைச் சந்தித்தபோது இருவருமே பணியில் இருந்தார்கள். சுதாவுக்கு அரசு நிதித் துறையில் வேலை. அவர் வாங்கிய சம்பளம் பிடித்தம்போக ரூ.40,000. கணேஷ§க்கு தனியார் துறையில் விற்பனைப் பிரிவில் வேலை. அவர் வாங்கிய சம்பளம் ரூ.45,000. இவர்களுக்கு அபர்ணா (12 வயது), அர்ஜுன் (10 வயது) என இரண்டு குழந்தைகள்.
தவறான அணுகுமுறை!
இருவரும் இரண்டு ஃப்ளாட்களை வாங்கி முதலீடு செய்ததைப் பெருமையாக என்னிடம் சொன்னார்கள். முதல் ஃப்ளாட்டுக்கு ரூ.25 ஆயிரம் இ.எம்.ஐ. கட்டி வந்தார்கள். வீடு வாங்கும்போது விலை ரூ.25 லட்சம். அதன் தற்போதைய மதிப்பு ரூ.40 லட்சத்திற்கும் மேல். இந்த விஷயம்தான் அவர்களைப் பெருமை கொள்ள வைத்திருப்பதற்கான காரணம் என்று எனக்கும் விளங்கியது.
முதல் முதலீடு வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து இரண்டாவதாக இன்னொரு ஃப்ளாட்டை வாங்கினார்கள். அதற்கான இ.எம்.ஐ. மாதத்திற்கு ரூ.20,000. மேலும், பில்டருக்கு முன்பணமாகத் தர ரூ.3 லட்சத்தைக் கடன் வாங்கி இருந்தார்கள். அதற்கு அவர்கள் கட்டிவந்த இ.எம்.ஐ. ரூ.15,000. ஆக மொத்தம் அவர்களின் மாத வருமானத்தில் பெரும் பங்கு வீட்டுக் கடனுக்காக இ.எம்.ஐ. செலுத்துவதிலேயே செலவானது. இதனோடு அவர்களின் குடும்பச் செலவு ஒரு மாதத்திற்கு ரூ.20,000. மற்ற செலவுகள்போக, மேற்கொண்டு முதலீடு செய்வதற்கு அவர்கள் கையில் பணமில்லை.
இந்த நிலையில், அடுத்த ஒரு வருடத்தில் இன்னுமொரு ஃப்ளாட்டை வாங்கப் போவதாகச் சொன்னார்கள். ஏன் இப்படி அடுத்தடுத்து ஃப்ளாட்களை வாங்குகிறீர்கள் என்று கேட்டேன். பிற்பாடு குழந்தைகளின் திருமணத்தின்போது ஃப்ளாட்டை விற்று, செலவைச் சமாளிக்கவே இப்படி செய்வதாகச் சொன்னார்கள். அகலக்கால் எப்போதும் அபாயத்தையே விளைவிக்கும். அத்தியாவசியத் தேவைக்கு ஒரு ஃப்ளாட் போதும். குழந்தைகளின் படிப்பு, திருமணம், ஓய்வூதியம் போன்றவற்றுக்கு ரியல் எஸ்டேட் முதலீட்டை மட்டுமே நம்பி இருக்க வேண்டாம் என்று நான் அவர்களிடம் சொன்னேன். மூன்றாவது ஃப்ளாட்டை வாங்கும் எண்ணத்தை சில ஆண்டு தள்ளி வையுங்கள் என்றேன். இதனால், கடன் சுமை அதிகரிப்பதைத் தடுக்கலாம். தவிர, மாத பட்ஜெட்டில் ரூ.19,000-20,000 துண்டுவிழும் என்பதை எடுத்துச் சொன்னேன்.
இன்ஷூரன்ஸ் இல்லை!
முதலீட்டில் மட்டும் இத்தனை அக்கறை யோடு இருந்தவர்கள், போதிய அளவு ஆயுள் காப்பீடு எதுவும் இல்லாமல் இருந்தது ஆச்சர்யமான விஷயம். கணேஷ், சுதா இருவருக்கும் குறைந்தபட்சம் தலா ரூ.40-50 லட்சம் பியூர் டேர்ம் இன்ஷூரன்ஸ் தேவை என்று வலியுறுத்தினேன்.
எதிர்காலத் தேவை!
முதல் குழந்தைக்கான படிப்புக்கு அடுத்த சில வருடங்களில் ரூ.8 லட்சம் வரை தேவை. இதைச் செய்யும்முன், இரண்டாவது வீடு வாங்க அவர்கள் எடுத்திருந்த பெர்சனல் லோனை முதலில் முடிக்கவேண்டும். காரணம், இதற்கு வட்டி அதிகம்.
நான் சொன்ன யோசனைகளை கேட்டபிறகு, மீண்டும் என்னை சந்திப்பதாகச் சொல்லிவிட்டுப் போனவர்கள், போனவர்கள்தான். நீண்ட காலம் அவர்களிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை.
எனக்கு இது புதிதல்ல. நிதி ஆலோசனைக் கேட்டு வருகிற பலரும் நான் சொல்வதைக் கேட்டு தலையைத் தலையை ஆட்டுவார்கள். பிறகு அதை அப்படியே விட்டுவிடுவார்கள். நிதி ஆலோசனை என்பது விளையாட்டுத்தனமான விஷயமல்ல. அது ஒருவரின் வாழ்க்கையை சீர்திருத்தி அமைக்கும் செயல்.
இது எனக்குத் தெரியும் என்பதால், அவர்கள் செய்த தவறை பெரிதுபடுத்தாமல், ஒரு நண்பர் போல மீண்டும் ஆலோசனைகளைத் தரத் தொடங்கினேன். தற்போதைய நிலையில் பணப்புழக்கத்திற்கு வழியே இல்லாததால், ஏதேனும் ஒரு வீட்டை விற்று, வரும் பணத்தைக் கொண்டு பெர்சனல் லோன், கோல்டு லோன்களை முதலில் அடைத்துவிட்டு வருமாறு சொன்னேன். மேலும், வருமான வரிச் சலுகைகளையும் பெற ஆலோசனை கூறினேன்.
குழந்தைகளின் படிப்பு!
இரண்டு வாரங்களுக்குப் பிறகு எனக்கு போன் செய்த கணேஷ், வீட்டை விலை பேசி முடித்துவிட்டதாகச் சொன்னார். நான் முன்னரே அவர்களுக்கு திட்டமிட்டதுபோல், குழந்தைகளின் படிப்பு, திருமணம் மற்றும் ஓய்வுக்கான சேமிப்புகளைத் தொடங்கினார்கள். ஆனால், அதற்கான பணம் அவர்களிடம் அதிகமில்லை.
கைதந்த டியூஷன்!
சேமிப்புக்கு என்று மீதி நிற்கும் தொகையே 1,000 ரூபாய்தான். அதனால் அவர்களுக்கு எக்ஸ்ட்ரா வருமானம் தேவை. அவர்கள் எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைத் திருந்தால் இந்நிலைமையை ஓரளவுக்கு சரி செய்திருக்கலாம். வரவில்லை என்பதால் எக்ஸ்ட்ரா வருமானத்தை ஈட்ட இருவரையும் பகுதி நேரமாக பிள்ளைகளுக்கு டியூஷன் எடுத்து சம்பாதிக்கச் சொன்னேன்.
முதல் இரண்டு மாதங்கள் பெரிய வருமான மில்லை என்றாலும் அடுத்து வேகமெடுத்தது. அதனால் மாதம் ஒன்றுக்கு 15,000 ரூபாய் சம்பாதித்தார்கள். அந்தப் பணத்தை வேறெதுக்கும் பயன்படுத்தாமல் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்காக, அவர்களின் ஓய்வுக்காலத்திற்காகப் பிரித்து மியூச்சுவல் ஃபண்ட், பேலன்ஸ்டு ஃபண்ட் மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்யச் சொல்லி நல்ல வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்டுகளையும் பரிந்துரை செய்தேன். இதை அவர்கள் செய்தால் எதிர்காலம் குறித்து கவலை இல்லாமல் இருக்கலாம். அவர்கள் செய்வார்கள் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது!''
தொகுப்பு: செ.கார்த்திகேயன்.
குறிப்பு: இந்தக் கட்டுரையில் வரும் குடும்ப நபர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன
குறிப்பு: இந்தக் கட்டுரையில் வரும் குடும்ப நபர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன
சென்னை ரியல் எஸ்டேட்: கிரெடாய் கலந்தாய்வு கூட்டம்
- சென்னை ரியல் எஸ்டேட் நிலவரம் குறித்து ரியல் எஸ்டேட் நிறுவன கூட்டமைப்பான ‘கிரெடாய்’ மற்றும் ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான ‘ஜோன்ஸ் லேங் லசாலே’ சார்பில் கலந்தாய்வு கூட்டம் அண்மையில் நடந்தது.
- கூட்டத்தில் ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, சந்தை நிலவரம், குடியிருப்பு சொத்து வகைகள், ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருக்கும் காரணிகள், சந்தையில் உடன் நிகழக்கூடிய மாற்றங்கள், முதலீட்டுக்கான வழிகாட்டல்கள் குறித்து ஆராயப்பட்டது.
- ஜெயின் ஹவுசிங் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனரும், தமிழ்நாடு ‘கிரெடாய்’ அமைப்பின் தலைவருமான சந்தீப் மேத்தா கூறியதாவது:–
- ரியல் எஸ்டேட் என்றும் வளர்ச்சி பாதையில் பயணிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. சமீப காலமாக தங்கம் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களின் கவனம் ரியல் எஸ்டேட் பக்கம் திரும்பியுள்ளது. ரியல் எஸ்டேட்டில் செய்யும் முதலீடு அதிக லாபம் கொடுப்பதாக இருப்பது இதற்கு காரணம். ரியல் எஸ்டேட் முதலீடு சில ஆண்டுகளில் பலமடங்கு லாபத்தை கொடுக்கும் என்று உறுதியாக சொல்லலாம்.
- இடத்துக்கு ஏற்ப வருமானம் சிறிதளவு மாறுபடும் என்றாலும் மதிப்பு குறையாது. சென்னையில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் செலவீனங்கள் போக சேமிப்பில் கணிசமான தொகை ஒதுக்குபவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்ற சிறந்த முதலீடாக ரியல் எஸ்டேட் விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.
- சந்தீப் மேத்தா
- உலகளவில் முக்கிய நாடுகளில் ரியல் எஸ்டேட் முதலீட்டில் இந்தியாவில் மும்பை, டெல்லிக்கு அடுத்தபடியாக சென்னை 26வது இடத்தில் உள்ளது" என்றார்
புழுதிவாக்கத்தில் வீடு இடிந்து ஒருவர் பலி: 3 பேர் படுகாயம்!
Posted Date : 14:28 (05/04/2014)Last updated : 15:09 (05/04/2014) சென்னை: புழுதிவாக்கத்தில் திடீரென வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியாக 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை புறநகர் பகுதியான புழுதிவாக்கத்தில் பாரதிநகர் பிரதான வீதியில், புழுதிவாக்கம் பஸ் நிலையத்துக்கு அருகே உள்ள ஜெயபால் என்பவருக்கு சொந்தமான வீடு நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது. அந்த வீட்டின் தரைத்தளத்தில் சந்திரா என்கிற ஹோட்டலும், முதலாவது மாடியில் ஒரு குடும்பமும் வாடகைக்கு இருந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு அந்த வீடு இடிந்து விழுந்தபோது ஹோட்டலில் நான்கு மேற்குவங்க இளைஞர்களில் மூவர் சாப்பிட்டுவிட்டு வெளியேற, 22 வயதான மன்சூம் ஷேக் என்பவர் மட்டும் கைக்கழுவிக் கொண்டிருந்திருக்கிறார். மன்சூம் ஷேக் மீது வீடு இடிந்து விழுந்ததும், இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட அவர் ஹோட்டலைவிட்டு வெளியே சென்ற தனது நண்பர்களை தனது செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தனை காப்பாற்ற கூறியிருக்கிறார். அப்போது மீண்டும் கட்டிடம் கீழே அமுங்கியதால், மன்சூம் ஷேக் நள்ளிரவு 1 மணியளவில் சடலமாக மீட்க்கப்பட்டார். அதேநேரம், முதலாவது மாடியில் குடியிருந்த சிவகுமாரின் மனைவி தீபா, 3வது படிக்கும் மகள் மணிஷா, ஒரு வயது குழந்தை கீர்த்தனா மற்றும் அவர்களது உறவுக்காரப் பெண்ணான விமலா ஆகியோர் வீட்டில் இருந்து அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விமலா கூறுகையில், ''அப்போது நான் வீட்டை பெருக்கி கொண்டிருந்தேன். சின்ன சத்தத்துடன் வீடு அசைவதை உணர்ந்து கத்திக் கொண்டே நானும் மனிஷாவும் வெளியே ஓடி வந்தோம். உண்மையில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு விட்டதாகதான் நினைத்தேன். பாப்பாவை கட்டிப் பிடித்துக் கொண்டு தீபா உள்ளே சிக்கி கதறியழுது கொண்டிருந்தார். அக்கம்பக்கத்தினர் உடனடியாக வந்து இருவரையும் பத்திரமாக மீட்டுவிட்டனர்" என்றார் பதற்றத்துடன். இந்த சம்பவ பற்றிய தகவல் அறிந்து உடனே வந்த மடிப்பாக்கம் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். செய்தி, படங்கள்: செ.கிரிசாந் |
காணாமல் போன மலேசிய விமானம்: கடலுக்கு அடியில் தேடும்பணி தொடக்கம்
பதிவு செய்த நாள் - ஏப்ரல் 05, 2014, 11:39:20 AM
மாற்றம் செய்த நாள் - ஏப்ரல் 05, 2014, 11:39:56 AM
காணாமல் போன மலேசிய விமானத்தின் பாகங்களை கடலுக்கு அடியில் தேடும் பணி தொடங்கியுள்ளது. விமான கருப்புப் பெட்டியின் பேட்டரி சில தினங்களில் செயலிழந்துவிடும் என்பதால், அதைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கருப்புப் பெட்டியில் இருந்து வரும் சிக்னல்களை கண்டறிய நீர்மூழ்கிக் கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளன. விமானம் காணாமல் போய் ஒரு மாத காலத்தை நெருங்கும் நிலையில், பேட்டரி செயலிழப்பதற்கு முன்னர் கருப்புப் பெட்டியை கண்டறிந்தால் மட்டுமே அதில் பதிவான தகவல்களை பெற முடியும். சுமார் 2 லட்சத்து 23 ஆயிரம் சதுர கிலோமீட்டர் தொலைவில் பல்வேறு நாடுகளின் கப்பல்களும் விமானங்களும் இணைந்து விமானத்தின் பாகங்களை தேடி வருகின்றன. கடந்த மாதம் 8ஆம் தேதி மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட போயிங் எம்.எச்.370 விமானம், புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே காணாமல் போனது.