வாஸ்துமுறையில் வீடு கட்டப்போறீங்களா கனவு இல்லத்தை அனைவருடைய கவனத்தையும் ஈர்க்கும் வகையில் வடிவமைக்க வேண்டும் என்ற ஆர்வம் நிறையபேரிடம் இருக்கிறது. ஒவ்வொரு அறையையும் நேர்த்தியான வேலைப்பாடுகளால் உருவாக்க முனைப்பு காட்டுவார்கள். வீட்டை வடிவமைப்பதில் வாஸ்து சாஸ்திரத்தின் பங்கும் அடங்கி இருக்கிறது. ஒவ்வொரு திசையையும் குறிப்பிட்டு வீடு கட்டும்போது அந்த திசையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை விவரிக்கிறது. வாஸ்து மீது நாட்டம் கொண்டவர்கள் வீட்டுமனை வாங்கும்போதும், அதில் வீடு கட்டும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
* வீட்டுமனை வாங்கும்போது வடக்கு, கிழக்கு திசையை பார்த்து அமைந்திருக்கும் மனைகளை தேர்ந்தெடுப்பது சிறந்தது.
* தெற்கு, மேற்கு திசை பார்த்த மனைகளாக இருந்தால் வாஸ்து முறையை பின்பற்றி கட்டிடங்களை அமைப்பது நல்ல பலனை கொடுக்கும்.
* வாங்கும் மனை சதுரம் அல்லது செவ்வக வடிவில் இருக்க வேண்டும். ஒழுங்கற்ற அளவுகளில் இருக்கும் மனையை தேர்வு செய்யக்கூடாது.
* வீடு கட்டும்போதும் வீட்டின் அமைப்பும் சதுர, செவ்வக வடிவ தோற்றத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
* வீட்டுமனை அமைந்திருக்கும் இடம் வடக்கு, கிழக்கு பக்கம் தாழ்வாகவும், தெற்கு–மேற்கு பக்கம் சற்று மேடாகவும் இருப்பது நல்லது. அவ்வாறு இல்லாவிட்டால் அதற்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து பயன்படுத்துவது நல்ல பலனை கொடுக்கும்.
* கட்டுமான பணிக்கு ஆள்துளை கிணறு அமைத்து அந்த நீரை பயன்படுத்துவதாக இருந்தால் வடகிழக்கு திசையில் கிணறை அமைப்பது சிறந்தது.
* கட்டுமான பணியை தொடங்கும்போது கிழக்கு, வடக்கு திசைகளில் காலி இடம் விட வேண்டும்.
* வீடு கட்டுவதற்கு தேவையான கட்டுமான பொருட்களை வைப்பதற்கு குடோன் அமைப்பதாக இருந்தால் அதற்கு தெற்கு, மேற்கு திசைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
*தரைத்தளத்தை அமைத்துவிட்டு சுவர் எழுப்பும்போது முதலில் வாசல் பகுதியில்தான் பணியை தொடங்க வேண்டும். சுமார் 4 அங்குலம் வரை வாசலில் சுவர் எழுப்பிய பிறகே மற்ற பகுதிகளில் கட்டுமான பணியை தொடர வேண்டும்.
* வீட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் கண்டிப்பாக ஜன்னல் அமைப்பதற்கு இடம் ஒதுக்க வேண்டும்.
* ஜன்னல், கதவுகளை ஒன்றுக்கு ஒன்று எதிராக இருக்குமாறு அமைப்பது நல்லது.
* சமையல் அறையை தென்கிழக்கு மூலைப்பகுதியில் கிழக்கு பார்த்தவாறு அமைப்பது சிறந்தது
வாஸ்துமுறையில் வீடு கட்டப்போறீங்களா வாஸ்துமுறையில் வீடு கட்டப்போறீங்களா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக