ஆப்கானிஸ்தானின் பரா மாகாணத்தில் போலீஸ் அதிகாரியான தனது மகனை சுட்டு கொன்ற தலீபான் தீவிரவாதிகளை பழிக்கு பழி வாங்கும் விதத்தில் அவரது தாய் துப்பாக்கியால் பதிலுக்கு சுட்டு 25 தீவிரவாதிகளை கொன்று குவித்துள்ளார்.
தலீபான் தீவிரவாதிகள்
ஆப்கானிஸ்தான் நாட்டில் குறிப்பாக மேற்கு மாகாண பகுதிகளில் அரசுக்கு எதிராக தீவிரவாதிகள் சதி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் அமைந்த பரா மாகாணத்தில் சோதனை சாவடி ஒன்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி தலீபான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதிகாலை 5 மணியளவில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
சோதனை சாவடி
அதனால் எழுந்த சத்தத்தை அடுத்து ரெசா குல் என்ற பெண்மணி தூக்கத்தில் இருந்து விழித்து எழுந்துள்ளார். அவர் கிராம பகுதியில் அமைந்த சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த பகுதிக்கு சென்று தனது மகனை தேடியுள்ளார். அங்கு தனது மகன் துப்பாக்கியால் சுடப்பட்டு பலியாகி கிடப்பதை பார்த்துள்ளார்.
துப்பாக்கி சூடு
இதனால் ஆத்திரமுற்ற குல் அங்கு கிடந்த துப்பாக்கி ஒன்றை கையில் எடுத்துள்ளார். அவர் தீவிரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். அவருடன் சேர்ந்து அவரது கணவர், மகள், இளைய மகன் மற்றும் மருமகள் ஆகியோரும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 25 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.
மருமகள் பேட்டி
இது குறித்து குல் உடைய மகள் பாத்திமா கூறுகையில், தலீபான் தீவிரவாதிகளுக்கு எதிராக ஒரு குடும்ப போரை நாங்கள் நடத்தியுள்ளோம் என்று கூறியுள்ளார். அவரது மருமகள் சீமா, சண்டை நடந்த பகுதிக்கு நாங்கள் சென்றபோது அது தீவிரமடைந்து இருந்தது. எளிய மற்றும் உயர் ரக துப்பாக்கிகள் கொண்டு தாக்குதல் நடந்து கொண்டு இருந்தது. எனவே, துப்பாக்கியின் கடைசி குண்டு தீரும் வரை நாங்கள் போரிட வேண்டியிருந்தது என்று கூறியுள்ளா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக