மால்கன்கிரி,
ஒடிசாவில் விடுதி ஒன்றில் தங்கி படித்து வரும் 9ம் வகுப்பு பள்ளி மாணவி கர்ப்பிணியாக இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவலை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கோராபுட் மாவட்டத்தில் 3 சிறுமிகளும் மற்றும் கந்தமால் மாவட்டத்தில் ஒரு சிறுமியும் என கடந்த 2 மாதங்களில் 18 வயதிற்குட்பட்ட சிறுமிகள் கர்ப்பமாக இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அதிகாரிகள் இந்த தகவலை கூறியுள்ளனர்.
பணி இடை நீக்கம்
கச்சேலி கிராமத்தை சேர்ந்த 9வது படிக்கும் அந்த மாணவி தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின முன்னேற்ற துறை விடுதி ஒன்றில் தங்கி படித்து வந்துள்ளார். விடுதி நிர்வாகத்திற்கு இது குறித்து தெரிந்தவுடன் அதன் காப்பாளர் சபீதாராணி சர்கார் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
கைது
இது தொடர்பாக விடுதி நிர்வாகம் விசாரணை செய்து வருகிறது. போலீசாரும் சிறுமி கர்ப்பமானதற்கு காரணமான நபர் யார் என விசாரணையை தொடங்கியுள்ளனர். அதில், மாணவி விடுமுறை நாட்களில் கிராமத்திற்கு செல்லும்போது அங்கு ஒரு பையனுடன் தொடர்பு ஏற்பட்டிருக்க கூடும் என நம்பப்படுகிறது. எனவே, போலீசார் அவனை கைது செய்து உள்ளனர்.
விசாரணை தொடருகிறது. முறையான விசாரணை மேற்கொண்டு குற்றவாளி மீது புகார் பதிவு செய்யப்பட்டு மாணவிக்கு நீதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மால்கன்கிரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜ்கிஷோர் தாஷ் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக