ரஜினியின் அடுத்த படத்தைத் தயாரிக்கவில்லை என்று ஆஸ்கர் நிறுவனம் தெரிவித்தது.
'லிங்கா' படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கவிருக்கும் அடுத்த படம் பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆஸ்கர் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் அடுத்த படத்தில் ரஜினி நாயகனாக நடிக்கவிருப்பதாகவும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து ஆஸ்கர் ரவிச்சந்திரனைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, "அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. ரஜினியை சந்தித்தது உண்மை. ஆனால், படம் குறித்து எல்லாம் பேசவில்லை, மரியாதை நிமித்தமாக மட்டுமே சந்தித்தேன். அவரை வைத்து படம் எல்லாம் தயாரிக்கவில்லை." என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக