இங்கிலாந்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சிறுமிகள் இளம் வயதிலேயே உடலுறவில் ஈடுபடும் நிலை அதிகரித்து உள்ளது. இதனை தவிர்க்க இங்கிலாந்து அரசு புதிய யுக்தியை தொடங்கி உள்ளது. பெண் குழந்தைகளுக்கு 11 வயதில் இருந்தே கற்பழிப்புக்கும், சம்மதத்துடன் கூடிய உடல் உறவுக்கும் உள்ள வித்தியாசத்தை கற்றுத்தருகிறார்கள்.
இந்த ஆண்டில் இருந்து தொடங்கும் இந்த வகுப்புகளில், படுக்கையில் எப்படி படுப்பது என்பது உள்பட பாலுணர்வு, கட்டாயப்படுத்துதல், சாதகமாக பயன்படுத்திக்கொள்ளுதல் போன்ற பிரச்சினைகளை எப்படி கையாள்வது என்பது குறித்து அவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. கல்வித்துறை செயலாளர் நிக்கி மோர்கன் கூறும்போது, ‘‘இன்று சிறுமிகள் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு பல அழுத்தங்களை சந்திக்கிறார்கள். நமது மகள்கள் பள்ளியை விட்டு செல்லும்போது, அவர்களுக்கு இந்த அழுத்தங்களை எப்படி சமாளிப்பது என்று தெரிந்திருக்க வேண்டியது அவசியம். இது நமது கடமை’’ என்றார்.
இது சைக்கிளா? அல்லது காரா?
அமெரிக்காவில் சைக்கிளையும், காரையும் ஒருங்கிணைத்து ஒரு புதுவித வாகனத்தை உருவாக்கியிருக்கிறார் ராப் காட்டர். இவர் முன்னாள் கார் பந்தய தொழில்நுட்ப நிபுணர். முட்டைக் கூடு போல உள்ள இந்த வாகனத்தில் ஒருவர் பயணிக்கலாம். நீங்கள் விரும்பும்போதோ அல்லது உடற்பயிற்சி செய்ய விரும்பினாலோ சைக்கிள் போல பெடல் செய்து ஓட்டலாம். வேகமாக செல்ல நினைத்தால் சூரியசக்தியில் இயங்கும் மோட்டாரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பெடல் செய்யும்போது மணிக்கு 32 கிலோமீட்டர் வேகத்திலும், மோட்டாரை பயன்படுத்தினால் 56 கிலோமீட்டர் வேகத்திலும் செல்லும். இதில் 250 கிலோ எடையை பயன்படுத்தலாம். உள்ளூர் மளிகை கடைகளுக்கு செல்ல ஏற்ற வாகனம். ஒரு பயணி மற்றும் மளிகை பொருட்களை ஏற்றிவர இது சரியாக இருக்கும் என்கிறார் கார்ட்டர். இந்திய மதிப்பில் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் விலையுள்ள இது, 18 மாதங்களில் 450 வாகனங்கள் விற்றுவிட்டன. இதனால் பெரிய அளவில் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக