முந்திரிப்பருப்பு சுவையானது மட்டுமல்ல, நமக்கு ஆரோக்கியத்தையும் அள்ளித் தரவல்லது.
இப்பருப்பில் நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம தாதுக்கள் உள்ளதோடு, நோய்கள் மற்றும் புற்றுநோயை வராமல் தடுக்க உதவும் 'பைட்டோகெமிக்கல்ஸ்'எனப்படும் தாவர வேதிப்பொருட்கள் அதிக அளவில் உள்ளன.
முந்திரிப் பருப்பில் இதயத்துக்கு நன்மை தரக்கூடிய ஒற்றை நிறைவு பெறாத கொழுப்பு அமிலங்களான (mono unsaturated fatty acids) ஒலியிக் மற்றும் பால்மிட்டோலெயிக் அமிலங்கள் அதிக அளவில் உள்ளன.
இத்தகைய கொழுப்பு அமிலங்கள் உடலுக்குத் தீமை விளைவிக்கக்கூடிய கொலஸ்ட்ராலை குறைத்து, நன்மை தரக்கூடிய கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்கிறது.
மேலும், ஒற்றை நிறைவு பெறாத கொழுப்பு அமிலங்கள் கரோனரி இதய நோயைத் தடுக்க உதவும் என்று சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதில் உள்ள மெக்னீசியமானது, எலும்பு வலுவடைவதற்கு உதவுகிறது. மெக்னீசியம் குறைபாட்டினால் உயர் ரத்த அழுத்தம், தசை இறுக்கம், ஒற்றைத் தலைவலி மற்றும் சோர்வு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
முந்திரிப் பருப்பில் உள்ள துத்தநாகம் பல்வேறு நொதிகளுக்கு இணை காரணியாக உள்ளதோடு, வளர்ச்சி, உயிரணு உற்பத்தி, செரிமானம் மற்றும் நியூக்ளிக் அமிலம் சிதைவடைதலை ஒழுங்குபடுத்துகிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக