இஸ்லமாபாத்,
மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி லக்வியை பாகிஸ்தான் அரசு தடுப்பு காவலில் வைத்தது செல்லாது என்று இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு நேற்று அறிவித்து, அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது. இது இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், பஞ்பாப் மாகாண அரசு புதிய தடுப்புக்காவல் உத்தரவை லக்விக்கு எதிராக பிறப்பித்துள்ளது. இதன் மூலம் மேலும் ஒருமாத காலத்துக்கு லக்வி சிறையில் இருந்து வெளிவரமுடியாது என்று கூறப்படுகிறது.
முன்னதாக நேற்று, லக்விக்கு ஜாமீன் அளிக்கப்பட்டதையடுத்து டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் அப்துல் வாசித்தை தெற்கு பிளாக்கில் உள்ள அலுவலகத்துக்கு நேற்று நேரில் வரவழைத்து லக்வியின் விடுதலைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்ததுடன், தனது ஆட்சேபத்தை பதிவு செய்தது.அது மட்டுமின்றி இந்த விவகாரத்தை இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம், பாகிஸ்தான் அரசிடம் தீவிரமாக எடுத்துச் சென்றுள்ளது. லக்வி விவகாரத்தால் அமெரிக்காவும் பாகிஸ்தானை கண்டித்து இருந்தது குறிப்பித்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக