ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மேடமி டுஸாட்ஸ் மியூசியத்தில் பிரபலங்களின் முழு உருவ மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த மியூசியத்தில் பல துறைகளைச் சேர்ந்த இந்திய பிரபலங்ளின் சிலைகளும் உள்ளன. அந்த வகையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் சிலையும் இங்கு வைக்கப்பட்டது.
POst Your Ad 100% Freee
சிட்னி நகருக்கு சுற்றுலா செல்லும் பலரும் சச்சினின் முழு உருவ மெழுகுச் சிலையின் அருகில் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இந்நிலையில், தற்போது சச்சினின் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.
அந்த சிலைக்கு உலகக் கோப்பை T20 போட்டியின்போது விளையாட்டு வீரர்கள் அணிந்த சீருடை அணிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் சச்சின் T 20 போட்டியில் விளையாடியது இல்லை.இது குறித்து மும்பையை சேர்ந்த ஒரு பத்திரிகை ஒன்று மியூசியத்தின் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தது. இதை தொடர்ந்து சச்சினின் மெழுகு சிலை அங்கிருந்து அகற்றபட்டது.
அந்த மெழுகு சிலை பாங்காக் நகருக்கு கொண்டு செல்லப்பட்டதாக மேடம் டுஸாட்ஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக