பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஜான் ஓவர்ஸ் என்ற பணக்காரர் வாழ்ந்தார். அவர் தன்னிடம் ஏராளமாகப் பணம் குவிந்திருந்தும் மகா கஞ்சனாகவே வாழ்ந்தார். தன் உணவான ரொட்டியைக் கூட சூடுபடுத்த அடுப்பை உபயோகிக்காமல் தன் சட்டைக்கு அடியில் உடலோடு ஒட்டி வைத்து உடலின் சூட்டில் அதை வெப்பப்படுத்தி உண்ணும் அளவுக்குக் கஞ்சன்.
ஒருமுறை ஓவர்ஸ் தன் வேலையாட்களுக்குச் சம்பளம் கொடுக்காமல் ஏமாற்ற ஒரு திட்டம் தீட்டினார். அதன்படி, தான் இறந்துவிட்டதுபோல ஆடைகளைப் போர்த்தியபடி படுக்கையில் படுத்துக்கொண்டு நடித்தார்.
இறந்துவிட்ட எஜமானனிடம் சம்பளம் வாங்க முடியாது என்று வேலைக்காரர்கள் சென்றுவிடுவார்கள் என்பது ஜான் ஓவர்ஸின் எண்ணம்.
ஆனால் ஜான் ஓவர்ஸ் இறந்ததாகக் கேள்விப்பட்ட வேலைக்காரர்கள் மிகவும் சந்தோஷம் கொண்டு வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துச் செல்ல முற்பட்டனர். தன் திட்டம் பாழாவதைக் கண்டு பொறுக்காத ஓவர்ஸ், படுக்கையறையில் இருந்து எழுந்து நின்றார். வேலைக் காரர்களைத் தடுக்க குரல் எழுப்பினார்.
'இறந்த'ஓவர்ஸ் எழுந்து நிற்பதைக் கண்ட வேலைக்காரன் ஒருவன், நிற்பது ஓவர்ஸின் ஆவி என்று கருதி பயப் பதற்றத்தில் மரக்கட்டையால் ஓங்கி அடிக்க, ஓவர்ஸ் மண்டை பிளந்து உண்மையிலேயே இறந்துவிட்டார்.
தந்தை இறந்தபின் ஓவர்ஸின் ஒரே மகள் கன்னிமடத்தில் சேர்ந்தார். தன் தந்தையின் பெயரால் மேரி அன்னைக்கு ஓவர்ஸின் செல்வத்தால் ஒரு தேவாலயம் அமைத்தார். இன்றும் அக்கோவில் 'செயின்ட் மேரி ஓவர்ஸ்'என்று இங்கிலாந்தில் அழைக்கப்படுகிற
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக