காத்மண்டு,
நேபாளத்தில் காண்டாமிருகம் ஒன்று ஊருக்குள் புகுந்து, அங்கியிருந்தவர்களை தாக்கியது. இச்சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார், பலர் காயம் அடைந்தனர்.
Pot Your Free Ad 100 % Free
தெற்கு நேபாளத்தில் உள்ள கிடாயுடா நகருக்குள், காண்டாமிருகம் ஒன்று புகுந்து உள்ளது. ஊருக்குள் புகுந்த காண்டாமிருகத்தை விரட்டும் பணியில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் முயற்சி செய்தனர். கார் ஹாரன்களை அழுத்தியும், டிரம்ஸ்களை இசைத்தும் காண்டாமிருகத்தை துரத்த முயற்சி செய்தனர். அவர்களுடையை முயற்சி அனைத்தும் தோல்வியிலே முடிந்தது. காண்டாமிருகம், மிரண்டு தறிக்கெட்டு ஓடியது. சாலையில் சென்றவர்களையும் தாக்கியது. இதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவமனைக்குள் நுழைந்தும், மார்க்கெட் பகுதிகளுக்குள் புகுந்தும் காண்டாமிருகம் அங்கிருந்தவர்களை விரட்டியது. இதனையடுத்து வனத்துறையினர் காண்டாமிருகத்தை மயக்க ஊசி போட்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். காண்டாமிருகத்தை பிடிக்க பழக்கப்பட்ட யானைகளை கொண்டுவருவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காண்டாமிருகம் மருத்துவமனையின் அருகேயே பதுங்கி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. நேபாளத்தின் மாத்வான்பூர் மாவட்டத்தில் வனவிலங்குகள் சரணாலயம் உள்ளது. இது சுற்றுச்சுவர் இல்லாத திறந்த வெளி சரணாலயமாகும். இங்கிருந்தே காண்டாமிருகம், நடந்து 20 கி.மீ தொலைவில் உள்ள கிடாயுடா நகரை அடைந்தது உள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக