அணுசக்தி நிறுவனத்தில் அதிகாரி பணிக்கு 110 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். என்ஜினீயரிங் பட்டதாரிகள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விவரம் வருமாறு:-
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று 'நியூக்ளியர் பவர் கார்ப்பரேசன் ஆப் இந்தியா லிமிடெட் (என்.பி.சி.ஐ.எல்)'. அணுசக்தி துறையின் கீழ் இயங்கும் இந்த நிறுவனம் அணுசக்தி திட்டங்களுக்கான இடம் தேர்வு செய்தல், திட்டம் வடிவமைத்தல், கட்டுமானம் செய்தல், அணுஉலை இயக்கம், பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை கவனிக்கிறது.
தற்போது இந்த நிறுவனத்தில் என்ஜினீயரிங் பட்டதாரிகளை 'எக்சிகியூட்டிவ் டிரெயினி' பணியில் நியமிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. 39 பின்னடைவு பணியிடங்கள் உள்பட மொத்தம் 110 இடங்கள் நிரப்பப்படுகிறது. பிரிவு வாரியாக மெக்கானிக்கல்- 55 பேர், எலக்ட்ரிக்கல் -15 பேர், எலக்ட்ரானிக்ஸ் - 8 பேர், கெமிக்கல் - 15 பேர், இன்ஸ்ட்ருமென்டேசன்- 7 பேர், இண்டஸ்ட்ரியல் அன்ட் பயர்சேப்டி- 10 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அவர்கள் ஓராண்டு பயிற்சிக்குப் பின் 'சயின்டிபிக்' அதிகாரியாக பணி நியமனம் பெறலாம். இதில் சேர்வதற்கான இதர தகுதி விவரங்கள் கீழே...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 20-3-15 தேதியில் 26 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். வயது வரம்பு தளர்வு அரசு விதிகளின்படி அனுமதிக்கப்படும்.
கல்வித் தகுதி:
பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ள என்ஜினீயரிங் பிரிவுகளில் பட்டப் படிப்பை நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 20-3-15-ந் தேதி வரை இணையதள விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும்.
விரிவான விவரங்களை www.npcilonline.co.in என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக