கொல்கத்தா,
மொபைல் போன் பேசுவதற்காக கண்டுபிடிக்கப்பட்டாலும் பலரும் புகைப்படம் எடுப்பதற்கு அதனை பயன்படுத்தி வருகின்றனர். அரசியல் நிகழ்ச்சி, விளையாட்டு போட்டி, தலைவர்கள் உரை, முக்கிய இடங்கள் என எல்லா பகுதிகளிலும் ஏதேனும் ஒரு சம்பவத்தை மக்கள் தங்களது மொபைல் போனில் படம் பிடிப்பது என்பது வாடிக்கையாகி விட்டது.
இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் பேருந்து ஒன்று மோதியதில் காயமடைந்து கிடந்த பெண் ஒருவரை காப்பாற்றாமல் பலரும் புகைப்படம் எடுத்து சென்ற அதிர்ச்சி சம்பவமும் நடந்துள்ளது. விபத்தில் சிக்கி அரை மணிநேரத்திற்கும் மேலாக அவருக்கு சிகிச்சை அளிக்காமல் விட்டு விட்டதால் மரணமடைந்து விட்டார்.
அவருக்கு உரிய நேரத்தில் உதவி செய்திருந்தால் மரணத்தில் இருந்து அவரை காப்பாற்றி இருக்கலாம் என குடும்பத்தினர் கூறியுள்ளனர். பொதுமக்களிடம் மனிதாபிமானம் குறைந்து வருவதை எடுத்து காட்டும் விதமாக நடந்துள்ள இந்த சம்பவம் குறித்த தகவலின்படி, மேற்கு வங்காளத்தில் 28 வயது கொண்ட அப்சா கட்டூன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கணவர் மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர்.
அப்சாவின் மகள்களான ஹாசா மற்றும் அக்ஷா ஆகியோரை பள்ளி கூடத்திற்கு ஏற்றி சென்ற பேருந்து ஒன்று மோதியதில் அப்சா படுகாயத்துடன் சாலையில் கிடந்துள்ளார். ஆனால் அவரை காப்பாற்ற ஒருவரும் முன்வரவில்லை. இறுதியாக, பக்கத்தில் இருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அப்சாவை சித்தரஞ்சன் தேசிய மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அப்சாவின் சகோதரர் சித்திக், தனது சகோதரிக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கவில்லை என கூறியுள்ளார். அப்சா தனது பெயர் மற்றும் கணவரின் தொலைபேசி எண்ணை நினைவிழப்பதற்கு முன்பு தெளிவாக அவசர சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் கூறியுள்ளார். ஆனால், அடிப்படை சிகிச்சை கூட அவருக்கு அளிக்கப்படவில்லை என்பதை எனது சகோதரர் கண்டுள்ளார் என்று அப்சாவின் சகோதரரான சித்திக் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தில் மற்றொரு அதிர்ச்சி தரும் விசயமும் நடந்துள்ளது. விபத்து பகுதிக்கு 5 மீட்டருக்கு அருகே ரேசன் கடை ஒன்று உள்ளது. ஆனால் ஒருவரும் உதவிக்காக வரவில்லை. அப்சாவின் கணவர், புதிதாக பிறந்துள்ள குழந்தைக்கு திரும்பி வந்து உணவளிப்பேன் என கூறி சென்றுள்ளார் என சித்திக் துயரத்துடன் கூறியுள்ளார். பேருந்து ஓட்டுநர் தப்பியோடி விட்டார். எனினும் உதவியாளரை போலீசார் கைது செய்துள்ளன

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக