ரஜினிகாந்தின் சமீபத்திய படங்களான கோச்சடையான், லிங்கா இரண்டுமே எதிர் பார்த்த வசூலை ஈட்ட வில்லை. எனவே அடுத்த படத்தின் கதையை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறார். புதிய படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்க போவதாக கூறப்படுகிறது.
இருவரும் நேரில் சந்தித்து பேசி இதை முடிவு செய்துள்ளனர். ஆஸ்கார் ரவிச்சந்திரன் ‘ஐ’ படத்தை அதிக பொருட்செலவில் எடுத்து உலகம் முழுவதும் ரிலீஸ் செய்தார். எனவே ரஜினி படத்தையும் பிரமாண்டமாக எடுக்க திட்டமிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் எடுத்து பெரிய அளவில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்.
முன்னணி இயக்குனர்கள் பலரிடம் கதைகள், கேட்கப்பட்டு உள்ளதாம். விரைவில் யார் இயக்கத்தில் ரஜினி நடிப்பார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. தற்போது ரஜினி படத்தை இயக்கும் போட்டியில் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், ஹரி, பி.வாசு, மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் சுப்பராஜ் ஆகிய 7 பேர் இருப்பதாக கூறப்படுகிறது.ஆனால் இதில் ஏ.ஆர் முருகதாசுகுதான் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து ஆஸ்கார் ரவிசந்திரன் கூறியதாவது:-
பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.இது திட்டத்தின் ஆரம்ப கட்டம் தான். கமல்ஹாசன் உள்பட அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் பணிபுரிந்து உள்ளேன்.ரஜினி சாருடன் வேலை செய்வதற்கான் வாய்ப்பை எதிர்பார்த்து கொண்டு இருந்தேன். அவரை வைத்து ஒரு பெரிய படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.அது விரைவில் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆஸ்கார் ரவிசந்திரனும் - முருகதாசும் இணைகிறார்கள் என்றால் அவர்களுக்கு இது இரண்டாவது படம் ஏற்கனவே விஜயகாந்த் நடிப்பில் ரவிசந்திரன் தயாரிப்பில் ரமணா படத்தை முருகதாஸ் இயக்கி உள்ளார்.
ரஜினிகாந்த் படத்திற்கான திட்டம் லிங்க வினியோகஸ்தர்கள் பிரச்சினையால் நிறுத்தி வைக்கபட்டு உள்ளது. முருகதாஸ் தனது இந்தி படத்தை சமீபத்தில் தான் தொடங்கினார். தமிழ் படமான மவுனகுரு இந்தியில் ரீமேக் செய்யபடுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் 2 மாதத்தில் முடிவடைந்து விடும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக