ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக இந்தியாவிலும் பிரசாரம் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் அந்த இயக்கத்துக்கும், அதன் துணை அமைப்புகளுக்கும் விரைவில் முறைப்படி தடை விதிக்கப்பட உள்ளது.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், இதற்கான தடை விதிக்கப்படும். இதுதொடர்பான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.