Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

பீரோ எந்த இடத்தில் அமைக்க வேண்டும் | பீரோ வாஸ்து

பீரோ எந்த இடத்தில் அமைக்க வேண்டும் கடினமாக உழைத்து சம்பாதித்த பணம், பெட்டியில் அதிக நாள்தங்குவதில்லை இன்னும் சிலருக்கு அதிகநேரம் கூட தங்குவதில்லை.எப்படியோ, எந்த விதத்திலோ பணம் ஐஸ்கட்டி போலகரைந்துவிடுகிறது. எதனால் இப்படி? இதற்கு தீர்வு இருக்கிறதா? என வாஸ்து சாஸ்திர ரீதியாக ஆராய்வோம்
காசு, பணம், துட்டு, மணி-மணி என்று, அனைவரின் நோக்கமும்பண சம்பாதிப்பதில்தான் இருக்கிறது. ஏழை, பணக்காரன் ஆகவிரும்புகிறான். பணக்காரன் கோடீஸ்வரனாக விரும்புகிறான்.கோடீஸ்வரன் மேலும் கோடிகளை குவிக்கவே விரும்புகிறான் இதுமனித இயல்பு எதுவும் ஓசியில் கிடைக்காது

பீரோ எந்த இடத்தில் அமைக்க வேண்டும் சாஸ்திர ரீதியாக ஆராய்வோம்

பணம் இருந்தால்தான்மிட்டாய் வாங்க முடியும் என்று பணத்தின் அருமை குழந்தைகளுக்குகூட தெரிகிறது. பணம் இருந்தால் நாம் விரும்பிய பொருட்களைவாங்குவதற்கு மட்டுமல்ல, சமுதாயத்தில் மதிப்பும்-மரியாதையும்பெற, பணம் இருந்தால்தான் முடியும் என்கிற நிலை உருவாகிவிட்டது.
பணம் சம்பாதிப்பது ஒரு திறமை என்றால், அதைவிட பணத்தைசேமித்து வைப்பதும் ஒரு பெரிய திறமை.
கடினமாக உழைத்து சம்பாதித்த பணம், பெட்டியில் அதிகநாள்தங்குவதில்லை இன்னும் சிலருக்கு அதிகநேரம் கூட தங்குவதில்லை.எப்படியோ, எந்த விதத்திலோ பணம் ஐஸ்கட்டி போலகரைந்துவிடுகிறது. எதனால் இப்படி? இதற்கு தீர்வு இருக்கிறதா? என வாஸ்து சாஸ்திர ரீதியாக ஆராய்வோம்.
வீட்டின் ஈசான்ய பகுதி எனப்படும் வடகிழக்கில் பீரோஅமைத்தால் பணம் தங்காது.ஈசானியம் என்பது தண்ணீர்இருக்க வேண்டிய இடம்.அதனால் இந்த ஈசான்யத்தில்பணம் வைத்தால் சம்பாதித்தபணத்தை ஆற்றில் போட்டகதைதான்.

அதுபோல, அக்கினி மூலையில் பீரோ அமைப்பதும் நல்லதல்ல

அக்கினி மூலை என்பதுநெருப்புக்குரிய பகுதி. நெருப்பில்இட்ட பொருள் யாவும் ‘சுவாகா’ஆவதுபோல, பணம் எப்படிகரைந்தது என கணக்கு பார்க்கமுடியாத அளவில் செலவுஏற்படும்
முக்கியமாக மருத்துவசெலவுகளுக்கு பணம் செலவாகும்.ஒரு மருந்து கடை வைக்கும் அளவிற்கு மருந்துகள் வாங்குவதற்கேபணம் சரியாக இருக்கும்
“சரிப்பா பணத்தை எப்படியோ கஷ்டப்பட்டு சம்பாதித்து வீட்டுக்கும் வந்துவிட்டேன்
இந்த பணத்தை வாஸ்துபடி எந்த பீரோவில்தான்வைப்பது
என நீங்கள் கையில் பணத்தை வைத்துக்கொண்டுகுழப்பத்துடன் நீங்கள் நிற்பது எனக்கு புரிகிறது
அதற்கு நம் விநாயகப் பெருமான் வழிகாட்டுகிறார்.திருக்கோயில்களில், கன்னி மூலையில் (தென்மேற்கு) வீற்றிருக்கும்விநாயகர், “கன்னி மூலை கணபதி” என்றே அழைக்கப்படுகிறார்
தடைகளை நீக்கி, நல்லவை வளர செய்யும் அவர் விரும்பும் பகுதியேகன்னி மூலை எனப்படும் தென்மேற்கு பகுதியாகும். அதனால்,கன்னிமூலை என்று சொல்லக்கூடிய நிருதி மூலை அதாவதுதென்மேற்கு பகுதி பீரோவில் பணம் வைத்தால் விபரீத செலவுகள்,தேவையற்ற செலவுகள் ஆகியவை குறையும்
தென்மேற்கில் அமைந்த பீரோவை, கிழக்கு நோக்கியோ அல்லதுவடக்கு நோக்கியோ வைக்க வேண்டும். பணம் வைக்கும் பீரோவில்எந்த தோஷமும் அண்டாமல் இருக்க, மஞ்சள் துண்டை விநாயகராகபாவித்து வைக்க வேண்டும்

ஸ்ரீமகாலஷ்மி படத்தை பீரோவின் உள்ளேஒட்டி வைக்கலாம்

இதனால் மங்கள காரியங்கள் செய்ய  போதியபணம், நகை சேரும்.
அதுபோல, தினமும் அன்றாட செலவுக்கு பணம் எடுப்பதாக இருந்தால்,தென்மேற்கு பீரோவில் இருந்து பணம் எடுப்பதை விட, வாயுமூலைஎனப்படும் வடமேற்கில் சிறிய அலமாரி அமைத்து, அதிலே கொஞ்சம்பணம் வைத்து தினசரி செலவுகள், அவசர செலவுகளுக்கு பணம்எடுப்பதே நல்லது.
அந்த அலமாரி கிழக்கு நோக்கி அமைக்கலாம் இடம் இல்லாதபட்சத்தில் வடக்கு சுவற்றில் அலமாரி அமைத்து, தெற்கு நோக்கியும்வைக்கலாம். இதனால், அன்றாட செலவுக்கு திண்டாட்டம் இல்லாதஅளவில் பண வரவு சிறப்பாக இருக்கும்!
  https://www.youtube.com/watch?v=HOLTRuisq9U&w=530&h=300
வாஸ்து ஆலோசனைக்கு முன் அனுமதி பெற்று நேரில் வர தொடர்புகொள்ளவும் :  
Written by K.Vijaya Krishnarau
BHAKTHI PLANET
விஜய் கிருஷ்ணாராவ்
போன்: 98411 64648
1462354745-top-real-estate-agents-in-orange-county-2

Search Property in Online Its Free

 
குறைந்த விலையில் வங்கி அடமான சொத்துக்கள் வாங்க வேண்டுமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left