Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

குஷ்புவை போன்ற விபச்சார நடிகைகளை வைத்து விவாதம் நடத்தும்

குஷ்புவை போன்ற விபச்சார நடிகைகளை வைத்துத் தலாக், குலாஹ், போன்ற இறை வசனங்களுக்கு விளக்கம் கேட்டுப் பொது சிவில் சட்டத்தைப் பற்றி விவாதம் நடத்தும் ஊடகங்களே ….
இஸ்லாமிய மரபோடு வாழும் இஸ்லாமிய மார்க சட்டங்களைப் பேணி நடக்கும் இது போன்ற சகோதரிகளை வைத்து விவாதம் நடத்த தயாரா ?
நாங்க இந்திய சமூகத்திற்க்கு ஊடகத்தின் வழியாகச் சொல்ல வருவது என்னவென்று கவனமாகக் கேளுங்க ….
முத்தலாக் பற்றிய சர்சை
முஸ்லீம்கள் பிரச்சனையோ, இந்திய மக்களின் பிரச்சினையோ அல்ல …

குஷ்புவை போன்ற விபச்சார நடிகைகளை வைத்து தலாக் , குலாஹ், போன்ற இறை வசனங்களுக்கு விளக்கம் கேட்டு பொது சிவில் சட்டத்தை பற்றி விவாதம் நடத்தும் ஊடகங்களே ….இஸ்லாமிய மரபோடு வாழும் இஸ்லாமிய மார்க சட்டங்களை பேணி நடக்கும் இது போன்ற சகோதரிகளை வைத்து விவாதம் நடத்த தயாரா ?நாங்க இந்திய சமூகத்திற்க்கு ஊடகத்தின் வழியாக சொல்ல வருவது என்னவென்று கவனமாக கேளுங்க ….முத்தலாக் பற்றிய சர்சை முஸ்லீம்கள் பிரச்சனையோ , இந்திய மக்களின் பிரச்சினையோ அல்ல …முஸ்லீம் எதிரிகளால் உருவாக்கப்பட்ட முஸ்லீம்களை சமூகத்தின் மத்தியில் கேவலப்படுத்தவே முத்தலாக் பற்றிய தவறான பிரச்சாரம் உலா வருகின்றன ..முஸ்லீம் சட்ட வாரியத்தின் சட்டதிட்டங்களில் முஸ்லீம் பெண்களுக்கு எந்த வித குறைபாடும் இல்லை …அது மட்டுமில்லை இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாப்பு , உரிமைகள் , சலுகைகள் என அனைத்தும் இஸ்லாமிய சட்ட வாரியத்தின் மூலம் நாம் பெற்று வருகின்றோம் …2011 ஆம் ஆண்டு இந்தியாவில் எடுக்கப்பட்ட பெண்கள் பாதிப்பு சம்மந்தப்பட்ட சர்வேயில் முஸ்லீம் பெண்களை விட மாற்று மத பெண்களின் பாதிப்பு தான் அதிகம் என வந்துள்ளது ….உதரணத்திற்க்கு இந்த சர்வேயில் வருடத்திற்க்கு 26000 பெண்கள் வரதட்சனை கொடுமையால் எரிக்கப்படுகின்றனர் …, 15 நிமிடத்திற்க்கு ஒரு பெண் கற்பழிக்கப்படுகின்றால் …. குழந்தைகள் கற்பழிப்பு எந்த சமூகத்தில் நடக்கின்றது என்பன போன்ற வற்றில் ஏன் விவாதம் நடத்துவது இல்லை .. எத்தனையோ புதுபுது சட்டங்கள் இந்தியா கொண்டு வந்தும் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை தடுக்க முடியலை ஏன் ?சதவீத அடிப்படையில் முஸ்லீம் பெண்கள் தலாக் பெறுவது மிக மிக குறைவே என சர்வே கூறியுள்ளது ….அது போன்றே பலதார மணம் முஸ்லீம் ஆண்களை விட மற்ற மத ஆண்கள் தான் அதிகம் பல பெண்களோடு தொடர்புள்ளவர்கள் உதரணத்திற்க்கு அரசியல் தலைவர்கள் எம்.பி. எம்.எல்.ஏ என யார் ஒரே பெண்ணோடு வாழ்கிறார் என விவாதம் நடத்துங்களே நாங்க பதில் சொல்கிறோம் ….முஸ்லீம் சட்ட வாரியத்தால் இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்பு பெற்று வாழ்கின்றனர் என நாங்க எங்கு வேண்டுமாலும் விவாதிக்க தயார் ..

Posted by தடா ஜெ. ரஹிம் on Sunday, 30 October 2016

முஸ்லீம் எதிரிகளால் உருவாக்கப்பட்ட முஸ்லீம்களைச் சமூகத்தின் மத்தியில் கேவலப்படுத்தவே முத்தலாக் பற்றிய தவறான பிரச்சாரம் உலா வருகின்றன .
முஸ்லீம் சட்ட வாரியத்தின் சட்டதிட்டங்களில் முஸ்லீம் பெண்களுக்கு எந்த வித குறைபாடும் இல்லை …
அது மட்டுமில்லை
இஸ்லாமிய பெண்களுக்குப் பாதுகாப்பு, உரிமைகள், சலுகைகள் என அனைத்தும் இஸ்லாமிய சட்ட வாரியத்தின் மூலம் நாம் பெற்று வருகின்றோம் …
2011 ஆம் ஆண்டு இந்தியாவில் எடுக்கப்பட்ட பெண்கள் பாதிப்பு சம்மந்தப்பட்ட சர்வேயில் முஸ்லீம் பெண்களைவிட மாற்று மத பெண்களின் பாதிப்பு தான் அதிகம் என வந்துள்ளது ….
உதரணத்திற்க்கு இந்தச் சர்வேயில் வருடத்திற்க்கு 26000 பெண்கள் வரதட்சனை கொடுமையால் எரிக்கப்படுகின்றனர் …,
15 நிமிடத்திற்க்கு ஒரு பெண் கற்பழிக்கப்படுகின்றால் ….
குழந்தைகள் கற்பழிப்பு எந்தச் சமூகத்தில் நடக்கின்றது என்பன போன்ற வற்றில் ஏன் விவாதம் நடத்துவதில்லை .
எத்தனையோ புதுபுது சட்டங்கள் இந்தியா கொண்டு வந்தும் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையைத் தடுக்க முடியலை ஏன் ?
சதவீத அடிப்படையில் முஸ்லீம் பெண்கள் தலாக் பெறுவது மிக மிகக் குறைவே எனச் சர்வே கூறியுள்ளது ….
அது போன்றே பலதார மணம் முஸ்லீம் ஆண்களைவிட மற்ற மத ஆண்கள் தான் அதிகம் பல பெண்களோடு தொடர்புள்ளவர்கள் உதரணத்திற்க்கு அரசியல் தலைவர்கள் எம்.பி. எம்.எல்.ஏ என யார் ஒரே பெண்ணோடு வாழ்கிறாரென விவாதம் நடத்துங்களே நாங்க பதில் சொல்கிறோம் ….
முஸ்லீம் சட்ட வாரியத்தால் இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்பு பெற்று வாழ்கின்றனர் என நாங்க எங்கு வேண்டுமாலும் விவாதிக்க தயார்

தடா ஜெ.ரஹிம்

 

திபாவளி பட்டாசு வெடிப்பதினால் காற்று எவ்வளவு மாசுபடுகின்றது

 
திபாவளி பட்டாசு வெடிப்பதினால் காற்று எவ்வளவு மாசுபடுகின்றது, ஒட்டகத்தின் மீது அனுதாபம் காட்டி ஒட்டகம் அறுக்கத் தடை போட்ட சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியே,
சுற்று சூழல்மீதும்வெடி விபத்தால் சாகும் மனிதர்கள்மீது ஏன் இரக்கம் காட்ட மனம் வரவில்லை ?
பட்டாசு வெடிப்பதினால் காற்று எவ்வளவு மாசுபடுகின்றது !
பட்டாசு வெடிப்பதினால் எத்துனை தொழில் நிறுவனங்கள் எரிந்து சாம்பலாகி பொருளாதரம் நஷ்டமடைகிறது !!
திபாவளி பட்டாசு வெடிப்பதினால் எத்துனை உயிர்கள் பலியாகின்றன !!!
ஒட்டகம் குர்பாணி கொடுப்பதினால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று தெரிந்தும் ஒட்டகம் அறுக்கத் தடை போட்ட நீங்கள் (நீதிபதி) திபாவளி பட்டாசு வெடிப்பதினால் எவ்வளவு பெரிய தீங்கு மனித சமுதாயத்திற்க்கு ஏற்படுத்தும் திபாவளி பட்டாசு வெடிப்பை ஏன் தடை செய்யவில்லை ?
காரணம் திபாவளி பட்டாசு வெடிப்பது முஸ்லீம்கள் இல்லை என்பதை தவிர வேறொரு காரணமும் இருக்க வாய்ப்பு இல்லை என்பதே உண்மை ,
தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடித்ததில் தமிழகம் முழுவதும் நேற்று முதல் இதுவரை 243 இடங்களில் தீ விபத்து நடைபெற்றுள்ளதாகத் தமிழக தீயணைப்பு துறை அதிகாரி ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் 243 இடங்களில் தீ விபத்துக்கள் நடந்துள்ளது.
சென்னையில் மட்டும் இந்த ஆண்டு 21 இடங்களில் தீ விபத்து நடந்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு இன்று மட்டும் பட்டாசு வெடித்ததில் 10 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளைவிட இந்த ஆண்டு தீ விபத்துக்கள் அதிகம்.
தீபாவளிக்கு முன் போதிய அளவு மழை பெய்திருந்தால் இந்த அளவு தீ விபத்துக்கள் நடந்திருக்காது எனத் தெரிவித்துள்ளார்.
பட்டாசால் தீ விபத்து திருத்தணி, ஆத்தூர், சென்னை, அரியலூர், திருவெற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு வெடித்தபோது வீடுகள், கடைகள் ஆகியவற்றின் மீது பட்டுத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அரியலூரில் 5 க்கும் மேற்பட்ட குடிசைகளில் வெடி வெடித்ததால் பட்ட தீப்பரவியது, விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.
ஆத்தூரில் காயலாங்கடை மீது பட்ட வெடியால் தீப்பிடித்து, கடை முற்றிலும் எரிந்து சாம்பலானது

தடா ஜெ.ரஹிம்
கடை முற்றிலும் எரிந்து சாம்பலானது.
Image may contain: text

எது இரத்தம் ! எது தக்காளி சட்னி ?

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

உயர்நீதிமன்றம் ,எது இரத்தம் ! எது தக்காளி சட்னி ? என்பதை மாண்பமை உயர்நீதிமன்றம்தான் விளக்க வேண்டும்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றிச் சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பினார்கள் எனச் சிலர் கைது செய்யப்பட்டு அவர்கள் நீதிமன்றத்தை அணுகியபோது கருத்துரிமை என்ற பெயரில் தனிப்பட்ட நபர்களைப் பற்றி அவதூறு பரப்புவதை ஏற்க முடியாது என அக்டோபர்-25, 2016 ல் மாண்புமிகுசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நல்லது, வரவேற்கத் தக்க விஷயம்தான்.
ஆனால் தனிப்பட்ட ஒரு நபருக்கு இருக்கிற உரிமை, ஏன் ஊர்மக்களுக்கு இருக்கக் கூடாது? என்பதே பாமரனின் வேள்வி?
ஒரு எழுத்தாளர் பணம் பெற்றுக்கொண்டு கூலிக்காகக் குறிப்பிட்ட ஊர்மக்களைப் பற்றி, பெண்களைப் பற்றி அவதூறாக எழுதினார், வதந்தி பரப்பினார், அவர் ஆராய்ச்சி செய்து எழுதினேன் எனப் பொய் சொல்லுவார், ஆதாரம் இருக்கிறதா? என ஊர்மக்கள் கேட்டபோது, அந்த எழுத்தாளர் இல்லை நான் கற்பனையாகத் தானே எழுதினேன் என்பார்.
தனது தவறை உணர்ந்து அந்த எழுத்தாளரும் மன்னிப்பு கேட்டார். பின்பு சென்னை சென்றபிறகு அவருக்குக் கூலி கொடுத்தவர்களின் உதவியோடு நான் மன்னிப்பு கேட்கவில்லை, என்னை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்தார்கள் எனக்கூறினார்.
இப்படி பச்சோந்தி தனமாக, லட்சக்கணக்கான மக்களை, குறிப்பாகப் பெண்களைப் பற்றி ஆபாசமாகஎழுதிய அந்த எழுத்தாளரின் கருத்துரிமை, எழுத்துரிமையை பாதுகாக்க வேண்டும் என ஜூலை-5, 2016-ல் மாண்புமிகுசென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பாமர மக்களின் மனதில் எழும் ஐயப்பாடு இதுதான்!
கருத்துரிமை, எழுத்துரிமைக்கு அளவுகோல் என்ன?
அரசியல் பின்புலம் உள்ளவராக இருந்தால் அவரது கருத்துரிமை, எழுத்துரிமை பாதுகாக்கப்பட வேண்டு மா?
அவர் எவ்வளவு ஆபாசமாக அவதூறு கருத்துக்களை வன்முறையைத் தூண்டும்விதத்தில் எழுதினாலும், அதை எதிர்த்துப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அறவழியில் போராடினால் அது தவறா?
தனிநபரைப் பற்றி அவதூறாக எழுதினால், வதந்தி பரப்பினால் குற்றம் எனில், ஒரு சமுதாயப் பெண்களைப் பற்றி அவதூறாக எழுதினாலும், வதந்தி பரப்பினாலும் குற்றம்தானே?
ஏன் ஒரு கண்ணில் வெண்ணெய்? மறு கண்ணில் சுண்ணாம்பு?
ஆகவே யாருக்கு வந்தால் இரத்தம்? யாருக்கு வந்தால் தக்காளி சட்னி? என்பதை மாண்புமிகு உயர்நீதிமன்றம்தான் விளக்க வேண்டும்

Karthikeyan Gurusamy,

குஷ்வந்த் சிங்கின் உறுதிமொழி வருண் காந்தியின் புகைப்படங்கள்

 
வருண் காந்தியின் புகைப்படங்கள்பற்றிப் பல செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் இந்தியாவுக்கு இது புதிதல்ல. குஷ்வந்த் சிங்கின் சுயசரிதையில் இதைப்போலவே இன்னொரு விஷயத்தை எழுதியிருப்பார்.
1111 269449-varungandhi2
மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது, நேருவின் காலத்திலிருந்து காங்கிரஸில் அமைச்சராக இருந்துவந்த ஜெகஜீவன்ராம் துணைப்பிரதமராக இருந்தார். அப்போது ஜெகஜீவன் ராமின் 40 வயது மகனும் ஒரு கல்லூரி மாணவியும் அந்தரங்கமாகப் பல் காமசூத்ரா பொசிஷன்களில் எடுத்துக்கொண்ட ஃபோட்டோக்கள் குஷ்வந்த் சிங்கின் மேஜைக்கு வந்து சேர்கின்றன. அது, மேனகா காந்தி ஒரு பத்திரிக்கை துவங்கி நடத்திக்கொண்டிருந்த காலகட்டம். குஷ்வந்த் சிங்கே அப்பத்திரிக்கையின் பொறுப்புகளைக் கவனித்துக்கொண்டிருந்தார்.
இந்த ஃபோட்டோக்கள் இவருக்கு வந்த அன்று மாலை, ஜெகஜீவன்ராமிடமிருந்து இந்திராவுக்கு ஒரு தகவல் வருகிறது. ஃபோட்டோக்கள் பிரசுரிக்கப்படாமல் இருந்தால், மொரார்ஜியை விட்டுவிட்டு மீண்டும் காங்கிரஸுக்கே வந்துவிடுவதாக அவரது உறுதிமொழி. உடனே இந்திரா, முதலில் மொரார்ஜியை விட்டுவிட்டு வாருங்கள்; அதன்பின்பு ஃபோட்டோக்களைப் பிரசுரிக்காமல் விட்டுவிடுகிறேன் என்று பதில் அளிக்கிறார். இடையில், மேனகா காந்திக்கு அவசரம். ஃபோட்டோக்கள் வந்தே ஆக வேண்டும். அப்போதுதான் பத்திரிக்கை பிரபலம் ஆகும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறார்.
குஷ்வந்த் சிங், ஃபோட்டோக்களை இந்திராவின் ஆணைக்கிணங்க பிரசுரிக்கிறார். அத்தோடு ஜெகஜீவன்ராமின் முதல்வர் கனவு தகர்ந்து தவிடுபொடி ஆனது. இந்த ஃபோட்டோக்களில் எப்படியெல்லாம் டேப்களை உபயோகித்து உறுப்புகள் கஷ்டப்பட்டு மறைக்கப்பட்டன என்பதையும் குஷ்வந்த் விரிவாக விவரித்திருப்பார்.
குஷ்வந்த் சிங் இப்போது இருந்திருந்தால் கட்டாயம் இந்த இரண்டு சம்பவங்களைப்பற்றியும் ஒரு கட்டுரை எழுதிவிட்டு, இரண்டையுமே அவர் பாணியில் history repeats itself என நக்கலடித்திருப்பார் என்பதில் எனக்குத் துளிக்கூட சந்தேகம் இல்லை.
பாபு ஜெகஜீவன் ராமின் மகன் சம்ம்ந்தப்பட்ட அந்தரங்க ஃபோட்டோக்களைப் பற்றிய குஷ்வந்த் சிங்கின் நக்கல் இது.

Khushwant, Menaka & Jegjivan Ram
‘If the kamasutra had 64 poses, these photos most definitely had at least ten of them’.
Truth, love and a little malice- khushwant singh.
Karundhel Rajesh

சீன பொருட்களை வாங்காதீங்க தடா ஜெ.ரஹிம்

சீன பொருட்களை வாங்காதீங்க என பிரச்சாரம் செய்யும் RSS & BJP விசுவாசிகளே ஆண்மை இருந்தா முதலில் உங்க அரசு போட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்யுங்க பிறகு மக்களுக்கு சீன பொருட்களை வாங்காதீங்க என பிரச்சாரம் செய்யுங்க ….
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக, பீஜிங்கில் பிரதமர் மோடி, நிருபர்களிடம் பேசும்போது குறிப்பிட்டார். இருப்பினும், இந்திய-சீன மாநில, நகர ஒப்பந்தங்களையும் கணக்கில் கொள்கிறபோது, 24 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
அவற்றின் விவரம் வருமாறு:-
1. சீனாவில் செங்குடுவில் இந்திய துணைத் தூதரகம் அமைப்பதற்கும், சென்னையில் சீனாவின் துணைத்தூதரகம் ஏற்படுத்துவதற்கும் ஒப்பந்தம்.
2. தொழிற்கல்வி, திறன் மேம்பாடு தொடர்பாக திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் துறை அமைச்சகத்துக்கும், சீன மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
3. குஜராத்தில் ஆமதாபாத்/காந்தி நகரில் மகாத்மா காந்தி தேசிய திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் தேசிய பயிற்சி நிறுவனம் அமைப்பதில் ஒத்துழைப்புக்கான செயல்திட்ட ஒப்பந்தம்.
4. வர்த்தக பேச்சுகள் நடத்துவதில் ஆலோசனை வழிமுறைகளை ஏற்படுத்த இரு அரசுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
5. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கும், சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கும் இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
6. ரெயில்வே துறையில் ஒத்துழைப்பதற்கு இரு தரப்பு ரெயில்வே அமைச்சகங்களுக்கு இடையே செயல்திட்ட ஒப்பந்தம்.
7. கல்வி பரிமாற்ற திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
8. சுரங்கம், தாதுக்கள் துறையில் ஒத்துழைப்பதற்கு இரு தரப்பு ஒப்பந்தம்.
9. விண்வெளி ஒத்துழைப்பு எல்லை ஒப்பந்தம்.
10. இந்தியாவில் இருந்து உணவுப்பொருள் இறக்குமதிக்கான சுகாதாரத்துறை, பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் நெறிமுறைகள் ஒப்பந்தம்
11. டி.வி. ஒளிபரப்பில் இந்திய தொலைக்காட்சி, சீன மத்திய தொலைக்காட்சி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
12. சுற்றுலாத்துறையில் ஒத்துழைப்பதற்கு இரு தரப்பு சுற்றுலாத்துறை ஒப்பந்தம்
13. இந்திய-சீன சிந்தனையாளர் பேரவை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
14. நிதி ஆயோக்- சீன அபிவிருத்தி வளர்ச்சி மையத்துக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
15. நிலநடுக்க அறிவியல், நிலநடுக்க பொறியியல் துறைகளில் இரு அரசுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
16. பெருங்கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பருவநிலை மாற்றம், துருவ அறிவியல், பனிப்படலம் ஆகியவற்றில் ஒத்துழைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
17. புவி அறிவியலில் ஒத்துழைப்பதற்கான இரு தரப்பு ஒப்பந்தம்.
18. மாநிலங்கள், மாகாணங்களின் தலைவர்கள் மன்றங்களை அமைக்க இரு தரப்பு வெளியுறவுத்துறை அமைச்சரகங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
19. கலாசார உறவுகளுக்கான இந்திய கவுன்சில், சீனாவின் புதான் பல்கலைக்கழகம் இடையே காந்திய, இந்திய கல்வி மையம் அமைப்பது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம்.
20. கலாசார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் மற்றும் சீனாவின் யுனான் பல்கலைக்கழகம் இடையே யோகா கல்லூரி அமைப்பது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம்.
21. கர்நாடக அரசு, சீனாவின் சிச்சுவான் மாகாணம் இடையே ஒப்பந்தம்.
22. சென்னை, சீனாவின் சோங்கிங் நகரங்கள் இடையே ஒப்பந்தம்
23. ஐதராபாத்-சீனாவின் கிங்டோ இடையே ஒப்பந்தம்
24. அவுரங்காபாத்- சீனாவின் துன்ஹூவாங் இடையே ஒப்பந்தம்
தடா ஜெ.ரஹிம்
 

Image may contain: text
தடா ஜெ.ரஹிம்

தடா ஜெ.ரஹிம்

Vastu Ideas for home With a Zero-Dollar Budget | Learn best Vastu Ideas

Vastu Ideas FOR  Home & Office, Learn best Vastu Ideas

Dream house should be designed to attract the attention of everyone with a lot of people are interested in Initiative to create elegant designs show each room, Here you can learn best Vastu Ideas
Vastu Shasta is contained in shaping the role of the house. Home building in every direction, while noting that describes how to use the course

How You Can Get Vastu Ideas Home With a Zero-Dollar Budget

Vastu are keen to purchase housing, which will see the things that you have to construct the house
When you by housing to the north-east direction Plot-land Choosing the best is watching
South west facing direction of building plots are followed Vastu gives good reward.
Purchasing land should be square or rectangular
Do not choose to be in the interest of irregular sizes Home construct and layout of the house square, rectangular appearance should be
Location of the house to the north, to the east by the lower and slightly uphill to the south-west, the

Vastu Ideas FOR  Home
Vastu Ideas FOR  Home

better. Otherwise, the beneficial used to adapt accordingly Vastu Ideas for Home
* Construction work If you are using the water up to the man hole well to the north east is the best rig setup.
* When you start the construction of the eastern and northern coasts are more than empty space.
* Building materials necessary to build houses that are set God own south-west directions to choose.
* When you first wake up in the entrance area of ground-based, make the wall to start the mission.
* Window, doors and set against one another to be better.
* Setting the best recipes of the room, facing east in the Southeast Corner
Find your dream property in Chennai 
Find business in your location 

"விருகை வி என் கண்ணன்" அழைக்கிறார் மாபெரும் கண்டன பேரணி

 

 Virukai N Kannan
  “விருகை வி என் கண்ணன்”

 
“விருகை வி என் கண்ணன்” அழைக்கிறார் மாபெரும் கண்டன பேரணி,
தற்பொழுது ,அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள் பத்திரப்பதிவு தடை இருப்பதால் ரியல் எஸ்டேட்
தொழில் பெரும் பின்னடைவை சந்தித்து உள்ளது,
எப்பொழுது நிலத்தின் மதிப்பை விட “அரசின்” வழிகாட்டி மதிப்பு மதிப்பு அதிகமானதோ , அப்பொழுது இருந்தே நிலவணிகம் தண்னுடைய சரிவை சந்திக்க ஆரம்பித்து விட்டது ,
போதாதா குறைக்கு! நீதிமன்ற உத்திரவு மேலும் பல சிக்கலை உண்டு பண்ணி விட்டது
நீதி மன்ற உத்தரவுக்கு பின் தற்பொழுது வரை அரசுக்கு மட்டும் ரூபாய் 850 கோடிவரை நஷ்டம்!
இத்தொழிலை நம்பி பலர் இருக்கின்றார்கள்
,புரோகிதர் முதல் ,சித்தாள் வரை,
இன்று அனைவரும் வேலை வாய்ப்பினை இழந்து உள்ளார்கள்,
இதனுடன் 74 வகையான தொழிலார்களின் ,குடும்பங்களையும் ,பொதுமக்களையும் ,வேதனைக்கு உள்ளாகி இருக்கின்றார்கள்
இதுகுறித்து
“இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர் லேண்ட் டெவெலபேர்ஸ் நிலத்தரகர் சங்கத்தின்”
“தலைவர் விருகை வி என் கண்ணன்”
கூறியதாவது,வரும் 19/10/2016 அன்று மாபெரும் கண்டன பேரணி நடக்க விருக்கிறது
ஆகவே அணைத்து தொழிலார்களும் ஒன்றிணைந்து இப்பேரணியில் கலந்து கொண்டு அரசின் கவனத்தை ஈர்க்க வருமாறு அன்போடு கேட்டு கொள்ள படுகிறார்கள்
“தலைமை” “விருகை வி என் கண்ணன்”
முன்னிலை “Ponneri K சரவணன்”
மற்றும் சீமான், தா வெள்ளையன் ,தொல் திருமாவளவன், Tvs மணி, மேலும் அணைத்து அமைப்பளர்களும் கலந்து கொள்கின்றார்கள் ,
பட்டா மனைகளை பதிவு செய்ய கூடாது.என உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு முதல் நபராகவும்,இறுதியாகவும், தமிழக அரசு தான் விளக்கமளித்து இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டுமே தவிர, வெறும் நீதிமன்றங்களின் இடைக்கால உத்தரவிற்கு நீதிமன்றங்கள் மூலமாகவே எடுக்கப்படும் முயற்சிகள் முழு தீர்வு ஆகாது. அப்படியென்றால் தமிழக அரசு தான் சரியான விளக்கங்கள் அளிக்கவேண்டும். அப்போதுதான் இந்த இடைக்கால உத்தரவுக்கு தீர்வு காண முடியும்.
இதற்காகத்தான் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் இந்த பொதுப்பிரச்னைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொது மக்களும்,ரியல் எஸ்டேட் வர்த்தகர்களும், முகவர்களும், தொழிலாளர்களும் பங்குபெறும் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
இந்தஅழைக்கிறார் மாபெரும் கண்டன பேரணி போராட்டத்துக்கு அனைத்து கட்சி தலைவர்களும் வருகைதந்து சிறப்பிக்க உள்ளார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அனைவரும் வாரீர்……வாரீர்……வாரீர்……

இப்படிக்கு
“விருகை வி என் கண்ணன்”

முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலை நிச்சயம் ஒருநாள் சாத்தியமே

முஸ்லீம் சிறைவாசிகள்
தாம்பரம் த.அ.ஜாஹிர் ஹுசைன்

அல் உம்மா தலைவர்

"ஹாஜி S.A. பாஷாபாய்"
“ஹாஜி S.A. பாஷாபாய்”

“ஹாஜி S.A. பாஷாபாய்”
இன்று 6.மனி நேர பரோலில் தனது இல்லதுக்கு காலை வருகை புரிந்தார் மாலை 5.மனிக்கு மீன்டும் சிறை
35.ஆன்டுகள் தொடர்ந்து சிறைவாசம் அதில் ஒரு சில ஆண்டுகள்தான் தனது குடும்பதுடன் இருந்து உள்ளார் தொழில் அதிபர் ரியல் ஸ்டேட் தொழிலா என்று நன்றாக இருந்த இவர் ஏன் சிறைக்கு சென்றார்? அன்று அவருடன் பாட்னர்களாக இருந்தவர்கள் இன்று கோவையில் கோடீஸ்வரர்கள் ஆனால் இவரோ சிறையில்
74.வயது ஆகிவிட்டது 65.ஆண்டு வயதானல் சிறை சட்டபடி சிறைதுறையே இவரை விடுவிக்கலாம் ஆனால் இவர் ஒரு முஸ்லீம் அதனால் சிறை சட்டம் இவருக்கு விடுதலை மருக்கிரது
நெல்சன் மன்டேலா தனது சமுதாயத்தின் விடுதலைக்கு 25.ஆண்டுகள் சிறையில் இருந்ததர்க்கு இந்த உலகம் அவரை கொன்டாடியது ஆனால் நமது சகோதரர்கள் 35, 25, 20, ஆண்டுகள் என்று தொடர் சிறைவாசம் நாம் இவர்களை மரந்து வாழ்ந்து கொன்டு இருக்கிரோம்
ஏன் நமது சமுதாயம் இவரை விடுவிக்க முடியாதா? இவருக்காகவும் மற்றும் சிறையில் இருக்கும் மற்ற சகோதரர்களுக்கும் துவா செய்வோம்.
Royal Siddiq “முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலை நிச்சயம் ஒருநாள் சாத்தியமே”
எப்போது “எப்படி? 20 ஆண்டுகளுக்கு மேலாக போராடும் சமுதாய அமைப்புகளும் கட்சிகளும் தனது இதயத்தில் கையை வைத்து கூறட்டும் நாங்கள் விடுதலை ஒன்றை மட்டுமே நோக்கமாக வைத்து போராடினோம் என்று கூற முடியாது! ஏன் என்றால் இங்கு சிறையை காரணம் காட்டி நடத்தப்பட்ட அத்துனை போராட்டங்கலும் அடையாள போராட்டம்” வருமான போராட்டம்”சீட்டு’ஓட்டு போராட்டம்”யாரையும் குறை கூற வேண்டும் என்ரோ அல்லது யாரையும் குறிப்பிட்டோ இந்த பிண்னோட்டத்தை பார்க்க வேண்டாம் ஏன் என்றால் இதுதான் எதார்த்தமான உன்மை”சிறைவாசிகள் விடுதலை பெற்று விட்டால் இங்கு நிறைய நபர்களுக்கு வேளை இருக்காது’ஆதலால் என்னமே எந்த தலைவர்களின் பதவிஅசையும் தான் என்ற ஆனவமும் நாம் ஒன்று சேர்ந்து ஓரணியில் புரட்சி முழக்கம் இட முடியாமல் உள்ளது”எல்லா தொன்டனும் உன்மையாக உனர்வாகதான் வீதியில் இரங்கி கோசம் இடுகிறான்”இந்த மண்டைகணம் பிடித்த தலைவர்களால் தான் இவலவுநாள் இட்ட குறலும் விடுதலையும் கேள்விகுறியாக உள்ளது’நீ எந்த நாசமாபோன அமைப்புல வேணாலும் இருந்துக்கோ ஆனா ஒரே ஒருநாள் ஒரே அணியில் ஒரேஇறைவண் தந்த அறிவை பயண்படுத்தி அதர்காண சூல்நிலையில் சிந்தித்து குறல் தந்துபார் இன்ஷா அல்லா விடுதலை சாத்தியமே ஆனால் இதர்க்கு போராளி தலைவர்கள் வருவார்கள் உன்னை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரி தலைவர்கள் வரமாட்டார்கள்”
ஆதலால் ஒற்றுமை என்னும் கயிறை எந்த பேனர்களில் இருந்தாலும் தேர்தல் களத்திலும் போரட்ட களத்திலுமாவது நாம் பற்றி பிடிக்கும் வரை இந்த அம்பேத்கர் ஐயா சட்டத்தை நாம் பயன் படுத்த முடியாது நாம் முறையாக பயன்படுத்தும் வரை அந்த தியாகிகள் தியாகிகளாக மட்டும் தான் இருப்பார்கள்!!!
யார் மணதையும் காயப்படுத்தி இருந்தால் இறைவனுக்காக என்னை மன்னியுங்கள்”
நாமலும் கண்டனத்தை பதிவு செய்வோம்”
தமிழக அரசே”அம்மா அரசே”
10,ஆண்டுகள் சிறைவாசம் முடித்த அரசியல் சிறைவாசி”ஆயுள் சிறைவாசிகள் உள்ளிட்ட

அத்துனை சிறைவாசிகளையும் மதபேதம் இனபேதம் பார்க்காமல் உடனடியாக விடுதலை செய்!!
Royal Siddiq

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது

 

அர்ஜுன் சம்பத்
அர்ஜுன் சம்பத்

14725708_314410015594696_6381411322933880367_n
1
ஆயுத பூஜையில் பூஜை செய்யப்பட்ட துப்பாக்கிகள் என் மகன் ரைஃபில் க்ளப்பில் பயிற்சிக்கு பயன்படுத்துவது-அர்ஜன் சம்பத்.பேட்டி அளித்ததை அடுத்து
இந்தியதேசிய லீக்கட்சி தலைவர் தடா.ஜெ. அப்துர் ரஹீம் தலைமையில் இன்று மீண்டும் காவல்துறை டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டது
அந்த மனுவில் அர்ஜூன் சம்பத் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்ததை வரவேற்கும் அதே நேரத்தில்

கோவை 1989 ஆம் ஆண்டு ஹக்கீம் கொலை மற்றும் 1997 நவம்பர் கலவரத்தின்போது 4 இஸ்லாமியர்களை உயிரோடு எரித்து கொலை ஆகிய 5 கொலைகளில் நேரடி தொடர்புடைய இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் சில தினங்களுக்கு முன்பு எஸ்.எல்.ஆர். துப்பாக்கியை வைத்து ஆயுத பூஜை கொண்டாடி சிக்கினார்…
இதைப்பற்றி தடா.ஜெ.அப்துல் ரஹீம் அவர்கள் தலைமையிலான இந்திய தேசிய லீக் கட்சியினர் காவல்துறையில் புகார் அளித்தனர்……
அதன் அடிப்படையில் அவர் போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் அப்போது அந்த துப்பாக்கிகள் தனது மகன் ரைஃபில் க்ளப் துப்பாக்கி பயிற்சி பள்ளியில் பயன்படுத்தும் துப்பாக்கி என்று ஊடகம் மூலம் வாக்குமூலம் வழங்கியிருந்தார் ……
எனவே கோவை காவல்துறை எஸ்.எல்.ஆர் ரக துப்பாக்கிகளை வைத்து பயிற்சி வழங்கும் சட்டத்திற்க்கு விரோதமான அந்த பயிற்சி பள்ளி எங்குள்ளது என்பதனை கண்டறிந்து அந்த பள்ளியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்…..
மேலும் சட்ட விரோதமான ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்ட அர்ஜுன் சம்பத்துடைய மகன் மற்றும் அவரோடு இன்னும் எத்தனைபேர் பயிற்சி எடுக்கின்றார்கள் என்பதை கண்டறிந்து அனைவரையும் தீவிரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் (UAPA) கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்……
கோவையில் மிகப்பெரிய கலவரத்தை தூண்ட முயற்சித்து வரும் அர்ஜுன் சம்பத்தை 1997 கலவரத்தின் போது காவல்துறை காப்பாற்றியதை போல் மீண்டும் காப்பாற்ற முயற்சிக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது
எனவே இதுபோன்ற பயங்கரவாதிகளை கைது செய்து இந்து மக்கள் கட்சியை தடைசெய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் இன்று காவல்துறை தலைமை இயக்குநரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது..
இவண்:
இந்திய தேசிய லீக் கட்சி
ஊடகப் பிரிவு.

அர்ஜுன் சம்பத்
2
அர்ஜூன் சம்பத் மீண்டும் பல்டி …
என் மகன் துப்பாக்கி சுடும் பயிற்சி பள்ளியில் சேர்ந்து (ரைபிள் கிளப்) பயிற்சி பெற்று வருகிறான். அந்த பயிற்சிக்கு பயன்படுத்தும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுக்கு பூஜை நடைபெற்றது.
திரு.அர்ஜூன் சம்பத் அவர்களே எந்த துப்பாக்கி சுடும் பயிற்சி பள்ளியில் SLR போன்ற அதிநவீன துப்பாக்கிகளை பயன் படுத்தி துப்பாக்கி சுடும் பயிற்ச்சி கொடுக்கின்றார்கள் என உங்களால் சொல்ல முடியுமா …?

காவல்துறை இந்து மக்கள் கட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க தவறினால் ?
இந்திய தேசிய லீக் கட்சி மிக பெரிய போராட்டம் நடத்துவோம் இன்ஷாஅல்லாஹ் …

3
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்கள் மீது IPC 153 (a) மத வேற்றுமை உணர்வை தூண்டும் விதத்தில் செயல் படுதல் 25 (1) (a) ஆயுத சட்டம் ஆகிய பிரிவுகளில்கோவை சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர் …
இந்திய தேசிய லீக் கட்சியின் கோரிக்கையே பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்தது SLR போன்ற அதிநவீன துப்பாக்கி எங்கிருந்து வாங்கினார் என்பது காவல்துறை விசாரித்து அர்ஜுன் சம்பத்தை கைது செய்ய வேண்டுமென்பதே ..
காவல்துறை அர்ஜுன் சம்பத்தை காப்பாற்ற கைது செய்யாமல் கண்துடைப்பு வழக்கு போட்டுள்ளது இதை இந்திய தேசிய லீக் கட்சி வண்மையாக கண்டிக்கின்றது ..

அதிநவீன SLR துப்பாக்கி அர்ஜுன் சம்பத் அவர்களுக்கு எப்படி கிடைத்தது அந்து துப்பாக்கியை காவல்துறை கைப்பறியதா ? இல்லையா ? தனி நபர்கள் இது போன்ற அதிநவீன துப்பாக்கி வைத்துக்கொள்ளலாமா ? என்ற கேள்வி இந்திய தேசிய லீக் கட்சிக்கு எழுகின்றது …
சில ஊடகங்களில் அர்ஜுன் சம்பத்தின் பாதுக்காப்புக்கு நின்ற காவலர் வைத்திருந்த துப்பாக்கி என செய்தி வருகின்றது அது உண்மையா ? அல்லது அர்ஜுன் சாம்பத்தை காப்பாற்ற சில அதிகாரிகள் பொய்யான தகவல்களை ஊடகங்களுக்கு கொடுத்துள்ளனரா ?
எமக்கு ஏற்பட்டுள்ள பல சந்தேகங்களை புகாராக தமிழக காவல்துறை இயக்குனர் அவர்களை இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பாக 13-10-2016 வியாழக்கிழமை காலை 11 மணிக்கு சந்தித்து இது சம்மந்தமாக புகார் அளிக்க உள்ளோம் இன்ஷாஅல்லாஹ் …
அன்புடன்
தடா ஜெ.அப்துல் ரஹிம்
இந்திய தேசிய லீக் கட்சி
மாநில தலைவர் ..
அர்ஜுன் சம்பத்

இதெல்லாம் பாஜக வுக்கு சகஜமப்பா

தினமணி பத்திரிகையின் கார்ட்டூனிஸ்ட் மதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி நிலைகெட்ட மனிதரென்றும், தீவிரவாத பிரச்சனை தீரும் வரை அண்டை நாட்டிலேயே இருக்கட்டும் என்றும் தினமணியில் கார்ட்டூன் என்கிற பெயரில் ஒரு நாலாந்திர தாக்குதலை தொடுத்துள்ளார். இதேபோன்று வேறுசிலரும் கூட இத்தகைய பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த சொன்னதற்காகத்தான் இத்தனை வன்மத்தோடும், அநாகரிகத்தோடும் இப்படி எழுதுகின்றனர்.
பாஜக உடைத்தால் மண் சட்டி
———————————
வாஜ்பாய் பிரதமராக இருந்த போது பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கு முன்னர் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் நடந்ததேயில்லையா? இன்னும் சொல்லப்போனால் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக பாஜக பாகிஸ்தானுடன் போர் தொடுப்பதன் மூலம் தான் அதற்கு புத்தி கற்றுக் கொடுக்க முடியும் என்று பேசி வந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு பேச்சுவார்த்தை என்பதை அவர்கள் தங்களது கொள்கை என அறிவித்தார்கள். ஒருகட்டத்தில் வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கே போய் வந்தார் வாஜ்பாய். ஜம்மு – காஷ்மீர் உள்ளிட்டு எல்லா பிரச்சனை பற்றியும் பாகிஸ்தானோடு பேச்சுவார்த்தை நடத்துவது என்று முடிவு செய்தார்கள். 2004ஆம் ஆண்டில் முஷாரப்போடு ஆக்ராவில் பேச்சுவார்த்தை நடத்தி கிட்டத்தட்ட ஒரு ஒப்பந்தம் வரும் நிலையில் இருந்தது. வாஜ்பாய் காலத்தில் ‘ஆபரேசன் பராக்கிரமா’ என்று சொல்லி ஏறத்தாழ ஓராண்டிற்கு எல்லை முழுவதும் ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு போதும் போர் நடைபெறவில்லை.கார்கில் போருக்கு பின்னரும் கூட இந்தியா – பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதையெல்லாம் இவர்கள் ராஜதந்திரம் என்று பேசிக் கொண்டார்கள். எனவே எந்தவொரு அரசாங்கத்தின் முதல் முன்னுரிமையாகவும், கடைசி முன்னுரிமையாகவும் பேச்சுவார்த்தை என்பதுதான் இருந்திருக்கிறது. ஆனால், பாஜக ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒன்று பேசுவதையும், எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒன்று பேசுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளது. பாஜகவின் ஆதரவாளர்களுக்கும் இது பொருந்தும். பாஜக பேச்சுவார்த்தை நடத்தினால் அது ராஜதந்திரம், தேசபக்தி. அதே விஷயத்தை மற்றவர்கள் முன்மொழிந்தால் அது தேசத் துரோகம். இது தான் அவர்களின் வரையறையாக உள்ளது.
*
‘சேலை டிப்ளமசி’
___________________
முந்தைய பாஜக ஆட்சிக் காலத்தில் தான் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடந்தது. 2014ல் மோடி ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தனது முடிசூட்டு விழாவிற்கு பாகிஸ்தான் பிரதமரை அழைத்திருந்தார். இதற்கு முன் யாரும் செய்யாதது இது என்றும், இது பாகிஸ்தான் குறித்த இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையில் பெரிய மாற்றத்தை கொண்டு வரப்போகிறது என்றும் பாஜக ஆதரவாளர்கள் பீற்றிக் கொண்டு அலைந்தார்கள்.2015 ஆண்டு டிசம்பர் மாதம் ஆப்கானிஸ்தான் போயிருந்த மோடி ஏதோ அடுத்த வீட்டை எட்டிப்பார்ப்பதைப்போல திடீரென பாகிஸ்தானுக்கு சென்றார். நவாஸ் ஷெரீப்பிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லப்போனதாக பத்திரிகைகள் கொண்டாடின. இவர் அவரைக் கட்டிப்பிடிக்க, அவர் இவருடைய தாயாருக்கு சேலை பரிசளிக்க, இந்தியாவின் ஊடகங்கள் காஷ்மீர் பிரச்சனை, எல்லை தாண்டிய பயங்கரவாதம், தீவிரவாத பிரச்சனை, பயங்கரவாத பிரச்சனை அத்தனையும் முடிவுக்கு வந்துவிடும் என்பது போல எழுதித்தள்ளினார்கள்.பாகிஸ்தானுக்கு இந்தியப் பிரதமர் போவதற்கு முன்பாக 2014ம் ஆண்டு ஜூலை தொடங்கி 2015 டிசம்பர் வரை எல்லையில் தீவிரவாதிகளாலும், பாகிஸ்தான் படையினராலும் 32 ராணுவ வீரர்களும், பொதுமக்களும் கொல்லப்பட்டனர். இத்தனைக்கும் பிறகு தான், பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு வாழ்த்துச் சொல்வதற்காக ஆப்கானிஸ்தானிலிருந்து அப்படியே பறந்து சென்று கட்டிப்பிடித்து வந்தார். நவாஸ் ஷெரீப், மோடியின் தாயாருக்கு சேலை பரிசாக கொடுத்தனுப்பியதை இந்திய பத்திரிகைகள் கொண்டாடி மகிழ்ந்தன. அந்த சேலைதான் சமாதானக் கொடி என்பது போல மதி போன்றவர்கள் பீற்றினார்கள்.
*
பயங்கரவாதிகளோடு கொஞ்சியது யார்?
________________________________________________
ஒரு நாட்டோடு பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று சொன்னாலே அடுத்த நாட்டிற்கு போ என்று சொல்லும் மோடி வகையறா, எல்லைக்கப்பால் இருந்து தீவிரவாதிகளாலும், ராணுவத்தினராலும், நமது வீரர்கள். நமது பொதுமக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த இந்த காலத்தில்தான் மோடி பாகிஸ்தானுக்கு போனார் என்பதை மறந்து விடுகிறது. இதை இதர கட்சிகள் யாரும் கேள்வி கேட்கவில்லை.இதற்கிடையே மோடி அரசாங்கம் பதவியேற்ற பிறகு, 2 மாத காலத்திற்குள் வேத் பிரதாப் வைத்திக் என்பவர் லாகூருக்கு சென்று ஜூலை மாதம் 2ம் தேதியன்று ஜமாத் – உத் தவாவின் தலைவரை சந்தித்தார். மேற்படி வேத் பிரதாப் வைத்திக் ஆர்எஸ்எஸ்க்கும் பிஜேபிக்கும் மிகவும் நெருக்கமானவர். இந்தியாவின் தேசியப்பாதுகாப்பு ஆலோசகராக உள்ள அஜித்தோவல், பிரதமரின் தலைமை செயலாளராக உள்ள நிருபேந்திர மிஸ்ரா, கூடுதல் தலைமை செயலாளராக உள்ள பி.கே மிஸ்ரா, வேத் பிரதாப் வைத்திக், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தத்துவவாதிகளில் ஒருவராக இருக்கும் குருமூர்த்தி- இவர்கள் அனைவரும் விவேகானந்தா இன்டர்நேசனல் டிரஸ்ட் என்கிற ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பின் இயக்குநர்கள். எனவே, இவர்களுக்கு இடையே உள்ள பிணைப்பு என்ன என்பது விளங்கும்.
வைத்திக்கும் ஹபிசும்
————————–
லாகூரில் வைத்திக் சந்தித்த ஹபிஸ் சையது யாரென்று புரிந்து கொள்வது மிக முக்கியமானது. 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் மும்பையில் 12 இடத்தில் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதல் 4 நாட்கள் நீடித்தது. சில இடங்களில் துப்பாக்கிச்சூடு; சில இடங்களில் குண்டு வெடிப்புகளும் நடைபெற்றன. இந்த தாக்குதல்களில் 164 பேர் கொல்லப்பட்டார்கள். குறைந்தபட்சம் 308 பேர் காயமடைந்தார்கள். இந்த தாக்குதலை திட்டமிட்டுக் கொடுத்த தீவிரவாதிதான் ஹபிஸ் சையது. இந்த ஹபிஸ் சையதைத்தான் வேத் பிரதாப் வைத்திக் சந்தித்தார். இந்த சந்திப்பை ஆர்எஸ்எஸ்-ன் தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ் குமார் வரவேற்றார். வைத்திக் ஒரு தேசபக்தர் என்றும், அவர் மிகச்சிறந்த விழுமியங்களைக் கொண்டவர் என்றும், இந்தியாவின் நன்மைக்காகத்தான் அவர் ஹபிஸ் சையத்தை சந்தித்திருப்பார் என்றும் ஆர்எஸ்எஸ் கூறியது. அதாவது ஏற்கனவே தீவிரவாத நடவடிக்கையை கட்டமைத்து விட்டு, பல இந்தியர்களை கொன்றவர்களோடு ஆர்எஸ்எஸ்க்கு நெருக்கமானவர் சந்தித்தால் அதை தேசபக்த செயலாக அவர்கள் பேசுவார்கள். அது இந்தியாவுக்கு உதவும் என்று கருதுவார்கள். அதை நாடே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் பாகிஸ்தானோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று சீத்தாராம் யெச்சூரி சொன்னால் அவர் அடுத்த நாட்டுக்கு போக வேண்டும் என்று தினமணி மதி ‘ஃபட்வா’ போடுகிறார். ஒரு கட்சியின் தலைவரைப் பற்றி விமர்சிக்கும் போது இருக்க வேண்டிய நாகரிகமோ, ஒரு பத்திரிகையின் கார்ட்டூனிஸ்டுக்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச நாகரிகமோ இன்றி, மதி இப்படிப் பேசுகிறார்.
*
அப்போ நாடாளுமன்றம் இப்போ உரி..!
_________________________________________________
_
கடந்த காலத்தில் மும்பை நகரத்தின் மீது தாக்குதல் நடந்த போது ‘இந்தியாவின் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படாத அரசு’ என்று காங்கிரஸ் கூட்டணி அரசை பாஜக, சங் பரிவார் அமைப்புகள் கடுமையாக குற்றம்சாட்டினர்.ஆனால் வாஜ்பாய் ஆட்சிப்பொறுப்பில் இருந்த போதுதான் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது; மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பதான்கோட் ராணுவ முகாம் மீதும், உரி ராணுவ முகாம் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டது. ஆனால் பாஜக இதுகுறித்து வரும் விமர்சனங்களைப் புறந்தள்ளுகிறது. ‘‘நம்முடைய வீரர்கள் இறந்திருக்கிறார்கள்; இந்த நேரத்தில் அரசாங்கத்தை விமர்சிப்பது தேச விரோதச்செயல்’’ என்று கட்டளை இடுகிறது.2008ம் ஆண்டு மும்பை தாக்குதலின்போது இப்படி அரசை விமர்சித்தவர்களை தேச விரோதிகள் என்று சொல்லலாமா? அப்படி ஒரு தேச விரோதியையா இந்தியாவின் பிரதமராக வைத்திருக்கிறோம்? எந்தவித நியாயமுமற்ற நிலையில், இந்தியாவுக்கு போர் வெறியை உருவாக்குவதன் மூலம் உள்நாட்டிற்குள் ஏற்பட்டிருக்கும் அதிருப்திகளை சமாளிப்பதற்காக இந்தியாவின் பெருமைகளையும், கவுரவத்தையும், பாதுகாப்பையும் அடமானம் வைக்கிற அரசாங்கமாக மோடி அரசாங்கம் இருக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை கொன்று விட்டதாகவும், இதற்கு முன்பு இப்படி எல்லாம் நடந்தது இல்லை என்றும் இவர்கள் கூறித் திரிகிறார்கள்.
இதெல்லாம் பாஜகவுக்கு சகஜமப்பா…!
———————————————-
மன்மோகன் சிங் காலத்தில் இதேபோன்று 3 முறை நடந்ததாக அப்போது ராணுவத்தில் இருந்த அதிகாரிகள் சொல்கிறார்கள். எல்லைக்கு அப்பால் இருந்து தாக்குதல் அதிகமாகிற இதுபோன்ற காலங்களில் இந்திய ராணுவம் கடந்த காலத்திலும் இத்தகைய பதிலடியை கொடுத்திருக்கிறது. ஆனால் இந்த காலத்தில் அத்தகைய பதிலடி கொடுக்கப்பட்டதா என்பதே கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.5-10-2016 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை எல்லைப்பகுதியில் போய் விசாரித்ததாகவும், லேசான தாக்குதல் நடந்தது என்றும், அரசாங்கம் சொல்வது போல அழிக்கப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை அத்தனை அதிகமாக இருக்காது என்றும் இதை பார்த்தவர்கள் சொன்னதாகவும் எழுதியுள்ளது. ஆனால், அரசாங்கம் இந்த தாக்குதல் பற்றிய எந்த ஒரு காணொலி காட்சியையும் வெளியிடவில்லை. ஐ.நா. பொதுச்செயலாளரின் ஊடக உதவியாளரும் இத்தகைய தாக்குதல் நடந்திருக்காது என்று சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.
*
பொய்யும், புரட்டும்
_____________________
இந்த நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் முழுவதும் ‘‘எல்லை தாண்டி எதிரிகளை அழித்த மாவீரன் மோடிக்கு வாக்களியுங்கள்’’ என்று வாசகங்கள் நிரப்பப்பட்டிருக்கிறது. இந்தியாவின் கவுரவமும், பெருமையும், பாதுகாப்பும் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை; உத்தரப்பிரதேச தேர்தல் ஒன்றே தனது நோக்கமென்று மோடி அரசாங்கம் செயல்படுகிறது.தேசத்தின் பாதுகாப்பு நெருக்கடியில் இருக்கிறது. எனவே அரசு குறித்த எந்த விமர்சனத்தையும் வைக்காதீர்கள் என்று சொல்பவர் யாரும் தேசப் பாதுகாப்பு பிரச்சனையை வாக்குகளை பெறுவதற்கு பயன்படுத்தக் கூடாது என்று சொல்லவில்லை. உண்மையில், எல்லைக்கு அப்பால் பயங்கரவாதிகள் முகாமின் மீது இத்தகைய தாக்குதல் நடந்ததா? என்று கூட தெரியாத நிலையில் அத்தகைய தாக்குதல் நடந்து விட்டதாகவும், அதனாலேயே தீவிரவாதிகள் முறியடிக்கப்பட்டதாகவும், அதன் காரணமாகவே மோடி பெரிய வீரர் என்றும், அதற்காகவே உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் சொல்வது வெட்கக்கேடானது. ராணுவத்தின் தியாகத்தை தங்களுடைய குறுகிய தேர்தல் வெற்றிக்காகப் பயன்படுத்துகிற மிகக் கேவலமான செயல்.இந்தப் பின்னணியில்தான் எல்லையில் தீவிரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சரிதான்; ஆனால் அதேசமயம் இதை ஒரு போராக மாற்றிவிடக்கூடாது என்று சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார். இந்த காலத்தில் பாகிஸ்தானின் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் தன்னோடு தொடர்பு கொண்டதாகவும் இரண்டு தரப்பும் பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகவும் சொல்லியிருக்கிறார். இந்திய பாதுகாப்பு அமைச்சகமோ பிரதமர் அலுவலகமோ பாதுகாப்பு ஆலோசகரோ இந்த செய்தியை இந்த நிமிடம் வரை மறுக்கவுமில்லை, ஒப்புக்கொள்ளவுமில்லை.ஒருபக்கம் பாகிஸ்தானோடு பேச்சுவார்த்தை நடத்துவதும், இன்னொரு பக்கம்அதைப்பற்றிய விவரங்களை வெளியிடாமல் ரகசியமாக வைத்திருப்பதும், அதேசமயம் இத்தகைய பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுமென்று சொல்லும்போது, சொல்பவர்களை தேசத்துரோகிகளைப் போல சித்தரிப்பதும், நேர்மையற்ற அணுகுமுறை. இத்தகைய அணுகுமுறையை ஆர்.எஸ்.எஸ்.சும், பாஜகவும் தங்கள் கொள்கையாகக் கொண்டுள்ளனர்.மதி ஏன் அதை கொண்டாடுகிறார் என்று தெரியவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தான் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கச் சொல்கிறது. அதனால் யெச்சூரி நிலைகெட்ட மனிதர்; அவர் வெளிநாடு போக வேண்டும், என்றெல்லாம் பேசுவது தேசநலனுக்கு உதவாது. வேண்டுமானால் மதிகள் ஆதரிக்கும் மோடிகளின் தேர்தல் வெற்றிக்கு அது உதவக்கூடும். ஆனால் இந்தியாவுக்கோ, இந்திய மக்களுக்கோ எந்த நன்மைகளையும் விளைவித்து விடாது.2008ம் ஆண்டு பொக்ரான் அணுகுண்டு சோதனைக்கு முன்பு வரை பாரம்பரிய போர் முறையில் பாகிஸ்தான் இந்தியாவோடு மோத முடியாத நிலையிலேஇருந்தது. ஆனால் பொக்ரான் அணு சோதனைக்கு பிறகு பாகிஸ்தானும் தன் கையில் அணுகுண்டுகளை வைத்திருக்கிறது. இது 2008க்கு முன்னர் இந்தியாவுக்கு இருந்த போர் வலிமையை இல்லாமல் செய்துவிட்டது என்பதே உண்மை. மதி போன்றவர்கள் வாக்குகளை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட ஒரு கூட்டத்துக்கு துணை போவதன் மூலம் இந்தியாவுக்கு நன்மை ஏதும் செய்யவில்லை. அவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் சேவை செய்து விட்டுப் போகட்டும், மாறாக, இந்திய மக்களின் வாழ்வோடும், இந்தியாவின் பாதுகாப்போடும் இந்திய மக்களின் உயிரோடும் விளையாடாமல் இருக்கட்டும்!
*
– தோழர் க.கனகராஜ்
மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)
# தீக்கதிர், 6-10-2016
Image may contain: 1 person , text
இதெல்லாம் பாஜக வுக்கு சகஜமப்பா

தெரிந்து கொள்வோம் தந்தை பெரியார்

தெரிந்து கொள்வோம்
தெரிந்து கொள்வோம்

தெரிந்து கொள்வோம்

தெரிந்து கொள்வோம் #####
.
.
1. “ 34,433 நாட்கள் (94 வயது வரை) வாழ்ந்த தந்தைபெரியார் 15,12,000 கிலோ மீட்டர்கள் பயணம் செய்துள்ளார்! 21,400 மணிநேரம் சொற்பொழி வாற்றியுள்ளார் .”
.
.
2. “ தமிழில் எழுத்து சீர்திருத்தம் கொண்டு வந்தவர்பெரியார்! ணா,லை என 75 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலாக எழுத ஆரம்பித்தவர் அவரே.”
.
.
3. “ அண்ணா காலமாகும் வரை திமுகவிற்கு தலைவர் அறிவிக்கப் படவேயில்லை .”
.
.
4. “ அண்ணா தனது ஆட்சியின் போது தந்தை பெரியாரின் கொள்கையான சுயமரியாதை திருமணங்கள் செல்லுபடியாகும் அரசாணையை கொண்டுவந்தார் .”
.
.
5. “ ராமசாமி என்பதே இயற்பெயர் பெண் உரிமைக்கு போராடியதால் பெண்கள் அமைப்பினர் சூட்டிய பட்டமே பெரியார்! அதுவே பெயராகிப் போனது .”
.
.
இது போன்ற சின்ன சின்ன தகவல்களை தினமும் பெற
.
லைக் → வகுப்பறை

தெரிந்து கொள்வோம்  தந்தை

பதட்டமான சூழலில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி எதற்காக

பதட்டமான சூழலில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி எதற்காக
பதட்டமான சூழலில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி எதற்காக

பதட்டமான தமிழ்நாட்டு சூழலில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி எதற்காக?
——————–
கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் படுகொலை தொடர்பாக கோவையில் ‘இந்து பரிவாள அமைப்புகள்’ கலவரத்தை உருவாக்கினர்.
#இந்து_முன்னணி_தலைவர்_காடேஸ்வரா_சுப்ரமணி, ‘தமிழ்நாட்டை குஜராத்தாக மாற்ற வைத்து விடாதீர்கள்’ என மிரட்டல் விடுத்தார்.
#இஸ்லாமியர்கள் தான் இந்து முன்னணி பிரமுகரை கொன்றார்கள்’ என்று பலமான குற்றச்சாட்டுகளை வைத்தார்கள். சர்வதேச சதியும் சசிகுமார் படுகொலையில் உள்ளதாக ஆவேசப்பட்டார்கள். ஆனால் சசிகுமாரை யார் கொன்றது? எதற்காக கொன்றார்கள்?
கோவை இந்து முன்னணியின் சக நிர்வாகி #ஆனந்த்என்பவருக்கும் #சசிகுமார் படுகொலையில் தொடர்பு இருந்தது அம்பலமானதால் தன்னை காவல்துறை கைது செய்து விடும் என்று பயந்து தீக்குளித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஆனந்திடம் மரண வாக்குமூலம் வாங்கப்பட்ட போது, ‘போலிஸ் தன்னை கைது செய்துவிடும்’ என்ற பயத்தில் தீக்குளித்ததாக குறிப்பிட்டார். அதன் பின் சில மணி நேரங்களில் ஆனந்த் இறந்தார்.
#பாஜக வைச் சேர்ந்தவரும் ஆர்.எஸ்.எஸ் அபிமானியுமான#கல்ராணராமன் என்பவர், “நாங்கள் காவல்துறைக்கு கிஸ்தியும் கொடுப்பதில்லை. மாட்டுக்கறி பிரியாணியும் போடுவதில்லை. அதனால்தான் ஆனந்தை பிடிக்க தீவிரம் காட்டினார்கள்” என்று குற்றம்சாட்டியுள்ளார். இவ்வாறாக இந்து பரிவாள அமைப்புகள் தங்கள் தவறுகளை மறைப்பதற்காக தங்களுக்குள் இணக்கமாக இருப்பதைப் போல் நாடகம் போடுகின்றன.
#இந்து_கட்சி யைச் சேர்ந்த #செந்தில் என்பவர் செப்டம்பர் 20இல், ‘நேற்று, இன்று, நாளை’ என்று ஒரு பதிவுடன் 3 படங்களை இணைத்திருந்தார்.
‘நேற்று’ என்பதில் செப்டம்பர் 16 இல், #இந்து_மக்கள்_கட்சிதென்மண்டல தலைவர் வே.தர்மாவின் கார் கொளுத்தப்பட்ட புகைப்படம்.
‘இன்று’ என்பதில் செப்டம்பர் 19 இல், #இந்து_முன்னனி சங்கர் மீதான தாக்குதல் புகைப்படம்.
‘நாளை’ என்பதில் கோவை இந்து முன்னணி சசிகுமார் புகைப்படம். செந்தில் பதிவு செய்த நாள் செப்டம்பர் 20.#சசிகுமார்_படுகொலை செய்யப்பட்ட நாள் செப்டம்பர் 23.
இந்து முன்னணியில் உள்ள சசிகுமார் செப்டம்பர் 23 இல் கொல்லப்படுவார் என்னும் தகவல் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த செந்திலுக்கு செப்டம்ப ர் 20ந் தேதியே எப்படி தெரிந்திருந்தது?
#இந்து_சங்க_பரிவாளங்கள் எதற்காக இப்படி திட்டமிட்ட கலவரங்களை தூண்டினார்கள்?
ராம்குமார் சிறைக்குள் கொல்லப்பட்டது செப்டம்பர் 19இல்.#ராம்குமார்_படுகொலை திசை திருப்பப்பட வேண்டும் என்பதில் இந்து பரிவாள அமைப்புகள் தீவிரமாக இயங்கின.
சுவாதி படுகொலை முழுக்க இந்து சங்க பரிவாளங்கள் கூட்டணியும் பா.ஜ.கவின் அரசியல் ஆதரவும் காணப்படுகின்றன. தமிழ்நாட்டுக்குள் #மதக்கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்பதில் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தீவிரம் காட்டின.#சுவாதி மதமாற்றம் ஏற்காத சுவாதியின் குடும்பத்தினருக்கு உதவியது ஆர்.எஸ்.எஸ் என்ற இந்து தீவிரவாத அமைப்புதான்.
#சுவாதி_படுகொலை செய்யப்பட்ட மறுநாளில் அவளை கொன்றவன் இஸ்லாமிய இளைஞன் என்று முதலில் எழுதியது#திருச்செந்தூர் ‘வினோத் இந்து நேஷனலிஸ்ட்’ ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர். அவர் எழுதிய தகவல்களை #ஓய்ஜிமகேந்திரன்உள்ளீட்ட பார்ப்பன பனியாக்கள் அச்சு எடுத்தன. ராம்குமார் சிறைக்குள் படுகொலை செய்ததற்கும் இதே ஆர்.எஸ்.எஸ் இயக்கமே காரணம். ஜெயலலிதாவுக்கு நடந்தது என்ன? என்பதை இன்னும் வெளியில் தெரியாத அளவு மர்மங்களால் சூழ்ந்திருப்பதற்கு காரணமும் இதே ஆர்.எஸ்.எஸ் இந்து பரிவாள அமைப்புகள் தான்.
இத்தனை பதட்டங்களோடு தமிழ்நாடு இன்று மர்ம பிரதேசமாக மாற்றப்பட்டிருக்கும் நிலையில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது ஏன்?
“தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற முயலும் இந்து முன்னணியை தடை செய்” என்று #மக்கள்_நலக்_கூட்டணிகள்போராடிய போது 2.500 பேர்களை கைது செய்த காவல்துறை, நீதித்துறை, தமிழக அரசு “ஆர்.எஸ்.எஸ் இந்து பயங்கரவாத இயக்கத்தை டவுசர் போடாதே. முழு பேண்ட் போட்டு ஊர்வலத்தை நடத்து” என அனுமதி கொடுப்பது மதக் கலவரத்தை தமிழ்நாட்டில் ஏற்படுத்துவதற்காகவா?
#மதவெறுப்புவாத_அரசியல் அரசு அதிகாரமிக்க நபர்களிடம் இருந்தால் நாடு கலவர பூமியாகவும் இரத்த ஆறு ஓடும் சாக்கடையாகவும் தான் இருக்க முடியுமென்பதை இவர்கள் அறியாதவர்களா?
எதற்காக இஸ்லாமிய வெறுப்பின் மீது இந்துக்களையே கொன்றொழிக்க முயலும் அரசியலை இந்துக்களுக்கு எதிராக இருக்கும் இந்து அமைப்புகள் செய்கின்றன?
[பிகு: பதிவிற்கு தொடர்புடைய படங்கள் நீக்கப்பட்டுள்ளன என்பதால் இம்முறை பதிவின் கீழ் உள்ள பின்னூட்டங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன]
#தமிழச்சி
09/10/2016

சூத்திரர்கள் மாக்கள் பார்ப்பான்கள் மாமக்கள்

சூத்திரர்கள் மாக்கள் பார்ப்பான்கள் மாமக்கள்

சூத்திரர்கள் மாக்கள். பார்ப்பான்கள் மாமக்கள்!  பிராமணன்’ கொலை செய்தால், உச்சிக் குடுமியிலிருந்து, மயிரை மட்டும் வெட்டினால் போதும்
இது மனுதர்மம் கூறும் நீதிகளில் ஒன்று. இதுதான் பல நூறு ஆணடுகளாக நடைமுறைப்படுத்தப்பட்ட இந்து சட்டம். ஆங்கிலேயர்கள் இந்தியாவில் அரசியல் ஆதிக்கத்தை நிறுவிய பிறகும் 1772-ஆம் ஆண்டு வரை கொலை, கொள்ளை, திருட்டு போன்ற குற்றங்களுக்கு மனுதர்மத்தின் அடிப்படையிலேயே நீதிமன்றங்களில் தண்டனைகள் வழங்கப்பட்டன. லண்டனில் இருந்த உச்சநீதிமன்றமான ‘பிரிவி கவுன்சில்’ வரை இந்தியர்களின் வழக்கில் இதுதான் பின்பற்றப்பட்டது

                                             “Cialis No Prescription” மனுதர்மம்

வெள்ளைக்கார நீதிபதிகளுக்கு மனு தர்மத்திலிருந்து இதை எல்லாம் எடுத்துக்கூற நீதிமன்றங்களிலேயே பார்ப்பனர்கள் நியமிக்கப்பட்டார்கள். பிறகு, இந்த மனுதர்மத்தை நீதிபதிகளே நேரடியாக அறிந்திட 1801-இல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசாங்கமே ஹென்றி தாமஸ் கோல் புரூச் என்பவரை நியமித்து, ‘மனுதர்மத்தை’ ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது
1860-ஆம் ஆண்டில்தான் கிரிமினல் குற்றங்களுக்கு மனுதர்ம அடிப்படையில் தண்டனை வழங்குவது நிறுத்தப்பட்டது. ஆனால், குடும்பம், மதம், வாரிசுரிமை, சாதி, சொத்துப் பிரச்சினை போன்ற சிவில் வழக்குகளில் ‘மனுதர்ம’த்தின் அடிப்படையிலேயே தீர்ப்புகள் வழங்கப்பட்டன.
இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின், 1950-ஆம் ஆண்டு அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகுதான் ‘மனுதர்மத்துக்கு பதிலாக சிவில் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கும் முறை வந்தது

பார்ப்பான்களைத் தவிர மற்ற சாதிகள் கல்வி கற்க கூடாது

“பார்ப்பான்களைத் தவிர மற்ற சாதிகள் கல்வி கற்க கூடாது” என்ற பார்ப்பான்களின் ஒடுக்குமுறையை ஆங்கிலேயர்கள் 1850-க்கு பிறகு மாற்ற முற்பட்டு 1910-களில் தான் அதை நடைமுறைக்கு கொண்டு வரமுடிந்திருக்கிறது
எனவே தான் பெரியாரும் அம்பேத்கரும் பார்ப்பான்கள் தங்கள் சுயநலத்திற்காக மட்டுமே எழுதி வைத்துக் கொண்ட மனு தர்மத்தை கொளுத்தினார்கள். சிவில் சட்டங்களில் சீர்திருத்தங்கள் கொண்டு வர போராடினார்கள்….
அப்பாடா! நம்ப காலத்தில் இந்த மனுதர்மம் சட்டம் நடைமுறையில் இல்லை என்று இளைய தலைமுறையினர் பெருமூச்சி விடுகிறீர்களா?
உங்களை எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். இப்போதைய ‘நவீன பார்ப்பான்கள் மனுநீதி’யை நவீனமாக்கி விட்டார்கள்

எச்.ராஜா

‘சூத்திரன்’ கொலை செய்தால் சிறை தண்டனை கொடு

‘பார்ப்பான் கொலை செய்தால் ஒரு சூத்திரனை பிடித்து சிறை தண்டனை கொடு.’
சுவாதி படுகொலையில் நடந்து கொண்டிருக்கும் அரசியலும் இதுதான். சுவாதி பார்ப்பனப் பெண்தான். ஆனால் இஸ்லாமியனை காதலித்து திருமணம் செய்துவிட்டாள். அப்பா ஆர்.எஸ்.எஸ் அபிமானி. சித்தப்பா ஒரு இந்து அமைப்பின் தீவிர அரசியல் செயற்பாட்டாளர். கருப்பு முருகானந்தத்திற்கு நெருக்கமானவர். விளைவு….
சுவாதி கொல்லப்பட்ட மறுநாளே ‘பிலால் என்னும் இஸ்லாமியன் தான் கொன்றான்’ என்று எழுதிய ‘வினோத் இந்து நேஷனலிஸ்ட்’ என்பவர் பார்ப்பான் பா.ஜ.கட்சியைச் சேர்ந்த இவர் திருச்செந்தூர் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் உறுப்பினர்  இவர் எழுதிய அவதூறு தகவலை தான் ஓய்.ஜி.மகேந்திரன், எச்.ராஜா, ராம்கி போன்ற பார்ப்பான்கள் பரவலாக்கினர்
இணையதளங்களில் எதிர் விமர்சனங்கள் தீவிரம் அடையவே ‘வினோத் இந்து நேஷனலிஸ்ட்’ தன்னுடைய பதிவை நீக்கிவிட்டு தன்னுடைய பேஸ்புக் பக்கத்தின் பெயரையும் மாற்றினார்.
சுவாதி கொல்லப்பட்ட இடத்தில் பிலால் கதறி அழுது கொண்டிருந்தார். அவரை ஏன் இந்த பார்ப்பான் கொலையாளியாக அடையாளப்படுத்தினார்? சுவாதிக்கும் பிலாலுக்கும் எந்த வகையில் தொடர்பு இருந்தது என்பது இவருக்கு எப்படி தெரிந்தது?
சுவாதி தன்னை போன்று பார்ப்பன குடும்பத்தை சேர்ந்தவர் என்று தெரிந்திருந்தும் உண்மையான குற்றவாளியை கண்டு பிடியுங்கள் என்று கூறாமல் பிலாலை இழுத்துவிட்டது ஏன்?
சுவாதியின் அப்பா, “தன் மகளை கொன்றது யார் என கண்டுபிடித்து தண்டியுங்கள்” என புகார் அளிக்காதது ஏன்?

                             நமது விவாதம் என்னவென்  றால்

இப்படி பல கேள்விகள் நீண்டு கொண்டே இருக்கின்றன  நமது விவாதம் என்னவென்றால் சுவாதியின் அப்பா, சித்தப்பா மற்றும் பா.ஜ.க / இந்து அமைப்புகள் சில பார்ப்பன அரசியல்வாதிகளின் பின்னணியில் நடைபெற்ற சுவாதி படுகொலையில் குற்றவாளியாக ராம்குமாரை அடையாளப்படுத்தியதோடு அவர் பேசிவிடாமல் இருக்க கழுத்தையும் அறுத்து அந்த சூத்திர இளைஞனை சிறைக்குள் தள்ளும் நவீன மனுவாதிகளாக இருக்கிறார்களே இவர்களை ‘சிவில் சட்டம்’ என்ன செய்தது?
திலீபன் மகேந்திரன், சுவாதி கொலை தொடர்பாக அவதூறு பதிவு எழுதியதாக கருப்பு முருகானந்தம் என்பவரால் புகார் அளிக்கப்பட்டு இன்று சிறைக்குள் மனநல நோயாளிகளை அடைத்து வைத்திருக்கும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளாரே அந்த நிலை ஏன் ‘வினோத் இந்து நேஷனலிஸ்ட்’, ஓய்.ஜி.மகேந்திரன், எச்.ராஜா, ராம்கி போன்ற அவதூறு பதிவு எழுதிய பார்ப்பான்களுக்கு இல்லை?
இதற்கான அனைத்து ஆதாரங்கள் இருந்தும் இவர்கள் மீது புகார் கொடுக்கப்படுமானால் அதை நடைமுறைப்படுத்த இந்த அரசும் காவல்துறையும் முன்வருமா?
இதுதான் இந்து சமூகத்தின் சிக்கல். இங்குதான் ஜனநாயகம் இருப்பதாக, மக்களாட்சி நடப்பதாக நம்மை நம்ப வைக்கும் இந்து அரசியல் / இந்து மனுசட்டம் முயற்சிக்கிறது.

                         இதன் வெளிப்பாடுதான்

“சூத்திரர்கள் மாக்கள். பார்ப்பான்கள் மாமக்கள்.”

                           இது இந்துக்கள் வாழும் நாட்டின் இந்து நீதி

மனுநீதி பெரியார், அம்பேத்கர் காலங்களில் மட்டும் எரியூட்டப்பட்டவை அல்ல. பார்ப்பான்களால் அது புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே எரியூட்ட முயலும் ரோகித்து வேமுலா போன்ற இளைஞர்களையும் எரித்து அநீதியை நீதி என்றே பறைசாற்றும் சாத்தானின் இந்து வேதம் மனுநீதி!
தமிழச்சி
30/08/2016
‘வினோத் இந்து நேஷனலிஸ்ட்’ குறித்த தரவுகள்
“சூத்திரர்கள் மாக்கள். பார்ப்பான்கள் மாமக்கள்.”

"சூத்திரர்கள் மாக்கள். பார்ப்பான்கள் மாமக்கள்."
“சூத்திரர்கள் மாக்கள். பார்ப்பான்கள் மாமக்கள்.”

இட்டிலி யை அறிமுகப்படுத்திய விசய நகர அரசு..

 

இட்டிலி
இட்டிலி

இட்டிலி யை அறிமுகப்படுத்திய விசய நகர அரசு..
விசய நகர பேரரசு .. என்ற ஒற்றை சொல் தான் தாய்த் தமிழகத்தின் அனைத்து வகையான கலப்பிற்க்கும் மூல காரணமாகும்.,
குறிப்பாக மொழிக் கலப்பு,15 ம் நூற்றாண்டில் தான் தெலுங்கு மொழியும்,சமஸ்கிருத வட மொழிகளும் தமிழகத்தில் ஊடுருவின அது வரை வேறு எந்த மொழியும் இல்லாமல் தமிழ் நிலத்தில் தமிழ் மட்டுமே கோலேச்சிய நிலையில் சற்று சருக்கல் ஏற்பட விசய நகர பேரரசின் படையெடுப்பே முக்கிய காரணமாகும் ..
மேலும் குறிப்பாக தெலுங்கை தாய் மொழியாக கொண்ட நாயுடு.,ரெட்டி,அருந்ததியர்கள் மற்றும் குஜராத்தை பூர்வீக மாக கொண்ட சௌராஸ்ட்ரா க்கள் தமிழகத்தில் குடியேற விசய நகர பேரரசே காரணம்,பார்ப்பணிய ஆதிக்கம் தமிழக இந்து மதத்தில் தலை தூக்கியதும் இக் காலத்தில் தான்..
இது மட்டுமல்ல உணவு பழக்கவழக்கமும் பெரிய மாற்றமடைந்தது..நாம் இன்று தவிர்க்க முடியாத இட்டிலி ..தோசை.,அதிரசம் போன்றவைகள் நாம் 15ம் நூற்றாண்டில் தான் உண்ண ஆரம்பித்தோம் ,அதை நமக்கு அறிமுகப்படுத்தியவர்கள் வி.ந பேரரசே.இவை பற்றிய குறிப்புக்கள் விசய நகர ஆட்சி கால கல்வெட்டுகளின் மூலம் அறிய முடிகிறது..
ஆனால் பக்தி இயக்கத்தின் மூலம் தமிழர் உணவு வகையில் பெரும் மாற்றம் நிகழ்ந்தது. .ஆம் லட்டு ( லட்டுவம்) எள்ளுருண்டை,அப்பம், போன்றவை பெரியாழ்வார் தமது பாடல்களில் குறிப்பிடுகிறார் So நம் முன்னோர்கள் 6 ம் நூற்றாண்டிலே லட்டு சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள். ஆக 14 நூற்றாண்டு பழைமையான ஸ்வீட் அயிட்டம் தான் இன்றைக்கும் கண்டினியுட்டி ஆகிறது.# இளம்பரிதி யின் படித்ததில் பிடித்தது #

வாஸ்து முறைப்படி வீட்டிற்கு தலைவாசல் அமைப்பது எப்படி

வாஸ்து முறைப்படி வீட்டிற்கு தலைவாசல் அமைப்பது எப்படி

-வடக்கு திசையின் உச்ச பகுதியில் தலைவாசல் மற்றும் ஜன்னல்கள் அமைப்பது பற்றி வாஸ்து சாஸ்திரம் சொல்வதை பார்ப்போம்.
வடக்கு திசையில் கிழக்குமேற்காக கட்டப்பட்ட சுவரின் மொத்த நீளத்தை இரண்டு சரி பாதியாக பிரிக்கவேண்டும்.
அவ்வாறு பிரிக்கும்போது ஒரு பாதி கிழக்கு திசையிலும், மற்றொரு பாதி மேற்கு திசையிலும் அமையும்.
* கிழக்கு திசையில் இருக்கும் பாதி பகுதியானது வடக்கு திசையின் உச்ச பகுதியாக கருதப்படும்.
* தலைவாசல் உள்ளிட்ட மற்ற வாசல்கள் மற்றும் ஜன்னல்கள் ஆகியவற்றை அந்த பகுதியில் அமைத்தால் சுப பலன்கள் அதிகரிக்கும் என்று  சாஸ்திரம் சொல்கிறது

வடக்கு திசையின் உச்ச பகுதியில் தலைவாசல் மற்றும் ஜன்னல்கள் அமைப்பது பற்றி வாஸ்து சாஸ்திரம் சொல்வதை பார்ப்போம்.
* வடக்கு திசையில் கிழக்குமேற்காக கட்டப்பட்ட சுவரின் மொத்த நீளத்தை இரண்டு சரி பாதியாக பிரிக்கவேண்டும்.
* அவ்வாறு பிரிக்கும்போது ஒரு பாதி கிழக்கு திசையிலும், மற்றொரு பாதி மேற்கு திசையிலும் அமையும்.
* கிழக்கு திசையில் இருக்கும் பாதி பகுதியானது வடக்கு திசையின் உச்ச பகுதியாக கருதப்படும்.
* தலைவாசல் உள்ளிட்ட மற்ற வாசல்கள் மற்றும் ஜன்னல்கள் ஆகியவற்றை அந்த பகுதியில் அமைத்தால் சுப பலன்கள் அதிகரிக்கும் என்று  சாஸ்திரம் சொல்கிறது

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left