சீன பொருட்களை வாங்காதீங்க என பிரச்சாரம் செய்யும் RSS & BJP விசுவாசிகளே ஆண்மை இருந்தா முதலில் உங்க அரசு போட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்யுங்க பிறகு மக்களுக்கு சீன பொருட்களை வாங்காதீங்க என பிரச்சாரம் செய்யுங்க ….
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக, பீஜிங்கில் பிரதமர் மோடி, நிருபர்களிடம் பேசும்போது குறிப்பிட்டார். இருப்பினும், இந்திய-சீன மாநில, நகர ஒப்பந்தங்களையும் கணக்கில் கொள்கிறபோது, 24 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
அவற்றின் விவரம் வருமாறு:-
1. சீனாவில் செங்குடுவில் இந்திய துணைத் தூதரகம் அமைப்பதற்கும், சென்னையில் சீனாவின் துணைத்தூதரகம் ஏற்படுத்துவதற்கும் ஒப்பந்தம்.
2. தொழிற்கல்வி, திறன் மேம்பாடு தொடர்பாக திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் துறை அமைச்சகத்துக்கும், சீன மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
3. குஜராத்தில் ஆமதாபாத்/காந்தி நகரில் மகாத்மா காந்தி தேசிய திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் தேசிய பயிற்சி நிறுவனம் அமைப்பதில் ஒத்துழைப்புக்கான செயல்திட்ட ஒப்பந்தம்.
4. வர்த்தக பேச்சுகள் நடத்துவதில் ஆலோசனை வழிமுறைகளை ஏற்படுத்த இரு அரசுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
5. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கும், சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கும் இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
6. ரெயில்வே துறையில் ஒத்துழைப்பதற்கு இரு தரப்பு ரெயில்வே அமைச்சகங்களுக்கு இடையே செயல்திட்ட ஒப்பந்தம்.
7. கல்வி பரிமாற்ற திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
8. சுரங்கம், தாதுக்கள் துறையில் ஒத்துழைப்பதற்கு இரு தரப்பு ஒப்பந்தம்.
9. விண்வெளி ஒத்துழைப்பு எல்லை ஒப்பந்தம்.
10. இந்தியாவில் இருந்து உணவுப்பொருள் இறக்குமதிக்கான சுகாதாரத்துறை, பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் நெறிமுறைகள் ஒப்பந்தம்
11. டி.வி. ஒளிபரப்பில் இந்திய தொலைக்காட்சி, சீன மத்திய தொலைக்காட்சி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
12. சுற்றுலாத்துறையில் ஒத்துழைப்பதற்கு இரு தரப்பு சுற்றுலாத்துறை ஒப்பந்தம்
13. இந்திய-சீன சிந்தனையாளர் பேரவை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
14. நிதி ஆயோக்- சீன அபிவிருத்தி வளர்ச்சி மையத்துக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
15. நிலநடுக்க அறிவியல், நிலநடுக்க பொறியியல் துறைகளில் இரு அரசுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
16. பெருங்கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பருவநிலை மாற்றம், துருவ அறிவியல், பனிப்படலம் ஆகியவற்றில் ஒத்துழைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
17. புவி அறிவியலில் ஒத்துழைப்பதற்கான இரு தரப்பு ஒப்பந்தம்.
18. மாநிலங்கள், மாகாணங்களின் தலைவர்கள் மன்றங்களை அமைக்க இரு தரப்பு வெளியுறவுத்துறை அமைச்சரகங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
19. கலாசார உறவுகளுக்கான இந்திய கவுன்சில், சீனாவின் புதான் பல்கலைக்கழகம் இடையே காந்திய, இந்திய கல்வி மையம் அமைப்பது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம்.
20. கலாசார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் மற்றும் சீனாவின் யுனான் பல்கலைக்கழகம் இடையே யோகா கல்லூரி அமைப்பது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம்.
21. கர்நாடக அரசு, சீனாவின் சிச்சுவான் மாகாணம் இடையே ஒப்பந்தம்.
22. சென்னை, சீனாவின் சோங்கிங் நகரங்கள் இடையே ஒப்பந்தம்
23. ஐதராபாத்-சீனாவின் கிங்டோ இடையே ஒப்பந்தம்
24. அவுரங்காபாத்- சீனாவின் துன்ஹூவாங் இடையே ஒப்பந்தம்
தடா ஜெ.ரஹிம்
தடா ஜெ.ரஹிம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக