உயர்நீதிமன்றம் ,எது இரத்தம் ! எது தக்காளி சட்னி ? என்பதை மாண்பமை உயர்நீதிமன்றம்தான் விளக்க வேண்டும்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றிச் சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பினார்கள் எனச் சிலர் கைது செய்யப்பட்டு அவர்கள் நீதிமன்றத்தை அணுகியபோது கருத்துரிமை என்ற பெயரில் தனிப்பட்ட நபர்களைப் பற்றி அவதூறு பரப்புவதை ஏற்க முடியாது என அக்டோபர்-25, 2016 ல் மாண்புமிகுசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நல்லது, வரவேற்கத் தக்க விஷயம்தான்.
ஆனால் தனிப்பட்ட ஒரு நபருக்கு இருக்கிற உரிமை, ஏன் ஊர்மக்களுக்கு இருக்கக் கூடாது? என்பதே பாமரனின் வேள்வி?
ஒரு எழுத்தாளர் பணம் பெற்றுக்கொண்டு கூலிக்காகக் குறிப்பிட்ட ஊர்மக்களைப் பற்றி, பெண்களைப் பற்றி அவதூறாக எழுதினார், வதந்தி பரப்பினார், அவர் ஆராய்ச்சி செய்து எழுதினேன் எனப் பொய் சொல்லுவார், ஆதாரம் இருக்கிறதா? என ஊர்மக்கள் கேட்டபோது, அந்த எழுத்தாளர் இல்லை நான் கற்பனையாகத் தானே எழுதினேன் என்பார்.
தனது தவறை உணர்ந்து அந்த எழுத்தாளரும் மன்னிப்பு கேட்டார். பின்பு சென்னை சென்றபிறகு அவருக்குக் கூலி கொடுத்தவர்களின் உதவியோடு நான் மன்னிப்பு கேட்கவில்லை, என்னை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்தார்கள் எனக்கூறினார்.
இப்படி பச்சோந்தி தனமாக, லட்சக்கணக்கான மக்களை, குறிப்பாகப் பெண்களைப் பற்றி ஆபாசமாகஎழுதிய அந்த எழுத்தாளரின் கருத்துரிமை, எழுத்துரிமையை பாதுகாக்க வேண்டும் என ஜூலை-5, 2016-ல் மாண்புமிகுசென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பாமர மக்களின் மனதில் எழும் ஐயப்பாடு இதுதான்!
கருத்துரிமை, எழுத்துரிமைக்கு அளவுகோல் என்ன?
அரசியல் பின்புலம் உள்ளவராக இருந்தால் அவரது கருத்துரிமை, எழுத்துரிமை பாதுகாக்கப்பட வேண்டு மா?
அவர் எவ்வளவு ஆபாசமாக அவதூறு கருத்துக்களை வன்முறையைத் தூண்டும்விதத்தில் எழுதினாலும், அதை எதிர்த்துப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அறவழியில் போராடினால் அது தவறா?
தனிநபரைப் பற்றி அவதூறாக எழுதினால், வதந்தி பரப்பினால் குற்றம் எனில், ஒரு சமுதாயப் பெண்களைப் பற்றி அவதூறாக எழுதினாலும், வதந்தி பரப்பினாலும் குற்றம்தானே?
ஏன் ஒரு கண்ணில் வெண்ணெய்? மறு கண்ணில் சுண்ணாம்பு?
ஆகவே யாருக்கு வந்தால் இரத்தம்? யாருக்கு வந்தால் தக்காளி சட்னி? என்பதை மாண்புமிகு உயர்நீதிமன்றம்தான் விளக்க வேண்டும்
இந்த வலைப்பதிவில் தேடு
எது இரத்தம் ! எது தக்காளி சட்னி ?
Karthikeyan Gurusamy,
Tags
Tamil Political news
H I'm Syed Abutahir from Chennai, Addicted to Learn & teaching SEO
எது இரத்தம் ! எது தக்காளி சட்னி ?
Reviewed by Tamilan Abutahir
on
4:18 AM
Rating: 5
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக