திபாவளி பட்டாசு வெடிப்பதினால் காற்று எவ்வளவு மாசுபடுகின்றது, ஒட்டகத்தின் மீது அனுதாபம் காட்டி ஒட்டகம் அறுக்கத் தடை போட்ட சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியே,
சுற்று சூழல்மீதும், வெடி விபத்தால் சாகும் மனிதர்கள்மீது ஏன் இரக்கம் காட்ட மனம் வரவில்லை ?
பட்டாசு வெடிப்பதினால் காற்று எவ்வளவு மாசுபடுகின்றது !
பட்டாசு வெடிப்பதினால் எத்துனை தொழில் நிறுவனங்கள் எரிந்து சாம்பலாகி பொருளாதரம் நஷ்டமடைகிறது !!
திபாவளி பட்டாசு வெடிப்பதினால் எத்துனை உயிர்கள் பலியாகின்றன !!!
ஒட்டகம் குர்பாணி கொடுப்பதினால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று தெரிந்தும் ஒட்டகம் அறுக்கத் தடை போட்ட நீங்கள் (நீதிபதி) திபாவளி பட்டாசு வெடிப்பதினால் எவ்வளவு பெரிய தீங்கு மனித சமுதாயத்திற்க்கு ஏற்படுத்தும் திபாவளி பட்டாசு வெடிப்பை ஏன் தடை செய்யவில்லை ?
காரணம் திபாவளி பட்டாசு வெடிப்பது முஸ்லீம்கள் இல்லை என்பதை தவிர வேறொரு காரணமும் இருக்க வாய்ப்பு இல்லை என்பதே உண்மை ,
தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடித்ததில் தமிழகம் முழுவதும் நேற்று முதல் இதுவரை 243 இடங்களில் தீ விபத்து நடைபெற்றுள்ளதாகத் தமிழக தீயணைப்பு துறை அதிகாரி ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் 243 இடங்களில் தீ விபத்துக்கள் நடந்துள்ளது.
சென்னையில் மட்டும் இந்த ஆண்டு 21 இடங்களில் தீ விபத்து நடந்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு இன்று மட்டும் பட்டாசு வெடித்ததில் 10 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளைவிட இந்த ஆண்டு தீ விபத்துக்கள் அதிகம்.
தீபாவளிக்கு முன் போதிய அளவு மழை பெய்திருந்தால் இந்த அளவு தீ விபத்துக்கள் நடந்திருக்காது எனத் தெரிவித்துள்ளார்.
பட்டாசால் தீ விபத்து திருத்தணி, ஆத்தூர், சென்னை, அரியலூர், திருவெற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு வெடித்தபோது வீடுகள், கடைகள் ஆகியவற்றின் மீது பட்டுத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அரியலூரில் 5 க்கும் மேற்பட்ட குடிசைகளில் வெடி வெடித்ததால் பட்ட தீப்பரவியது, விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.
ஆத்தூரில் காயலாங்கடை மீது பட்ட வெடியால் தீப்பிடித்து, கடை முற்றிலும் எரிந்து சாம்பலானது
தடா ஜெ.ரஹிம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக