பதட்டமான தமிழ்நாட்டு சூழலில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி எதற்காக?
——————–
கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் படுகொலை தொடர்பாக கோவையில் ‘இந்து பரிவாள அமைப்புகள்’ கலவரத்தை உருவாக்கினர்.
#இந்து_முன்னணி_தலைவர்_காடேஸ்வரா_சுப்ரமணி, ‘தமிழ்நாட்டை குஜராத்தாக மாற்ற வைத்து விடாதீர்கள்’ என மிரட்டல் விடுத்தார்.
‘#இஸ்லாமியர்கள் தான் இந்து முன்னணி பிரமுகரை கொன்றார்கள்’ என்று பலமான குற்றச்சாட்டுகளை வைத்தார்கள். சர்வதேச சதியும் சசிகுமார் படுகொலையில் உள்ளதாக ஆவேசப்பட்டார்கள். ஆனால் சசிகுமாரை யார் கொன்றது? எதற்காக கொன்றார்கள்?
கோவை இந்து முன்னணியின் சக நிர்வாகி #ஆனந்த்என்பவருக்கும் #சசிகுமார் படுகொலையில் தொடர்பு இருந்தது அம்பலமானதால் தன்னை காவல்துறை கைது செய்து விடும் என்று பயந்து தீக்குளித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஆனந்திடம் மரண வாக்குமூலம் வாங்கப்பட்ட போது, ‘போலிஸ் தன்னை கைது செய்துவிடும்’ என்ற பயத்தில் தீக்குளித்ததாக குறிப்பிட்டார். அதன் பின் சில மணி நேரங்களில் ஆனந்த் இறந்தார்.
#பாஜக வைச் சேர்ந்தவரும் ஆர்.எஸ்.எஸ் அபிமானியுமான#கல்ராணராமன் என்பவர், “நாங்கள் காவல்துறைக்கு கிஸ்தியும் கொடுப்பதில்லை. மாட்டுக்கறி பிரியாணியும் போடுவதில்லை. அதனால்தான் ஆனந்தை பிடிக்க தீவிரம் காட்டினார்கள்” என்று குற்றம்சாட்டியுள்ளார். இவ்வாறாக இந்து பரிவாள அமைப்புகள் தங்கள் தவறுகளை மறைப்பதற்காக தங்களுக்குள் இணக்கமாக இருப்பதைப் போல் நாடகம் போடுகின்றன.
#இந்து_கட்சி யைச் சேர்ந்த #செந்தில் என்பவர் செப்டம்பர் 20இல், ‘நேற்று, இன்று, நாளை’ என்று ஒரு பதிவுடன் 3 படங்களை இணைத்திருந்தார்.
‘நேற்று’ என்பதில் செப்டம்பர் 16 இல், #இந்து_மக்கள்_கட்சிதென்மண்டல தலைவர் வே.தர்மாவின் கார் கொளுத்தப்பட்ட புகைப்படம்.
‘இன்று’ என்பதில் செப்டம்பர் 19 இல், #இந்து_முன்னனி சங்கர் மீதான தாக்குதல் புகைப்படம்.
‘நாளை’ என்பதில் கோவை இந்து முன்னணி சசிகுமார் புகைப்படம். செந்தில் பதிவு செய்த நாள் செப்டம்பர் 20.#சசிகுமார்_படுகொலை செய்யப்பட்ட நாள் செப்டம்பர் 23.
இந்து முன்னணியில் உள்ள சசிகுமார் செப்டம்பர் 23 இல் கொல்லப்படுவார் என்னும் தகவல் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த செந்திலுக்கு செப்டம்ப ர் 20ந் தேதியே எப்படி தெரிந்திருந்தது?
#இந்து_சங்க_பரிவாளங்கள் எதற்காக இப்படி திட்டமிட்ட கலவரங்களை தூண்டினார்கள்?
ராம்குமார் சிறைக்குள் கொல்லப்பட்டது செப்டம்பர் 19இல்.#ராம்குமார்_படுகொலை திசை திருப்பப்பட வேண்டும் என்பதில் இந்து பரிவாள அமைப்புகள் தீவிரமாக இயங்கின.
சுவாதி படுகொலை முழுக்க இந்து சங்க பரிவாளங்கள் கூட்டணியும் பா.ஜ.கவின் அரசியல் ஆதரவும் காணப்படுகின்றன. தமிழ்நாட்டுக்குள் #மதக்கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்பதில் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தீவிரம் காட்டின.#சுவாதி மதமாற்றம் ஏற்காத சுவாதியின் குடும்பத்தினருக்கு உதவியது ஆர்.எஸ்.எஸ் என்ற இந்து தீவிரவாத அமைப்புதான்.
#சுவாதி_படுகொலை செய்யப்பட்ட மறுநாளில் அவளை கொன்றவன் இஸ்லாமிய இளைஞன் என்று முதலில் எழுதியது#திருச்செந்தூர் ‘வினோத் இந்து நேஷனலிஸ்ட்’ ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர். அவர் எழுதிய தகவல்களை #ஓய்ஜிமகேந்திரன்உள்ளீட்ட பார்ப்பன பனியாக்கள் அச்சு எடுத்தன. ராம்குமார் சிறைக்குள் படுகொலை செய்ததற்கும் இதே ஆர்.எஸ்.எஸ் இயக்கமே காரணம். ஜெயலலிதாவுக்கு நடந்தது என்ன? என்பதை இன்னும் வெளியில் தெரியாத அளவு மர்மங்களால் சூழ்ந்திருப்பதற்கு காரணமும் இதே ஆர்.எஸ்.எஸ் இந்து பரிவாள அமைப்புகள் தான்.
இத்தனை பதட்டங்களோடு தமிழ்நாடு இன்று மர்ம பிரதேசமாக மாற்றப்பட்டிருக்கும் நிலையில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது ஏன்?
“தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற முயலும் இந்து முன்னணியை தடை செய்” என்று #மக்கள்_நலக்_கூட்டணிகள்போராடிய போது 2.500 பேர்களை கைது செய்த காவல்துறை, நீதித்துறை, தமிழக அரசு “ஆர்.எஸ்.எஸ் இந்து பயங்கரவாத இயக்கத்தை டவுசர் போடாதே. முழு பேண்ட் போட்டு ஊர்வலத்தை நடத்து” என அனுமதி கொடுப்பது மதக் கலவரத்தை தமிழ்நாட்டில் ஏற்படுத்துவதற்காகவா?
#மதவெறுப்புவாத_அரசியல் அரசு அதிகாரமிக்க நபர்களிடம் இருந்தால் நாடு கலவர பூமியாகவும் இரத்த ஆறு ஓடும் சாக்கடையாகவும் தான் இருக்க முடியுமென்பதை இவர்கள் அறியாதவர்களா?
எதற்காக இஸ்லாமிய வெறுப்பின் மீது இந்துக்களையே கொன்றொழிக்க முயலும் அரசியலை இந்துக்களுக்கு எதிராக இருக்கும் இந்து அமைப்புகள் செய்கின்றன?
[பிகு: பதிவிற்கு தொடர்புடைய படங்கள் நீக்கப்பட்டுள்ளன என்பதால் இம்முறை பதிவின் கீழ் உள்ள பின்னூட்டங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன]
#தமிழச்சி
09/10/2016
இந்த வலைப்பதிவில் தேடு
பதட்டமான சூழலில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி எதற்காக
Tags
Tamil Political news
H I'm Syed Abutahir from Chennai, Addicted to Learn & teaching SEO
பதட்டமான சூழலில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி எதற்காக
Reviewed by Tamilan Abutahir
on
10:48 PM
Rating: 5
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக