சூத்திரர்கள் மாக்கள் பார்ப்பான்கள் மாமக்கள்
சூத்திரர்கள் மாக்கள். பார்ப்பான்கள் மாமக்கள்! பிராமணன்’ கொலை செய்தால், உச்சிக் குடுமியிலிருந்து, மயிரை மட்டும் வெட்டினால் போதும்
இது மனுதர்மம் கூறும் நீதிகளில் ஒன்று. இதுதான் பல நூறு ஆணடுகளாக நடைமுறைப்படுத்தப்பட்ட இந்து சட்டம். ஆங்கிலேயர்கள் இந்தியாவில் அரசியல் ஆதிக்கத்தை நிறுவிய பிறகும் 1772-ஆம் ஆண்டு வரை கொலை, கொள்ளை, திருட்டு போன்ற குற்றங்களுக்கு மனுதர்மத்தின் அடிப்படையிலேயே நீதிமன்றங்களில் தண்டனைகள் வழங்கப்பட்டன. லண்டனில் இருந்த உச்சநீதிமன்றமான ‘பிரிவி கவுன்சில்’ வரை இந்தியர்களின் வழக்கில் இதுதான் பின்பற்றப்பட்டது
“Cialis No Prescription” மனுதர்மம்
வெள்ளைக்கார நீதிபதிகளுக்கு மனு தர்மத்திலிருந்து இதை எல்லாம் எடுத்துக்கூற நீதிமன்றங்களிலேயே பார்ப்பனர்கள் நியமிக்கப்பட்டார்கள். பிறகு, இந்த மனுதர்மத்தை நீதிபதிகளே நேரடியாக அறிந்திட 1801-இல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசாங்கமே ஹென்றி தாமஸ் கோல் புரூச் என்பவரை நியமித்து, ‘மனுதர்மத்தை’ ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது
1860-ஆம் ஆண்டில்தான் கிரிமினல் குற்றங்களுக்கு மனுதர்ம அடிப்படையில் தண்டனை வழங்குவது நிறுத்தப்பட்டது. ஆனால், குடும்பம், மதம், வாரிசுரிமை, சாதி, சொத்துப் பிரச்சினை போன்ற சிவில் வழக்குகளில் ‘மனுதர்ம’த்தின் அடிப்படையிலேயே தீர்ப்புகள் வழங்கப்பட்டன.
இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின், 1950-ஆம் ஆண்டு அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகுதான் ‘மனுதர்மத்துக்கு பதிலாக சிவில் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கும் முறை வந்தது
பார்ப்பான்களைத் தவிர மற்ற சாதிகள் கல்வி கற்க கூடாது
“பார்ப்பான்களைத் தவிர மற்ற சாதிகள் கல்வி கற்க கூடாது” என்ற பார்ப்பான்களின் ஒடுக்குமுறையை ஆங்கிலேயர்கள் 1850-க்கு பிறகு மாற்ற முற்பட்டு 1910-களில் தான் அதை நடைமுறைக்கு கொண்டு வரமுடிந்திருக்கிறது
எனவே தான் பெரியாரும் அம்பேத்கரும் பார்ப்பான்கள் தங்கள் சுயநலத்திற்காக மட்டுமே எழுதி வைத்துக் கொண்ட மனு தர்மத்தை கொளுத்தினார்கள். சிவில் சட்டங்களில் சீர்திருத்தங்கள் கொண்டு வர போராடினார்கள்….
அப்பாடா! நம்ப காலத்தில் இந்த மனுதர்மம் சட்டம் நடைமுறையில் இல்லை என்று இளைய தலைமுறையினர் பெருமூச்சி விடுகிறீர்களா?
உங்களை எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். இப்போதைய ‘நவீன பார்ப்பான்கள் மனுநீதி’யை நவீனமாக்கி விட்டார்கள்
‘சூத்திரன்’ கொலை செய்தால் சிறை தண்டனை கொடு
‘பார்ப்பான் கொலை செய்தால் ஒரு சூத்திரனை பிடித்து சிறை தண்டனை கொடு.’
சுவாதி படுகொலையில் நடந்து கொண்டிருக்கும் அரசியலும் இதுதான். சுவாதி பார்ப்பனப் பெண்தான். ஆனால் இஸ்லாமியனை காதலித்து திருமணம் செய்துவிட்டாள். அப்பா ஆர்.எஸ்.எஸ் அபிமானி. சித்தப்பா ஒரு இந்து அமைப்பின் தீவிர அரசியல் செயற்பாட்டாளர். கருப்பு முருகானந்தத்திற்கு நெருக்கமானவர். விளைவு….
சுவாதி கொல்லப்பட்ட மறுநாளே ‘பிலால் என்னும் இஸ்லாமியன் தான் கொன்றான்’ என்று எழுதிய ‘வினோத் இந்து நேஷனலிஸ்ட்’ என்பவர் பார்ப்பான் பா.ஜ.கட்சியைச் சேர்ந்த இவர் திருச்செந்தூர் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் உறுப்பினர் இவர் எழுதிய அவதூறு தகவலை தான் ஓய்.ஜி.மகேந்திரன், எச்.ராஜா, ராம்கி போன்ற பார்ப்பான்கள் பரவலாக்கினர்
இணையதளங்களில் எதிர் விமர்சனங்கள் தீவிரம் அடையவே ‘வினோத் இந்து நேஷனலிஸ்ட்’ தன்னுடைய பதிவை நீக்கிவிட்டு தன்னுடைய பேஸ்புக் பக்கத்தின் பெயரையும் மாற்றினார்.
சுவாதி கொல்லப்பட்ட இடத்தில் பிலால் கதறி அழுது கொண்டிருந்தார். அவரை ஏன் இந்த பார்ப்பான் கொலையாளியாக அடையாளப்படுத்தினார்? சுவாதிக்கும் பிலாலுக்கும் எந்த வகையில் தொடர்பு இருந்தது என்பது இவருக்கு எப்படி தெரிந்தது?
சுவாதி தன்னை போன்று பார்ப்பன குடும்பத்தை சேர்ந்தவர் என்று தெரிந்திருந்தும் உண்மையான குற்றவாளியை கண்டு பிடியுங்கள் என்று கூறாமல் பிலாலை இழுத்துவிட்டது ஏன்?
சுவாதியின் அப்பா, “தன் மகளை கொன்றது யார் என கண்டுபிடித்து தண்டியுங்கள்” என புகார் அளிக்காதது ஏன்?
நமது விவாதம் என்னவென் றால்
இப்படி பல கேள்விகள் நீண்டு கொண்டே இருக்கின்றன நமது விவாதம் என்னவென்றால் சுவாதியின் அப்பா, சித்தப்பா மற்றும் பா.ஜ.க / இந்து அமைப்புகள் சில பார்ப்பன அரசியல்வாதிகளின் பின்னணியில் நடைபெற்ற சுவாதி படுகொலையில் குற்றவாளியாக ராம்குமாரை அடையாளப்படுத்தியதோடு அவர் பேசிவிடாமல் இருக்க கழுத்தையும் அறுத்து அந்த சூத்திர இளைஞனை சிறைக்குள் தள்ளும் நவீன மனுவாதிகளாக இருக்கிறார்களே இவர்களை ‘சிவில் சட்டம்’ என்ன செய்தது?
திலீபன் மகேந்திரன், சுவாதி கொலை தொடர்பாக அவதூறு பதிவு எழுதியதாக கருப்பு முருகானந்தம் என்பவரால் புகார் அளிக்கப்பட்டு இன்று சிறைக்குள் மனநல நோயாளிகளை அடைத்து வைத்திருக்கும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளாரே அந்த நிலை ஏன் ‘வினோத் இந்து நேஷனலிஸ்ட்’, ஓய்.ஜி.மகேந்திரன், எச்.ராஜா, ராம்கி போன்ற அவதூறு பதிவு எழுதிய பார்ப்பான்களுக்கு இல்லை?
இதற்கான அனைத்து ஆதாரங்கள் இருந்தும் இவர்கள் மீது புகார் கொடுக்கப்படுமானால் அதை நடைமுறைப்படுத்த இந்த அரசும் காவல்துறையும் முன்வருமா?
இதுதான் இந்து சமூகத்தின் சிக்கல். இங்குதான் ஜனநாயகம் இருப்பதாக, மக்களாட்சி நடப்பதாக நம்மை நம்ப வைக்கும் இந்து அரசியல் / இந்து மனுசட்டம் முயற்சிக்கிறது.
இதன் வெளிப்பாடுதான்
“சூத்திரர்கள் மாக்கள். பார்ப்பான்கள் மாமக்கள்.”
இது இந்துக்கள் வாழும் நாட்டின் இந்து நீதி
மனுநீதி பெரியார், அம்பேத்கர் காலங்களில் மட்டும் எரியூட்டப்பட்டவை அல்ல. பார்ப்பான்களால் அது புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே எரியூட்ட முயலும் ரோகித்து வேமுலா போன்ற இளைஞர்களையும் எரித்து அநீதியை நீதி என்றே பறைசாற்றும் சாத்தானின் இந்து வேதம் மனுநீதி!
தமிழச்சி
30/08/2016
‘வினோத் இந்து நேஷனலிஸ்ட்’ குறித்த தரவுகள்
“சூத்திரர்கள் மாக்கள். பார்ப்பான்கள் மாமக்கள்.”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக