ஏசுநாதர் எடேbபேயர், இங்கிலாந்து நாட்டின் பிரசித்திப்பெற்ற உதைப்பந்தாட்ட வீரர். சமீபத்தில் இஸ்லாம் மதத்தை தழுவி, ஏன் இஸ்லாத்தைத் தழுவினேன் என்பதற்கான 13 உறுதியான காரணங்களை வெளியிட்டார்.
1. ஏசு நாதர் (நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம்), ‘ஓர் இறைவனே உள்ளான், ஓர் இறைவனே வணங்கப்பட வேண்டும் என கற்பித்தார்கள். (டியூட் 6:4, மார்க் 12:29).
முஸ்லிம்களும் இதையே நம்புகிறார்கள். (திருக்குர்ஆன் 4:171)
2. ஏசு நாதர் ஒருபோதும் பன்றி இறைச்சி சாப்பிடவில்லை. (லெவிட்டிகஸ் 11:7)
அதே போல் முஸ்லிம்களும் சாப்பிடுவது இல்லை (திருக்குர்ஆன் 6:145.)
3. ஏசுநாதர் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்ற வார்த்தைகளால் வாழ்த்துக் கூறினார். (ஜோன் 20:21.)
இது போலவே முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக் கூறிக் கொள்கிறார்கள்.
4. ஏசு எப்போதும், “இறைவன் நாடினால்” (இன்ஷா அல்லாஹ்) என்றுக் கூறினார்கள்
முஸ்லிம்கள் திருக்குர்ஆன் வாசகங்கள் கூறுவது போல், எதைச் செய்வதானாலும் முதலில் இதைச் சொல்லிவிடுகிறார்கள். (திருக்குர்ஆன் 18:23-24)
5. ஏசுநாதர் தொழுகைக்கு முன் தன்னுடைய முகம், கைகள், பாதங்களைக் கழுவினார்கள்
முஸ்லிம்களும் அதையே செய்கிறார்கள்
6. ஏசுநாதரும் பைபிலில் குறிப்பிடப்படும் ஏனய நபிமார்களும் தங்களின் சிரசை நிலத்தில் வைத்தே தொழுதுள்ளார்கள். (மத்தீயு: 26:39.)
திருக்குர்ஆன் கற்றுக்கொடுத்தது போல் முஸ்லிம்களும் அப்படியே தொழுகிறார்கள். (திருக்குர்ஆன் 3:43)
7. ஏசுநாதர் தாடி வைத்திருந்தார்கள். நீண்ட அங்கியை அணிந்திருந்தார்கள். முஸ்லிம் ஆண்களும் அதே போல் செய்துக்கொள்கிறார்கள்.
8. ஏசுநாதர் கட்டளைகளைப் பின்பற்றினார்கள். எல்லா நபிமார்களையும் நம்பினார்கள். (மத்தியு 5:17.)
திருகுரானிய வசனங்கள் 3:84, 2:285 கூறுவது போல் முஸ்லிம்களும் அப்படியே செய்கிறார்கள்.
9. ஏசுநாதரின் தாயார் மேரி (மர்யம் அலைஹிஸ்ஸலாம்) தன் முழு உடலையும் மறைத்து, தலையில் முந்தானை (ஹிஜாப்) இட்டு ஒழுக்கமான ஆடை அணிந்திருந்தார்கள். (திமோத்தி 2:9, ஜெனஸிஸ் 24:64-65, கொரின்தியன்ஸ் 11:6.)
முஸ்லிம் மாதர்கள் திருக்குர்ஆன் போதிப்பது போல் இவ்வாறே ஒழுக்கமாக ஆடை அணிகிறார்கள்.
(திருக்குர்ஆன் 11:6.)
10. ஏசுநாதரும் பைபிலில் கூறப்படும் ஏனைய நபிமார்களும் 40 நாட்கள் வரை நோன்பு நோற்று உள்ளார்கள். (எக்சோடஸ் 34:28, தானியல் 10:2-6, கிங்ஸ் 19:8, மத்தீவ் 4:1.)
இதையே முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் செய்கிறார்கள். முஸ்லிம்கள் கடமையான 30 நாட்கள் நோன்பை நோற்க வேண்டும். (திருக்குர்ஆன் 2:183)
சிலர் ஒருபடி மேலேயேச் சென்று, 6 நாட்கள் மேலதிக நோன்பையும் நோற்று நற்கூலிகளைப் பெற்றுக்கொள்கிறார்கள்.
11. ஒரு வீட்டினுள் நுழையும் போது, “இந்த இல்லத்திற்கு சாந்தி சமாதானம் உண்டாகட்டும்” என்று கூறுமாறு ஏசுநாதர் கற்பித்துக் கொடுத்தார்கள். (லூக் 10:5)
ஏசு நாதர் செய்த, கற்பித்துத் தந்த அதனையே முஸ்லிம்களும் செய்கிறார்கள். நாம் இல்லங்களுக்குள் நுழையும்போதும் மற்றவர்களுடைய இல்லங்களுக்குள் நுழையும்போதும் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று கூறுகிறோம். (திருக்குர்ஆன் 24:61)
12. ஏசுநாதர்’கத்னா’ செய்யப்பட்டிருந்தார்கள். முஸ்லிம் ஆண்கள் கத்னா செய்யும்படி கேட்கப்பட்டுள்ளார்கள். ஏசுநாதர் எட்டு நாட்கள் பாலகராக இருக்கும்போது கத்னா செய்யப்பட்டார்கள். (லூக் 2:21)
முஸ்லிம்கள் நபி இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய மார்க்கத்தைப் பின்பற்றும்படி கட்டளையிடப்பட்டுள்ளார்கள். (திருக்குர்ஆன் 16:123)
நபி முஹம்மத் ﷺ அன்னவர்கள் கூறினார்கள், “நபி இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் 80 வயதாக இருக்கும்போது கத்னா செய்துக்கொண்டார்கள்.”
13. ஏசுநாதர் அரமாயிக் மொழியையே பேசினார்கள். இறைவனை “எல்லாஹ்” என்று அழைத்தார்கள். அது “அல்லாஹ்” என்றே உச்சரிக்கப்படும். அரமாயிக் “எல்லாஹ்”வும் அராபிய “அல்லாஹ்”வும் ஒன்றே.
ஆகவே ஏசுநாதரின் இறைவனும் முஸ்லிம்களினதும் முழு மனித குலத்தினதும் இறைவனும் ஒன்றே என்பதையும் அவன் மாத்திரமே உள்ளான் என்பதையுமே இவை யாவும் நிரூபிக்கின்றன
இப்போது சொல்லுங்கள், யார் ஏசுநாதரை உண்மையாகப் பின்பற்றுபவர்கள்
E. Adebayor
E. எடேbபேயர
தமிழில்: அப்துர் ரஹீம் முஹம்மத் ஜஃfபர்
நல்லதைப் பகிருங்கள், நற்கூலி உண்டு
உலக முஸ்லிம் செய்திகளையும் தகவல்களையும் பெற்றுக்கொள்ள, எம் பக்கத்தை லைக் செய்து எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்:
உலக முஸ்லிம்
ரூபாய் நோட்டு பற்றி பீதி தேவையில்லை.. இப்போ மக்கள் செய்ய வேண்டியது இதுதான்! பீதியை கிளப்பவேண்டாம்
இந்த வலைப்பதிவில் தேடு
ஏசுநாதர் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்ற வார்த்தைகளால் வாழ்த்துக் கூறினார்
Tags
Tamil Political news
H I'm Syed Abutahir from Chennai, Addicted to Learn & teaching SEO
ஏசுநாதர் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்ற வார்த்தைகளால் வாழ்த்துக் கூறினார்
Reviewed by Tamilan Abutahir
on
4:27 AM
Rating: 5
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக