“மாங்கல்யம் தந்துனானேன மமஜீவன ஹேதுநா!”
என்று மந்திரம் தொடங்கியதும், கெட்டி மேளம் கெட்டி மேளம் என்ற சவுண்டை கேட்கலாம், மணமகன், மணமகளுக்கு தாலி கட்டுவார்.
இந்தத் தாலியில் பல வகை உண்டு, ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு வகையான தாலிகள், அதே போன்று தாலிகட்டுவதிலும் பல முறைகள் உண்டு.
1- கோமட்டி, கப்பேரர், குருபர், யாடர் ஆகிய சாதிகளில் புரோகிதன் தாலியைக் கட்டுவான்.
2- படகர் சாதியில் நான்கைந்து மனைவியை உடைய பெரிய மனிதர் வந்து பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவார்.
3- காடர், காட்டுப்பட்டர், கோட்டை வெள்ளாளர், தொட்டியர், ஊராளி, வலையன் ஆகிய சாதிகளில் மணமகனின் உடன்பிறந்தவளோ, தாயோ தாலியைக் கட்டுவர்.
4- புலையன் சாதியில் மணமகனும் அவன் தோழனும் சேர்ந்து பெண்ணுக்குத் தாலி கட்டுவர்.
5- உப்பரர் சாதியில் பெண்ணின் ஊரைச் சேர்ந்த சீர்க்காரி என்பார் தாலி கட்டுவாள்.
6- நாட்டுக்கோட்டைச் செட்டிகளில் தாலியை மண நாளன்று மணமகளின் கோவிலைச் சேராத பெரியவர் ஒருவரும், பெண்ணின் நாத்தனாரும் கட்டுவர். – இப்படி பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவதிலும் வெவ்வேறு நடைமுறைகள். உண்டு.
அதே போன்று, பெண்ணைத் தாரை வார்த்து கொடுப்பதிலும் பல சம்பிரதயாங்கள் சாதிக்கேற்றவாறு மாறுபடும்.
—- இப்ப கேள்வி என்னான்னா?
பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டால், திருமணம் ஒழுங்கு முறை படுத்தப்பட்டால், எல்லா இந்துக்களும் எந்த வகை தாலியை செய்ய வேண்டும்? பெண்ணின் கழுத்தில் யார் கட்ட வேண்டும். எந்த ஜாதியை பின் பற்ற வேண்டும்.
வடமாநிலங்களில் தாலி கட்டும் பழக்கம் அவ்வளவாக இல்லை, அதைப் பின்பற்றி இனி இந்துக்கள் தாலி அணிய கூடாதா?
முஸ்லிம்களும், கிருஸ்தவர்களும் திருமணத்தின்போது, அம்மி மிதித்து அருந்ததி பார்க்க வேண்டுமா?
இந்துக்கள் அல்லாத சிறுபான்மையினரும் கட்டாயம் தாலி அணிய வேண்டுமா?
– பொது சிவில் சட்டம் தேவையா?
சிந்திப்பீர்!..செயல்படுவீர்.!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக