ரூபாய் நோட்டு பற்றி பீதி தேவையில்லை.. இப்போ மக்கள் செய்ய வேண்டியது இதுதான்! பீதியை கிளப்பவேண்டாம்
இன்று இரவு முதல் ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி திடீரென அறிவித்துள்ளார்.
கருப்பு பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கை அவசியப்படுவதாகவும், சிரமத்தை பொறுத்துக் கொண்டு, மக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், மோடி கேட்டுக் கொண்டார்.
இப்போது செய்ய வேண்டியது என்ன என்ற குழப்பம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும். குழப்பமோ, பதற்றமோ, பீதியோ படாமல் இதை படித்து பாருங்கள் போதும்.
*நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு 12 மணியோடு ரூ.500 மற்றும் ரூ.1000 முகமதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் செல்லாது.
*ஏடிஎம் மற்றும் வங்கிகள் நாளை திறந்திருக்காது. எனவே நாளை நோட்டுக்களை மாற்றிக்கொள்ள முடியாது
*10ம் தேதி பல பகுதிகளில் ஏடிஎம் திறந்திருக்கும். சில பகுதிகளில் திறக்காது. வங்கிகள் திறக்கப்படும். அன்று ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம்.
*ஒருவரிடம், ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் மட்டுமே இருந்தால், நோட்டுகளை மாற்றிக்கொள்ளும்வரை, அவர்கள் டிடி, செக், டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலம் பரிவர்த்தனை செய்துகொள்ளலாம்.
*ஏழை, எளியவர்களிடம் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு இருப்பது சாத்தியமில்லை என்பதால், அரசு மருத்துவமனை, ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் வரும் 11ம் தேதி நள்ளிரவு வரை ரூ.500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் செல்லும்.
*வரும் டிசம்பர் 30ம் தேதிவரை, இந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை அனைத்து வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபீஸ்களில் கொடுத்து, புதிய வகை ரூ.500 அல்லது ரூ.2000 ரூபாய் நோட்டுக்களாக அவற்றை மாற்றிக்கொள்ள அவகாசம் தரப்பட்டுள்ளது.
சில காரணங்களால், அதற்குள் மாற்ற முடியவில்லை என்றால், அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிவரை அவகாசம் உள்ளது. ஐடி ஃப்ரூப் காண்பித்து ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம்.
100 ரூபாய் நோட்டுக்கள் அதிகம் வைத்திருப்பவர்கள் மற்றவர்களுக்கு உதவ முன்வரலாம் …தவறில்லை….
சென்னை மற்றும் நகரவாசிகள் பலர் கிரடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் அனைத்து பொருட்களையும் வாங்க முடியும் என்பதால் அவர்களுக்கு சிரமங்கள் அதிகமிருக்க வாய்ப்பில்லை
கிராம மக்களின் நிலைதான் பரிதாபத்திற்குரியது…இருந்தாலும்….கிராமத்தினர் மற்றவர்களின் கஷ்டங்களில் உதவுவார்கள் என நம்பலாம்…
நாளையும் நாளை மறுநாளும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்தால் தப்பிக்கலாம்…..
மக்களிடம் பீதியை கிளப்பி அவர்களை மேலும் சிரமத்துக்குள்ளாக்க வேண்டாம்
2 இதைப்பத்தி எழுதவே கூடாதுன்னு நினைச்சேன். இருந்தும் இதைச் சொல்லாம போவது தப்பு என்பதால் இந்த ஸ்டேட்டஸ். இதுதான் முதலும் கடைசியும்.
1. இப்ப நான் ஒரு செய்தி படிச்சேன். நெட்ல நோண்டியபோது கிடைச்சது. இந்தியாவில் 93% வந்து இன்ஃபார்மல் செக்டார்தான். அதாவது, இந்தியாவில் வெறும் 7% மட்டுமே பக்காவாக வங்கி அக்கௌண்ட்கள் மூலம் சம்பளம் பெறுகின்றனர். பாக்கி 93%, சம்பளக்கவர்களில்தான் பணம் பெறுகின்றனர். அதாவது, தினக்கூலிகள் முதலியவர்கள். இவர்களின் சேமிப்பும் பணமாகத்தான் அவர்களிடமே உள்ளது. இவர்களுக்கு வங்கி அக்கவுண்ட் கிடையாது.
அதாவது, குறைந்தபட்சம் 233 மில்லியன் மக்களுக்கு வங்கி அக்கௌண்ட்கள் கிடையாது என்பது குறைந்த பட்சத் தகவல். இணையம் அப்படித்தான் சொல்லுது
இவர்கள் நாளை முதல் என்ன ஆவார்கள்? இவர்களின் சேமிப்பின் கதி என்ன? டிசம்பர் கடைசிவரை மாற்றிக்கொள்ளலாம் என்றாலும், இவர்களுக்கு நாளை முதல் வழங்கவேண்டிய தினசரி சம்பளத்தின் நிலை என்ன? நாட்டின் 93% மக்களின் சம்பளத்தேவையைப் பூர்த்தி செய்யும்வகையில் வங்கிகள் தயார் நிலையில் உள்ளனவா? எல்லாருக்கும் 100 ரூவாய்லதான் சம்பளம் கொடுக்கணும். அதான் மேட்டர். தயாரா?
2. புதுசா இண்ட்ரோ கொடுக்கும் 500, 2000 நோட்டுகளில் கறுப்புப் பணத்தைத் தடுக்க இவர்களின் மெஷர்கள் என்ன?
3. தங்கம், ப்ராப்பர்ட்டி, ஹவாலா, பினாமி… இதெல்லாம் வெச்சிப் பரவியிருக்கும் கறுப்புப் பணம்தான் இந்தியாவில் மிக அதிகம். இதை எப்படித் தடுக்கப்போறாங்க?
4. இதுதான் மிக முக்கியமான பாயிண்ட்டா எனக்குத் தோணுது. உத்தரப்பிரதேசத் தேர்தலின் தேதி என்ன?
வந்தார்கள் வென்றார்கள்ல முகம்மது பின் துக்ளக் பத்தி ஒரு ரெஃபரன்ஸ் இருக்கும். இந்தியாவில் முதன்முறையா நாணயம் அறிமுகப்படுத்தியது அவர்தான். ஆனால் கள்ள நாணயங்கள் உடனுக்குடன் தயாரிக்கப்பட்டதால், ஒருநாள் திடீர்னு, இதுவரை அடித்த நாணயங்கள் செல்லாதுன்னு அறிவிச்சார். முறைப்படி சேர்த்து வைத்தவனுங்களும் உடனடி போண்டி.நடுத்தெரு. அடுத்த நாள், முறைப்படி கணக்குக் காட்டினால் கஜானாவிலிருந்து பணம் தரப்படும்னு சொன்னார். அப்படி செஞ்சதில் மூணே மாசத்தில் அரசு கஜானாவே காலி.
கறுப்புப் பணம், பணமா மட்டும்தான் இருக்கா? அது எப்பவோ ரெகுலரா கன்வெர்ட் ஆகி வெளிநாடுகளில் என்னன்னமோ வகையா மாறியாச்சு. இப்போ இந்தத் திடீர் அனௌன்ஸ்மெண்ட்டால் ஏமாறப்போறவங்க கட்டாயம் உண்டு. உள்ளூர்ல கத்தை கத்தையா பணத்தைக் கறுப்பா வெச்சிருக்குறவங்க. அதை நான் மறுக்கமாட்டேன். ஆனால் இதெல்லாம் மிகமிகக் கம்மி பர்சண்டேஜ் மட்டுமே. நம்ம அரசியல்வாதிகளுக்கும் பண முதலைகளுக்கும் பணத்தை எப்படியெல்லாம் மாத்தலாம் என்பதைச் சொல்லியா தரணும்?
மோதி அரசு கறுப்புப் பணத்துக்கு எதிரா எதுவுமே செய்யல என்ற வாதத்தை இந்த அறிவிப்பு தடுக்கப் பார்க்குது. அவ்வளவே. பேப்பரில் இது ஒரு செம்ம திட்டம். ஆனால் ப்ராக்டிகலாக இதனால் எந்தப் பயனும் இல்லை என்பது என் கருத்து. தேர்தல்கள் நெருங்குது.திடீர் அறிவிப்புத் தேவை. அதான் இது என்பதே எனது எண்ணம். இது ஏன் இப்படி நினைக்கிறேன் என்பதுக்குப் பல காரணங்கள் உண்டு. சிலவற்றை மேல சொல்லீருக்கேன். அரசியல்வாதிகள் இதுபோல் அறிவிப்பதைக் கேள்வியே கேட்காமல் என்னால் கண்மூடித்தனமாகக் கொண்டாட இயலாது. அது காங்கிரசா இருந்தாலும் சரி, கம்மியூனிஸ்டா இருந்தாலும் சரி. பீஜேபியுந்தான். அதிமுக, திமுக. எல்லாமே இதில் அடக்கம். தனக்கு எதைப் பண்ணிக்கணுமோ அதெல்லாம் நல்லாப் பண்ணீட்டுதான் இது போன்ற ‘ரகசிய’ ப்ளான்கள் எல்லாம் அறிவிக்கப்படும் என்பதை நம்புறவன் நானு.
அவ்ளதான், நன்றி. வணக்கோம். Written By Karundhel Rajesh
3 1978 ல் அன்றைய ஜனதா அரசு அதிக மதிப்பீடு உள்ள நோட்டுகளை இதே போல் தடை செய்தது.(Soமோடிதான் முதன் முதலில் என்று வழக்கம்போல் வரலாறு தெரியாமல் ஆரம்பிக்காதீர்கள்!)
அதனால் கருப்புப் பணம் ஒழிந்துவிட்டதா என்ன? அதிகரித்துத் தான் இருக்கிறது. ஆகவே இது ஒரு சிறு முயற்சி மட்டுமே அதுவும் சாதாரண மக்களின் வயிற்றெறிச்சலைக் கொட்டிக்கொண்டு!
மேலும் பெரும்பாலான கருப்புப் பணம் வெளிநாடுகளில், தங்கத்தில், ரியல் எஸ்டேட்டில் பதுக்கலாக ,முதலீடுகளாக உள்ளது.பெரும் கொள்ளைக்காரர்களின் பணம் பாதுகாப்பாக வெளிநாடுகளில் இருக்கும். நடுத்தர கொள்ளைக்காரர்களுக்கு ஏற்கனவே வெள்ளையாக்கும் ‘பேர் அன் லவ்லி’ திட்டம் மூலம் வாய்ப்பு அளிக்கப்பட்டு விட்டது. அதற்கு அடுத்த நிலையில் உள்ளவர்களுக்கு வெள்ளையாக்க 50 நாட்கள் வாய்ப்பு உள்ளது. இதில் கிடந்து சாவது நம்மைப் போன்ற சாதாரண மக்கள்தான்.
மோடி இவற்றைத்தான் முதலில் ஒழிக்கிறார். பிறகெப்படி கருப்புப் பணத்தை ஒழிப்பது. இரண்டாயிரம் ரூபாய் நோட்டு விட்டா?! Jothimani Sennimalai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக