மோடி.
கேள்வி :- டொன் ஒசோக் அவர்களே, அடிக்கடி பார்ப்பனர்களை விமர்சிக்கிறீர்களே? பார்ப்பன பெண் யாரையாவது காதலித்து தோல்வியடைந்தவரா நீங்கள்?
-பாஷ்யம் ரங்கநாதன்,
சிறீரங்கம்
பதில்:- பார்ப்பனக் காதலி பற்றி கடைசியில் சொல்கிறேன். கண்முன் இருக்கும் பிரச்சினையில் இருந்து துவங்குவோம். மோடியின் துக்ளக் தர்பாரில் நடக்கும் இந்த 1000/500 ரூபாய் விசயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல், இந்தக் கொடுமையை இணையத்தில் ஆதரித்துப் பேசுகின்றவர்களில் 10க்கு 9பேர் பார்ப்பனர்கள்.
இரவு 9மணிக்கு மோடி பஞ்ச் டயலாக் பேசினால் 8மணி 59நிமிடத்தில், “ஆஹா ஓஹோ.. இதனால இந்தியா வல்லசரசு ஆயிரும். அதுவரைக்கும் பக்கத்து வீட்ல கடன் வாங்குங்க. கிட்னியை வைத்து சட்னி வாங்குங்க. ஜெய்ஹிந்த்,” என்று வீடியோ போடுகின்றவர்கள் பார்ப்பனர்கள்தான்.
பூணூல் தெரிய சட்டை அணிந்துகொண்டு, “மோடி ரூபாய் நோட்டுக்குள்ள சிப்ஸ்சு வச்சிருக்காரு. சாட்டிலைட்டுகுள்ள கேக்கு வச்சிருக்காரு…,” என வீடியோ போடுகின்றவர்கள் பார்ப்பனர்கள்தான்.
“ஏழைங்க எல்லாம் எப்படி சில்லறை இல்லாமல், ரூபாய் நோட்டு இல்லாமல் சாப்பிடுவாங்க?” என யாராவது கேட்டால், “ரேஷன்ல அரிசி ஃப்ரீதானே? நாட்டுக்காக ரெண்டு நாள் பட்டினி கிடந்தா ஒன்னும் செத்துவிட மாட்டாங்க,” என க்ரெடிட் கார்டு திமிரில் பதில் போடுகின்றவன் பார்ப்பானாகத்தான் இருக்கிறான்.
தேவர் ஜெயந்தி வந்தால் முதல் ஆளாக வாழ்த்து போடுவதுபோல அந்த சாதி இளைஞர்களை உசுப்பிவிட்டு குளிர்காயும் ஆள் பார்ப்பானாகத்தான் இருக்கிறான்.
இன்று மட்டுமல்ல, காலங்காலமாய் ஏழைப் பாழைகள், உரிமைக்காக போராடுபவர்கள், கல்விக்காக ஏங்குபவர்கள் இப்படி அனைவரையும் ஈவிரக்கமின்றி நசுக்க முற்படுபவர்களில் முதல் வரிசையில் நிற்பவர்கள் அவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
சரி இவர்கள் செய்யும் அநியாயத்தில் கொஞ்சமேணும் ஏதாவது நியாயம் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.
இடஒதுக்கீடு ஏதோ நாட்டையே கெடுப்பதுப்போல பொய்பேசும் இவர்கள் மேனேஜ்மண்ட் சீட்டுகள் இருப்பதை பற்றி என்றாவது பேசியிருக்கிறார்களா?
ஏழையிடம் பணம் பிடுங்குவதில் காட்டும் அக்கறையை ஏன் ஸ்விஸ் வங்கியில் குவிந்திருக்கும் கறுப்புப்பணத்தை பிடிங்குவதில் காட்டவில்லை மிஸ்டர்.மோடி என கேட்டிருக்கிறார்களா?
நீதிமன்றம் கேட்ட 500கோடிக்கு மேல் வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றிய பணக்கார கடன்காரர்களின் லிஸ்டை ஏன் இன்னும் கொடுக்கவில்லை என யாராவது மோடியை கேட்டிருக்கிறார்களா?
நாய் மேல் காட்டும் பரிவை, காளைகள் மேல் காட்டும் பரிவை உடுமலை சங்கர்கள் மேல் காட்டியிருக்கிறார்களா? ஏதாவது சாதி ஒழிப்பு, மறுப்பு போராட்டங்களில் தென்பட்டிருக்கிறார்களா? அல்லது ஒரு கண்டனமாவது தெரிவித்திருக்கிறார்களா? இட ஒதுக்கீட்டை ஒருபக்கம் திட்டினாலும், இன்னொருபக்கம் தலித்துகளுக்கு எதிராக ‘இட ஒதுக்கீட்டுப்போராளி’ அய்யா ராமதாஸ் ஒரு கூட்டத்தைக் கூட்டினால் நெய் ஊற்றி எரியவிட முதல் ஆளாக போய் அமர்ந்திருக்கிறார்கள்.
சரி. அப்படியே அவர்களில் யாராவது ஒருவன் மதவாதத்தை எதிர்த்து, மோடியை எதிர்த்து, அநியாயத்தை எதிர்த்து எழுதினால், “ஆஹா நமக்கொரு தோழன் கிடைத்துவிட்டான்,” என நிமிர்வதற்குள், அவனும் அரேபிய ஆடுகளை ஏமாற்றிக் கூட்டிப்போய் யாக நெருப்பில் போடுகின்றவனாக அல்லவா இருக்கிறான்?
இவர்களுக்கு 3000 ஆண்டுகளாக சமூகப்படிநிலையில் ஆண்டு அனுபவிக்கும் தங்கள் இடத்தை காத்துக்கொள்ள சாதி வேண்டும். அதற்கு மதம் வேண்டும். அதற்கு அழகான பட்டு அங்கியாக தேசப்பற்று என்ற சொல்லாடல் வேண்டும். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள், செய்கிறார்கள்.
கேட்டால், முன்பு போல் இல்லை அவர்கள் எல்லாம் சாந்தசொரூபிகள் என்பீர்கள். தனியார் துறையில் வேலை பார்க்கும் எவனாவது ஒருவனை தன் டூவீலரிலோ, அல்ல கணிணியிலோ பெரியார் படத்தை ஒருமாதம் வைக்கச் சொல்லுங்களேன் பார்ப்போம். ஒன்பது ஓட்டைகளிலும் ரத்தம் வரும் அளவிற்கு வேலையைக் காட்டுவார்கள். திராவிட இயக்கம் ஆழ வேரூன்றியுள்ள தமிழகத்திலேயே இதுதான் நிலைமை.
எனக்கும் தேசப்பற்று உண்டு. தேசம் என்பது அந்த தேசத்தின் மக்கள் தானேயொழிய, தேசப்பற்று என்பது அந்த மக்களின் மீது நாம் கொள்ளும் பற்றுதானேயொழிய, தேசம் என்பது தனியாக வானத்தில் இருந்து குதித்தது இல்லை. ஒருநாளைக்கு நூறு ஜெய்ஹிந்த் சொல்லும் ஆட்களை விட எனக்கு தேசப்பற்று நிறையவே உண்டு.
சார். நான் சாதி எல்லாம் பார்ப்பதில்லை. மக்கள் விரோதமாக எழுதும் கயவர்களாக பார்த்து கண்டிக்கிறேன். அவர்களில் 99% பேர் பார்ப்பனர்களாக இருப்பது என் தவறில்லை.
காதலியைப் பற்றி கேட்டீர்கள் அல்லவா? ஆம். சிறு வயதில் எனக்கொரு பார்ப்பனக் காதலி இருந்தாள். அவள் பத்து க்ரெடிட் கார்டுகள் வைத்துக்கொண்டு தேசப்பற்று பேசும் பெரிய பணக்காரி எல்லாம் கிடையாது. இந்நேரம் தன் குழந்தைகளை வைத்துக்கொண்டு பேங்கிலோ, ஏடிஎம்யிலோ வரிசையில் நின்று கொண்டிருப்பாள். சில்லறைக்காக வெயிலில் அலைந்து கொண்டிருப்பாள். சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு இந்நேரம் அவளைப் போல எத்தனையோ பெண்கள் சிரமப்பட்டுக்கொண்டிருப்பார்கள். எல்லோருக்கும் சேர்த்துதான் என்னைப் போன்றவர்கள் காட்டுக்கத்தல் கத்திக் கொண்டிருக்கிறோம்.
இந்த வலைப்பதிவில் தேடு
மோடி ரூபாய் நோட்டுக்குள்ள சிப்ஸ்சு வச்சிருக்காரு,
Tags
Tamil Political news
H I'm Syed Abutahir from Chennai, Addicted to Learn & teaching SEO
மோடி ரூபாய் நோட்டுக்குள்ள சிப்ஸ்சு வச்சிருக்காரு,
Reviewed by Tamilan Abutahir
on
3:56 AM
Rating: 5
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக