Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

ஜெயலலிதா தமிழரே தாய்மொழி தமிழே

 ஜெயலலிதா தமிழரே தாய்மொழி தமிழே   இந்து சமயத்தில் வைனவத்தை சார்ந்து இருக்கும் பலருக்கு தெரியாத ஓரிடம் கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில், மலைப் பகுதியாக உள்ள மேல்கொட்டை.
ஜெயலலிதா தமிழரே தாய்மொழி தமிழே
ஜெயலலிதா தமிழரே தாய்மொழி தமிழே
நம்ம ஸ்ரீ பெரும்புதூரில் பிறந்த வைனவப் புரட்சியாளர் இராமானுஜர், மேல்கொட்டையில் உள்ள மலைமீது நரசிம்மர் கோவிலையும், கீழே செல்வப் பெருமாள் கோவிலையும் கட்டிஉள்ளார்.
இங்கிருந்து சுமார் இருபது கிலோ மீட்டர் தூரத்தில், ஓர் ஏரியையும் தொண்டனூர் என்ற ஊரில் உருவாக்கி இருக்கிறார். இந்த ஏரி கடலைப்போல பரந்து விரிந்திருக்கும் என்பதோடு, கரையில் இருந்து ஐந்தடிக்குள் ஆள் முழுகும் அளவிற்கு தண்ணீர் இருக்கும். இங்கிருந்துதான் மேல் கொட்டைக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது.
வைனவப் புரட்சியாளர் இராமானுஜர் மேல்கொட்டை சென்ற போது, தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு தமிழ் குடும்பங்கள் அவரோடு அங்கு சென்று குடியேறியதால், அங்கு வாழும் பெரும்பாலோனோரின் தாய்மொழி தமிழே! 
ஆகையால், தமிழ் பேசுவோரையும், தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்போரையும், தமிழ் நாளிதழ்களைப் படிக்கும் பலரையும் நான் பார்த்திருக்கிறேன்.
இந்த ஊரில் கீழே உள்ள செல்வப் பெருமாள் கோவிலுக்கு சுமார் 100 மீட்டர் அருகில் உள்ள ராஜவீதியின் ஓர் இடத்தில்தான் சுமார் ஒன்றரை ஆண்டு காலம் தங்கியிருந்து ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ நூலை எழுதி முடித்தேன்.
நடிகர் ரஜினிகாந்தின் பல படங்களில் இந்த ஊரில் ஒரு காட்சியாவது படமாக்கப்படும். லிங்கா படப்பிடிப்பு நடந்ததும், நான் அங்கிருந்த போதுதான். MELKOTE என்று கூகுளில் தேடினால், மேலும் பல தகவலையும், படங்களையும் பார்க்கலாம்.
நான் தங்கி இருந்த இடத்திற்கு ஒரு மனை தள்ளி தரைமட்டமாக கிடக்கும் ஓர் இடத்தை, ஜெயலலிதாவின் பாட்டி வாழ்ந்த இடம் என்பார்கள். எனவே, மேல்கொட்டையில் பிறந்ததாக சொல்லப்படும் ஜெயலலிதா, இங்குதான்  பிறந்திருக்க வேண்டும்.
நமக்கு காவிரி நீரை தருவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், இம்மாண்டியா மாவட்ட மக்கள்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். உண்மையைச் சொல்லப்போனால், நான் அங்கிருந்த காலத்தில் தண்ணீர் பிரச்சினை இருந்தது.
நண்பர்கள் சிலர் இங்கு இயற்கை விவசாயம் செய்ததால், தண்ணீர் இன்றி சிரமப்பட்டனர். ஆகையால், தண்ணீரை தேக்கி வைக்கும் பொறுட்டு, தனது பாசன இடத்தில் குளம் ஒன்றை உருவாக்கி னார்கள்.
ஜெயலலிதா சிறு குழந்தையாக இருந்த போது நாட்டியம் கற்றுக் கொடுத்த முதல் நாட்டிய குருவான திரு. லஷ்மி தாத்தாச்சாரியார் இவர்தான்.
ஜெயலலிதா தமிழரே தாய்மொழி தமிழே
ஜெயலலிதா தமிழரே தாய்மொழி தமிழே
ஜெயலலிதா தனது நாட்டியத்தின் மூலம் வாழ்வைத் தொடங்கி, நாட்டையே ஆண்டதால், அதற்கு ஆரம்ப கால குருவாக இருந்தவர், எனக்கும் நன்றாக தெரிந்தவர் என்பதால், உங்களுக்கு அறிமுகப் படுத்த வேண்டியதாயிற்று.
உண்மையில் இவர், நம் வாசகர்களாக உள்ள உங்களுக்கும் அறிமுகம் ஆனவர்தான் என்றால், வியப்பின் உச்சிக்கே கூட போவீர்கள்.
ஆமாம், இந்த லஷ்மி தாத்தாச்சாரியாரைப் பற்றி, ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’நூலின் பக்கம் 293 – 294 இல் கீழ்கண்டவாறு எழுதி இருக்கிறேன்.
// ஆமாம், கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டத்தில் உள்ள மேல் கோட்டையில் 1978 ஆண்டில், சொசைட்டி பதிவுச்சட்டத்தின்படி தோற்றுவித்து இயக்கி வந்த சமஸ்கிருத அகாடமியின் இயக்குனர் திரு. லக்ஷ்மி தாத்தாச்சாரியாரை, 2004 ஆம் ஆண்டில் இப்படித்தான் வெளியேற்றி விட்டார்கள். இப்படி வெளியேற்றப்பட்டவர் சட்டப் படி பிரச்சினை ஏதும் செய்யக்கூடாது அல்லவா?
அதற்காக, அவர் கோடிக்கணக்கில் ஊழல் செய்ததாக அம்மாவட்டப் பதிவாளரால் குற்றப்பத்திரிகையை கொடுக்க வைத்து, அதனைப் பத்திரிகைகளுக்கும் வழங்கிவிட, அவைகளும் உலகறியச் செய்தியாக வெளியிட்டதால், தன்வாழ்வை முடித்துக் கொள்ளும் எண்ணத்திற்கே சென்றுவிட்டார், 73 வயது அப்பண்டிதர்.
இத்தனைக்கும் இவர், சாதாரணமாக அம்மாநில ஆளுநர், நம்ம அதிகார துஷ்பிரயோகி அப்துல்கலாம் மற்றும் ஓய்வுற்ற உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியான வெங்கடாச்சலய்யா போன்ற பிரபலங் களுடன் நேரடியாகவே பேசுமளவிற்கு நட்பை பெற்றவர். இருந்தும் என்ன பயன்? 
இது சம்பந்தமாக 2011 இல், எனது சட்ட ஆலோசனையை, நண்பர் ஒருவரின் மூலமாக நாடிக் களமிறங்கியதில், சில கோடிகளிலிருந்த ஊழல் குற்றச்சாற்றுகள், சில இலச்சங்களாகக் குறைந்து விட்டன. மேலும், இவரிடமிருந்து நாம் தப்பித்தால் போதுமென்கிற நிலைக்கு, எதிர்த்தரப்பினர் சென்றுவிட்டனர்.
எது எப்படி இருந்தாலும், இதுபோன்ற முக்கியப்பொறுப்பில் உள்ள பெரும்பாழானோர்க்குச் சட்ட விழிப்பறிவுணர்வு இருப்பதில்லை என்பதை நன்குணர்ந்தே, இப்படிப்பட்ட சதித்திட்டங்களை தீட்டு கிறார்கள்.
இவர்களுக்கு நாம் எவ்வளவுதாம் சட்ட விழிப்பறிவுணர்வை ஏற்படுத்த முயற்சித்தாலும் அ(வ்வ)ளவாக வெற்றிபெறமுடியாத அளவிற்கு, அவர்களது பிரத்தியேக வழியிலேயே அறிவைப் பயன் படுத்தியும், பக்குவப்படுத்தியும் வைத்திருப்பதால் முடிவதில்லை.
ஆகையால், அவ்வப்போது பொய்யர்களை நம்பியே செயல்பட வேண்டியிருக்கிறது. இதனால், அப்பொய்யர்களையும், நிதிபதி களையும் எதிர்த்தரப்பினர் எளிதாக விலைக்குவாங்கி, இவரது நியாயத்தைத் தோற்கடித்து விடுவதால், இவரால் தன்மீதான குற்றச்சாற்றுகளை ஓரளவிற்கு எதிர்கொள்ள முடிகிறதே தவிர, பெரிதாகச் செய்ய வேண்டிய மீட்பு மற்றும் காப்புக் களப்பணிகள் எதையுமே செய்ய முடிவதில்லை.
இப்பிரச்சினை குறித்து அக்கறை கொள்ளவேண்டிய இருவரிடம் களமிறங்கும்படி பேசினேன். இவ்விருவரில் ஒருவர் நினைத்தால், சம்பந்தப்பட்ட எல்லோரையும் உண்டுயில்லை எனச் செய்துவிட முடியும். ஆனால், அவர் ஏனோ கண்டுகொள்ளவே இல்லை. மற்றொ ருவரே, என்னைவிட அவரொன்றும் சிறந்த பண்டிதரில்லை என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டார். ‘முட்டாள்கள் பிரிவதில்லை; அறிவாளிகள் சேர்வதில்லை’ என்பது இதுதான். ஜெயலலிதா தமிழரே தாய்மொழி தமிழே
இதில், விசித்திரம் என்னவென்றால், இப்பண்டிதர்கள் மூவருமே சட்ட விழிப்பறிவுணர்வுக்கென நாடியது, நாடுவது நம் நீதியைத் தேடி… நூல்களையே! //
இதில் எழுதாத முக்கியமான விசயம், ‘‘சமஸ்கிருதம் என்பது, ஆன்மீகத்திற்கு மட்டும் மட்டும் பயன்படுத்தும் மொழியல்ல; அறிவியல் பூர்வமாக எல்லாவற்றிலும் பயன்படுத்த வேண்டிய மொழி’’ என்பதுதான், இவர் நிறுவிய அகடாமின் அடிப்படை நோக்கம்.
இவருக்கு ஏற்பட்ட சட்டப் பிரச்சனையை, சாதாரணமாக தீர்க்க நான் தயார் செய்த மனுவை, ‘‘மநு வரையுங்கலை!’’ நூலில், பக்கம் 497 முதல் 508 வரை தொகுத்து எழுதி உள்ளேன்.
நமது சட்ட விழிப்பறிவுணர்வின் மீது, அதீத ஆர்வங் கொண்டவர். ஆகையால், அங்கு நான் தங்கி நூலெழுத இடம் கொடுத்தவரும் இவரே!
நான் தொலைபேசியில் எப்போது பேசினாலும், ‘‘எப்போ வர்றேள்’’ என்றுதான் முதலில் கேட்பார். சாதாரணமாக வணக்கஞ் சொன்னால்கூட, கையெடுத்து கும்பிடுவார். இது ஏதோ, அவருடைய சட்டப் பிரச்சினை தீர, நான் காரணமாக இருந்ததால் என்று நினைக்கக் கூடாது.
ஆமாம், சாதாரண மனிதரையும் மதித்து நடப்பவர். அவர்கள் விரும்பி கேட்பதை நேரம் ஒதுக்கி, வீட்டிற்குள் அமர வைத்து பாடம் நடத்துபவர்.
ஆனாலும், நான் ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ நூலெழுதும் பொறுப்பில் இருந்தததால், இவரிடம் இருந்து பெரிதாக எதையும் கற்றுக் கொள்ள முடியாமலேயே போய் விட்டது.
குறிப்பு: அ.தி.மு.க வின் அதிதீவிர தொண்டர் ஒருவர், ‘‘கர்நாடகத்தில் பிறந்த கன்னடரான ஜெயலலிதா, தமிழ்நாட்டு மக்களுக்காக இவ்வளவு பாடுபட்டார்’’ என்று சொன்னதால், இதுபோலவே நிறைய பேர் இருக்கலாம் என்ற எண்ணத்தில், எனக்கு தெரிந்த உண்மையை இந்த ஆக்கமாக எழுதியுள்ளேன். அவ்வளவே!
ஜெயலலிதா தமிழரே தாய்மொழி தமிழே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left