1
ஆயுத பூஜையில் பூஜை செய்யப்பட்ட துப்பாக்கிகள் என் மகன் ரைஃபில் க்ளப்பில் பயிற்சிக்கு பயன்படுத்துவது-அர்ஜன் சம்பத்.பேட்டி அளித்ததை அடுத்து
இந்தியதேசிய லீக்கட்சி தலைவர் தடா.ஜெ. அப்துர் ரஹீம் தலைமையில் இன்று மீண்டும் காவல்துறை டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டது
அந்த மனுவில் அர்ஜூன் சம்பத் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்ததை வரவேற்கும் அதே நேரத்தில்
இதைப்பற்றி தடா.ஜெ.அப்துல் ரஹீம் அவர்கள் தலைமையிலான இந்திய தேசிய லீக் கட்சியினர் காவல்துறையில் புகார் அளித்தனர்……
அதன் அடிப்படையில் அவர் போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் அப்போது அந்த துப்பாக்கிகள் தனது மகன் ரைஃபில் க்ளப் துப்பாக்கி பயிற்சி பள்ளியில் பயன்படுத்தும் துப்பாக்கி என்று ஊடகம் மூலம் வாக்குமூலம் வழங்கியிருந்தார் ……
எனவே கோவை காவல்துறை எஸ்.எல்.ஆர் ரக துப்பாக்கிகளை வைத்து பயிற்சி வழங்கும் சட்டத்திற்க்கு விரோதமான அந்த பயிற்சி பள்ளி எங்குள்ளது என்பதனை கண்டறிந்து அந்த பள்ளியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்…..
மேலும் சட்ட விரோதமான ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்ட அர்ஜுன் சம்பத்துடைய மகன் மற்றும் அவரோடு இன்னும் எத்தனைபேர் பயிற்சி எடுக்கின்றார்கள் என்பதை கண்டறிந்து அனைவரையும் தீவிரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் (UAPA) கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்……
கோவையில் மிகப்பெரிய கலவரத்தை தூண்ட முயற்சித்து வரும் அர்ஜுன் சம்பத்தை 1997 கலவரத்தின் போது காவல்துறை காப்பாற்றியதை போல் மீண்டும் காப்பாற்ற முயற்சிக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது
எனவே இதுபோன்ற பயங்கரவாதிகளை கைது செய்து இந்து மக்கள் கட்சியை தடைசெய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் இன்று காவல்துறை தலைமை இயக்குநரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது..
இவண்:
இந்திய தேசிய லீக் கட்சி
ஊடகப் பிரிவு.
அர்ஜுன் சம்பத்
2
அர்ஜூன் சம்பத் மீண்டும் பல்டி …
என் மகன் துப்பாக்கி சுடும் பயிற்சி பள்ளியில் சேர்ந்து (ரைபிள் கிளப்) பயிற்சி பெற்று வருகிறான். அந்த பயிற்சிக்கு பயன்படுத்தும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுக்கு பூஜை நடைபெற்றது.
திரு.அர்ஜூன் சம்பத் அவர்களே எந்த துப்பாக்கி சுடும் பயிற்சி பள்ளியில் SLR போன்ற அதிநவீன துப்பாக்கிகளை பயன் படுத்தி துப்பாக்கி சுடும் பயிற்ச்சி கொடுக்கின்றார்கள் என உங்களால் சொல்ல முடியுமா …?
இந்திய தேசிய லீக் கட்சி மிக பெரிய போராட்டம் நடத்துவோம் இன்ஷாஅல்லாஹ் …
3
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்கள் மீது IPC 153 (a) மத வேற்றுமை உணர்வை தூண்டும் விதத்தில் செயல் படுதல் 25 (1) (a) ஆயுத சட்டம் ஆகிய பிரிவுகளில்கோவை சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர் …
இந்திய தேசிய லீக் கட்சியின் கோரிக்கையே பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்தது SLR போன்ற அதிநவீன துப்பாக்கி எங்கிருந்து வாங்கினார் என்பது காவல்துறை விசாரித்து அர்ஜுன் சம்பத்தை கைது செய்ய வேண்டுமென்பதே ..
காவல்துறை அர்ஜுன் சம்பத்தை காப்பாற்ற கைது செய்யாமல் கண்துடைப்பு வழக்கு போட்டுள்ளது இதை இந்திய தேசிய லீக் கட்சி வண்மையாக கண்டிக்கின்றது ..
சில ஊடகங்களில் அர்ஜுன் சம்பத்தின் பாதுக்காப்புக்கு நின்ற காவலர் வைத்திருந்த துப்பாக்கி என செய்தி வருகின்றது அது உண்மையா ? அல்லது அர்ஜுன் சாம்பத்தை காப்பாற்ற சில அதிகாரிகள் பொய்யான தகவல்களை ஊடகங்களுக்கு கொடுத்துள்ளனரா ?
எமக்கு ஏற்பட்டுள்ள பல சந்தேகங்களை புகாராக தமிழக காவல்துறை இயக்குனர் அவர்களை இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பாக 13-10-2016 வியாழக்கிழமை காலை 11 மணிக்கு சந்தித்து இது சம்மந்தமாக புகார் அளிக்க உள்ளோம் இன்ஷாஅல்லாஹ் …
அன்புடன்
தடா ஜெ.அப்துல் ரஹிம்
இந்திய தேசிய லீக் கட்சி
மாநில தலைவர் ..
அர்ஜுன் சம்பத்