அமெரிக்க புதிய அதிபர் பதவியேற்றவுடன், அதிரடியாக சிஐஏ, பெண்டகன், எஃப்பிஐ – உயர்மட அதிகாரிகளைச் சந்தித்தார்.
டிரம்ப் – ISIS உடனே ஒழிக்க வேண்டும், நோ டிலே.
சிஐஏ – அது முடியாது சார், நாமதான் அவங்கள துருக்கியோடு சேர்த்து உருவாக்கினோம்
டிரம்ப் – அது ஜனநாயக கட்சி உருவாக்கினது தானே, நமெக்கென்ன
சிஐஏ – அது நாம உருவாக்கினது சார், உங்களுக்கு வேண்டுமோ இல்லையோ அதனால பெட்ரோலியம் கிடைக்கிறது நின்னு போயிடும்.
டிரம்ப் – பாகிஸ்தானுக்கு கொடுக்கும் நிதியை நிறுத்துங்க, இந்தியா கூட டீல் வைங்க.
சிஐஏ – அது முடியாது சார்
அமெரிக்க புதிய அதிபர்
டிரம்ப் – ஏன் முடியாது ?
சிஐஏ – அப்படி செஞ்சா, பாகிஸ்தான் கிட்டே இருந்து பளுச்சிச்தானை இந்தியா பிரிச்சிடும்
டிரம்ப் – அதுபற்றி எனக்குக் கவலை இல்லை.
சிஐஏ – இந்தியா காஷ்மீர்ல அமைதியா கொண்டு வர நினைக்குது, நம்மகிட்டே இருந்து ஆயுதமும் வாங்குறது இல்ல. அவங்க சூப்பர் பவரா மாறிகிட்டு வாராங்க. நாம பாகிஸ்தானுக்கு நிதி கொடுத்தாதான் காஷ்மீர் எப்போதும் பிசியா இருக்கும்.
டிரம்ப் – சரி, தாலிபானை அழிச்சிடுங்க.
சிஐஏ – அதுவும் முடியாது சார், நாமதான் ரஷ்யாவை விரட்டத் தாலிபானை உருவாக்கினோம். இப்ப அவங்க தான் பாகிஸ்தானை எப்போதும் பிசியா வச்சி இருக்காங்க.
டிரம்ப் – மத்திய கிழக்கு நாடுகளில், பயங்கவாரதிகளுக்கு பண உதவி செய்யும் சோர்ஸ்சை நிறுத்த வேண்டும்.
பெண்டகன் – அது முடியாது சார், நாம தான் அவங்கள அப்படி செய்யச் சொன்னோம், அப்பத்தான் அவங்களோட ஆயில் நமக்குக் கேட்டபடி கிடைக்கும்.
டிரம்ப் – ஈரான் மீது படை எடுத்தல் என்ன ?
பெண்டகன் – நாம அவங்க கூட இப்ப பேச்சுவார்த்தை நடத்க்கிட்டு இருக்கோம், அதனால இப்ப முடியாது சார்.
டிரம்ப் – மறைமுகமாதான் அவங்கள காலி பண்ணனும். மேலும், அவங்களுக்கு சப்போர்ட்டா ரஷ்யா வரும். அப்புறம் சிரியாவுல இருக்கிற நம்ம ISISக்கும், இஸ்ரேலுக்கும் எப்போதும் ஈரான் ஒரு எதிரியாவே இருக்கட்டும், அப்பத்தான் நல்லது.
டிரம்ப் – அப்படின்னா, ஈராக்கை மீண்டும் கைபற்றுவோம்,
சிஐஏ – அது தேவையில்லை, நம்ம ISIS ஆளுங்க முக்கால்வாசி இடத்த புடிச்சி வச்சி இருக்காங்க, நாம புடிச்சா என்ன அவங்க புடிச்சா என்ன ?
டிரம்ப் – ஏன் முழு ஈராக்கையும் கைபற்றல?
சிஐஏ – ஈராக்கில நாம வச்சி இருக்கிற டம்மி சியா அரசுக்கு எப்போதும்
ISIS எப்போதும் செக் வச்சிகிட்டே இருக்கணும்.
டிரம்ப் – முஸ்லிம்கள், அமெரிக்காவர நான் தடை செய்யப் போறேன்.
எஃப்பிஐ – அது முடியாது சார்,
டிரம்ப் – ஏன் ?
எஃப்பிஐ – அப்புறம் நம்ம மக்களுக்குப் பயம் இல்லாம போயிடும்.
டிரம்ப் – H1B விசாவை கேன்சல் செய்யப் போறேன்…!
USCIS – அது உங்களால முடியாது?
மூத்த அதிகாரி – அப்படி செய்தா, வெள்ளைமாளிகை நிர்வாகத்தைப் பெங்களூருக்கு மாத்த வேண்டி இருக்கும்.
டிரம்ப் – (வேர்த்து விறுவிறுத்து போயி)அப்பப் பிரசிடெண்டா நான் என்ன செய்ய ?
சிஐஏ – வெள்ளை மாளிகையில நல்லா என்ஜாய் பண்ணுங்க, மத்தத நாங்க பாத்துகிறோம்.
(ஆங்கிலத்தில் தந்தவர் Maheen Kunjappa, thanks)
அமெரிக்க புதிய அதிபர்
Publish Free Ads Classifieds