- ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழ்நாட்டில் ஒரு ஜனநாயக போராட்டமாக மாறிக் கொண்டிருக்கிறது.
- இது வெறுமனே தமிழ் இனப்பற்று சார்ந்த விடயம் அல்ல. தற்போது இடது சாரிகளும் கூடப் போராட்டக் களத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
- இந்தச் சந்தர்ப்பத்தில் தான் இலகுவாக மக்களை அணுகலாம். ஆனால், போராட்டம் முழுவதையும் கைப்பற்றும் அளவிற்கு அரசு விட்டுக் கொடுக்காது
- . இவ்வளவு நாளும் மத்திய அரசின் மேல் பழி போட்டுக் கொண்டிருந்த மாநில அரசு, 360 பாகையில் திரும்பி ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று அவசர சட்டம் போட்டதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்
- .இது மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற போராட்டமாக இருந்தாலும், தீர்க்கமான அரசியலை பேசாத, அல்லது பலவீனமான நியாயப்பாடுகளை கொண்ட ஜனத்திரளுக்குள் ஊடுருவுவது எளிது.
- வலது சாரி சக்திகளின் ஊடுருவல் பற்றி அரசு கவலைப் படப் போவதில்லை. அவர்கள் ஏற்கனவே “ஜல்லிக்கட்டு தமிழரின் பாரம்பரியம்” என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
- வணிக ஊடகங்களும் ஜல்லிக்கட்டை பற்றி மட்டுமே பேசுகின்றன. தமிழ் இன மான உணர்வுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றன.
- அதன் மூலம் பாரவையாளர் எண்ணிக்கையைக் கூட்டிக் கொள்கின்றன. ஆனால், போராட்டக் களத்தில் பலதரப் பட்ட கருத்துக்களும் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன என்ற உண்மையை மூடி மறைக்கின்றன.
- அரசியல் கட்சிகளால் வழிநடத்தப் படாத ஜனத்திரள் எந்த அரசியலையும் உள்வாங்கும் தன்மை கொண்டிருக்கும். ஒரு வாரத்திற்கு மேல் போராட்டம் நீடித்தால் அது அரசுக்கு எதிராகவும் திசை திரும்பலாம்
- . குறிப்பாக இடது சாரிகளின் ஊடுருவல் அரச இயந்திரத்திற்கு சவாலாக இருக்கும். ஆரம்பத்திலிருந்து ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஒழுங்குபடுத்தி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அதை விரும்பவில்லை.
- ஆரம்பத்தில் ஜல்லிக்கட்டு, மாடுகள் என்று மட்டுமே பேசிக் கொண்டிருந்த இளைஞர்கள் மத்தியிலிருந்து, ஏற்கனவே சிலர் சசிகலா, பன்னீர்செல்வம் என்று விமர்சிக்கத் தொடங்கி விட்டார்கள். மோடிக்கு எதிரான கோஷங்களும் கேட்கின்றன. நிச்சயமாக, பெரியாரிய, இடதுசாரிய ஆர்வலர்கள் களத்தில் நிற்கிறார்கள். வீதி நாடகங்கள், புரட்சிகர கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகின்றனர்
- Written By Kalai Marx
இந்த வலைப்பதிவில் தேடு
ஜல்லிக்கட்டு போராட்டம் ஒரு ஜனநாயக போராட்டம்
H I'm Syed Abutahir from Chennai, Addicted to Learn & teaching SEO
ஜல்லிக்கட்டு போராட்டம் ஒரு ஜனநாயக போராட்டம்
Reviewed by Tamilan Abutahir
on
2:58 AM
Rating: 5
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக