- காந்தி பிறந்த இந்திய மண்ணில், காந்தியின் அறவழிப் போராட்டத்தை எள்ளிநகையாடும் வகையில்,
- தமிழக பொலிஸ் வன்முறை அமைந்துள்ளது. “அறவழியில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி!” என்று அரச கைக்கூலிகள் அறிவித்தபின்னர் தான், காவல்துறை தனது சுயரூபத்தை காட்டியது.
- மாணவர்கள்மீது தடியடி நடத்தி, குடிசைகள், வாகனங்களை எரித்து அடாவடித்தனம் புரிந்தது.
பொதுமக்கள்மீதான தாக்குதல்கள் அரசு சொல்ல விரும்பிய சேதி இது தான். “மாட்டுக்காகவும், தமிழுக்காகவும் போராட்டம் நடத்துங்கள், அரசு அதைக் கண்டுகொள்ளாது. ஆனால், உங்கள் போராட்டம் அரசுக்கு எதிராகத் திரும்பக் கூடாது. - அரசியல் பேசக் கூடாது.” அப்படியான கட்டத்தில் அரசு தனது பொலிஸ் ஏவல் நாய்களை அனுப்பி ஒடுக்கும்.
இதன் மூலம், அரசு என்றால் என்ன என்பது, குறிப்பாக நடுத்தர வர்க்க மக்களுக்கு ஓரளவுக்காவது புரிந்திருக்கும். - இது அவர்களுக்கு ஒரு நல்ல அரசியல் பாடம். மக்களை ஒடுக்குவதற்கான அரச இயந்திரத்தின் ஆயுதமே காவல்துறை என்பது தெரிந்திருக்கும்.
- அதே நேரம், முதலாளித்துவ ஊடகங்களின் சுயரூபமும் தெரிந்திருக்கும். ஜல்லிக்கட்டு போராட்டக் காரர்களை பாராட்டிப் புகழ்ந்த அதே விபச்சார ஊடகங்கள், ஒரே நாளில் அவர்களைச் சமூகவிரோதிகள் என்று மாற்றிச் சொன்ன விந்தையை என்னவென்பது?
- குறிப்பாக நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த போராட்டக்காரர்கள், “தேசியக் கொடி பிடித்தால்,
- தேசியகீதம் பாடினால் பொலிஸ் அடிக்காது” என்று நம்புமளவிற்கு அப்பாவிகளாக இருந்திருக்கிறார்கள்
- . “ஜனகண மண” பாடியவர்களுக்கும் அடிவிழுந்துள்ளது. தாம் கொடுத்த உணவைச் சாப்பிட்ட அதே பொலிஸ் தான் தடியடிப் பிரயோகம் நடத்தியது என்பதையும், மாணவர்கள் திருப்பித் தாக்கவில்லை என்றும் அவர்களே வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
- தமிழக காவல்துறையினரின் வன்முறை வெறியாட்டம் நடந்த விதத்தை பார்க்கும்பொழுது, இது முன்கூட்டியே திட்டமிடப் பட்டுள்ளதாகத் தெரிகின்றது.
- பொலிஸ் குடிசை எரித்த காட்சிகள் வீடியோ பதிவாக இருந்தாலும், அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. நாளைக்கு அதைக் காட்டி யாராவது வழக்குப் போடுவார்களே என்ற பயம் கூட இல்லை.
- அதாவது, இனிமேல் காட்டாட்சி தான் என்ற நம்பிக்கையில் காவல்துறை உள்ளது.
- ஓர் அதிர்ச்சி வைத்தியமாக, பொலிஸ் எடுத்த அதிரடி நடவடிக்கையானது, போராட்டத்தில் கலந்து கொண்ட மத்தியதர வர்க்கத்தினரை அச்சுறுத்தி, வீட்டில் முடங்கப் பண்ணும் நோக்கம் கொண்டது. உண்மையில்
- , பொலிஸ் அடக்குமுறையால் பாதிக்கப் பட்டவர்கள் பெரும்பாலும் சேரிகளில் குடியிருக்கும் உழைக்கும் வர்க்க மக்கள்.
போராட்டக் களத்திற்குள் இடது சாரிகள் ஊடுருவி இருந்தமை, அரசைப் பீதியுற வைத்துள்ளது. - ஏனென்றால், பொதுவாக மத்தியதர வர்க்கத்தினர் அறவழிப் போராட்டத்துடன் நின்று விடுவார்கள். ஆனால், உழைக்கும் வர்க்க மக்கள் தான் உயிரைக் கொடுத்துப் போராடுவார்கள்.
- இந்த உண்மை அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களுக்கும் தெரியும். அதனால் தான், உழைக்கும் வர்க்க மக்களை மிரட்டி வைப்பதற்காக, பொலிஸ் சேரிக்குள் புகுந்து அடாவடித்தனம் செய்தது.
- இனிவரும் காலங்களில் இடது சாரி அமைப்புகள்மீதான அடக்குமுறை அதிகரிக்கலாம். சிலநேரம் தடை செய்யப் படலாம். கைதுகள் தொடரலாம்.
- “தமிழ்நாட்டுக்குள் நக்சலைட் ஊடுருவல்” என்று ஒரு சாட்டு சொல்லி, அரச பயங்கரவாதம் நியாயப் படுத்தப் படலாம்.
- அதற்கான அறிகுறிகள் இப்போதே தென்படுகின்றன.
சென்னையில் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய டிஜிபி சைலேந்திர பாபு, CPML, மே 17 போன்ற இடது சாரி அமைப்புகளே வன்முறையை தூண்டியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். - (நாம் தமிழர் என்ற வலது சாரி அமைப்பின் பெயரும் குறிப்பிடப் பட்டது.)
மேலும், - “பெற்றோர் தமது பிள்ளைகளின் மொபைல் போன்களை எடுத்துப் பார்க்குமாறும், “தோழர்” என்று விளிக்கும் எண்களை அழித்து விடுமாறும்” சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார்.
- அதன் அர்த்தம் என்ன? இடது சாரி, அல்லது கம்யூனிசக் கருத்துக்கள் மத்தியதர வர்க்கப் பிள்ளைகள் மனதில் நுழைந்து விடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு தானே காரணம்?
- பெற்றோரே பிள்ளைகளைக் காட்டுக் கொடுக்க வேண்டும்” என்று அதிகார வர்க்கம் எதிர்பார்க்கிறது. அதனால் இதை முதலாளித்துவ வர்க்க குணாம்சம் கொண்ட அரசு என்கிறோம். முதலாளித்துவ கட்டமைப்பை எதிர்த்துப் போராடாமல், வெற்றியை நோக்கி ஓர் அடி கூட நகர முடியாது.
- Written By Kalai Marx
- https://youtu.be/hf80oy0gK3g
இந்த வலைப்பதிவில் தேடு
உங்கள் போராட்டம் அரசுக்கு எதிராகத் திரும்பக் கூடாது.
H I'm Syed Abutahir from Chennai, Addicted to Learn & teaching SEO
உங்கள் போராட்டம் அரசுக்கு எதிராகத் திரும்பக் கூடாது.
Reviewed by Tamilan Abutahir
on
5:59 AM
Rating: 5
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக