பீட்டாவே தமிழர்களின் மிகப் பெரிய எதிரி” என்று படம் காட்டிய தமிழ் இன உணர்வாளர்களே! ஒரு கணம் சிந்திப்பீர். தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி, வீடுகளை எரித்தது, சொத்துக்களை நாசமாக்கியது தமிழக காவல்துறை தான்.
தனித் தமிழ் நாடு கண்டால் இதற்கு தீர்வு வந்து விடுமா? அப்போதும் இதே “தமிழர்களின் காவல்துறை” தானே இருக்கப் போகிறது? தனித் தமிழ் நாட்டில் தமிழ்ப் பொலிஸ் தமிழர்களை அடிக்காதா?
அரச இயந்திரம் என்றைக்கும், எப்போதும் ஒரு ஒடுக்கும் கருவி தான். அது சிங்கள அரசாக இருந்தால் என்ன, தமிழ் அரசாக இருந்தால் என்ன, அடக்குமுறை ஒன்று தான். அடக்கப் படும் மக்களும் ஒன்று தான்.
இது அரசியலில் அடிப்படையான பால பாடம். இந்த நிலைமையை மாற்றுவதற்கு தனித் தமிழ் நாடு கண்டால் மட்டும் போதாது. அதற்கொரு சமூகப் புரட்சி அவசியம். அதைப் பற்றி சிந்தியுங்கள்
Written by Kalai Marx
Copy செய்து #பகிருங்கள்… மெரினா அனைத்து லைவ் வீடியோ கமெண்ட்களிலும் போஸ்ட் செய்யுங்கள்..
044 24951490,
044 24951492,
044 24951493,
044 24951494,
044 24951495.
If police attacked anyone just dial the above Human rights commission, Share this to all….
.
காவல்துறை தாக்கினால் மேற்கண்ட human rights எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்
நெஞ்சுக்குள் நீதி….
நேற்று போலிஸ் அடக்குமுறையை ஏவிவிட்டதும் போராட்டக்களத்தில் தம்பி தங்கைகள்…. கடற்கரையில் முழங்கால் அளவு தண்ணீரில் நின்ற போது மனம் பதபதைத்தது… ஒரு பெரிய அலை வந்திருந்தாலும் என்னவாகியிருக்கும் … அப்போது மீனவர்கள் அருகில் உள்ள குப்பத்தில் இருந்து ஓடி வந்த காட்சி…. அவர்களை விடுங்கள் கடலிலே பிறந்து கடலிலே வாழ்பவர்கள் …. சீமான் அங்கு ஏன் வரவேண்டும் ? அதுவும் கடல் மார்க்கமாக?
மீனவர்கள் வந்ததை பற்றி சிலாகித்து பேசுபவர்கள் இவரை பற்றி வாய் திறக்கவில்லையே…. ஏன்? அரசியலா? பாராட்டி எல்லாம் கூட பேச வேண்டாம்…. சிலர் கேவலமாக எழுதுகிறார்கள்…. அரசியல் பண்ண கடல் மார்க்கமாக சென்று இருக்கவேண்டாம்… பத்திரிக்கை பேட்டி போதுமே…. இல்லை பஸ் மறியல் பண்ணயிருக்கலாமே…. ஏன் அங்கு செல்ல வேண்டும்
பாராட்டவேண்டாம் ….. திட்டாமல் இருங்க….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக