- கடந்த காலங்களில் எப்போதும் இப்படி ஓர் போராட்டத்தை இந்த இந்தியா அரசாங்கம் பார்த்து இருக்காது ஏன் இப்போது உள்ள தமிழக இளைஞர்கள் கேள்வி பட்டே இருக்க முடியாது.
- ஆனால் அந்த மாணவர்கள் தான் இன்று ஒரு புதிய அத்தியாத்தை எழுதி’கொண்டும் நாளைய வரலாற்றுக்கு தங்கள் பங்களிப்பை செய்து கொண்டு இருக்கின்றார்கள் ஜல்லிக்கட்டு மாணவர்கள் போராட்டம்
- அவர்கள் கூடியது நிச்சயமாக ஜல்லிக்கட்டு காகத்தான் ஆனால் இந்த கோவம் இந்த எழுச்சி ஜல்லி கட்டில் மட்டுமா என்றால் இல்லை இது நெடுங்காலமாக அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக இந்த போராட்டத்திற்கு இழுத்து வரப்பட்டு
- இப்பொழுது கிளர்ச்சியாக வெடித்து இருக்கிறது ,கூடி இருக்கும் ஒவொருவரின் கோவமெல்லாம் , கடந்த 4 வருடமாக ஜல்லிக்கட்டு தடை என்று ஆரம்பித்து எப்பொழுது தடை நீங்கும் என்று பொறுத்து இருந்து அந்த தடையே கிடைக்காமல் 4 வருடமாக எல்லா அரசியல் கட்சியும் சேர்ந்து ஜல்லி கட்டை வைத்து அரசியல் தான் செய்தனர் யாரும் எந்த அரசியல் வாதியும் உணர்வு பூர்வமாக இந்த ஜல்லிக்கட்டு பிரச்னையை முன்னெடுக்க வில்லை
- அந்த கோவம் தான் இன்று இந்த கிளர்ச்சியை முன்னெடுக்க வைத்தது கூடி இருக்கும் இந்த மாணவர்கள் மக்கள் கூட்டத்துக்கு யாரும் தலைமை ஏற்கவில்லை ஆனால் அவர்களின் நோக்கம் அனைத்தும் ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்க வேண்டும் என்ற நோக்கம்தான்,
- இப்போது நடந்துகொண்டு இருக்கும் மாணவர்கள் போராட்டம் தன்னிச்சையாக எழுந்த கிளர்ச்சி அடக்கி வைக்க பட்ட உணர்வு அதாவது மக்கள் எந்த ஒரு போராட்டத்தை முன் எடுத்து சென்றாலும் , நீ அந்த ஜாதி தானே அல்லது நீ இந்த மதம் தானே என்று அவர்கள் உணர்வுகளை ஒரு எல்லைக்குள் அடக்கியது
- ஆக இப்போது எல்லாவற்றுக்கும் சேர்த்து ஜல்லிக்கட்டுக்கு மாண்வர்கள் போராட்டம் என்பது ஒரு மைய புள்ளியாக இருக்கிறது
- ஜல்லிக்கட்டு தடை விதிக்க உச்ச நீதி மன்றம் கூறும் ஒரே ஒரு கரணம் தான் அது காளைகளை காட்சி விளங்கு பட்டியலில் சேர்த்தது தான் அப்படி காட்சி விளங்கு பட்டியலில் சேர்த்தது
- இன்று மத்தியில் ஆளும் வர்க்கம் தான் அப்படி ஒரே நாளில் நீங்கள் சட்டம் இயற்றி மற்ற முடியும் போது அதே சட்டத்தை வைத்து காட்சி விலங்கு பட்டியலில் இருந்து காளையை நீக்க முடியாதா ?நீக்கறது தான் ரெம்ப கஷ்டமாக இருக்கிறது சட்டசிக்கல் இருக்கிறது என்றே வைத்துக் கொள்வோம்,
- நீங்கள் காளைகளைக் கட்சி விளங்கு பட்டியலில் சேர்த்தீர்களே அதுல எதாவது லாஜிக் இருக்காயா, அதாவது எப்படி என்றால் சிங்கம் புலி கரடி போன்ற காட்டில் வாழும் விளங்குகளுடன் காளைகளையும் சேர்த்துட்டாங்களாம் என்ன ஒரு முட்டாள் தனமான ஒரு சட்டத்தை நம் அரசியல் வாதிகள் இயற்றி இருக்கின்றார்கள் !
- அதவாது எப்படி என்றால் மாடு வீட்டில் இருக்கலாமாம் ஆனால் களைகள் காட்சி விலங்காம் இது என்ன ப உங்கள் சட்டம் தாயும் கன்னுக்குட்டியும் வீட்டில் இருக்கலாமாம் காளை களை வீட்டில் வைத்து வளர்க்க கூடாதாம் அவர்கள் போட்டு வைத்து உள்ள சட்டப்படி நாம் களைகளை வீட்டில் வைத்து இருப்பதே தண்டனைக்குரிய குற்றம் என்று சொல்கின்றார்கள்
- இப்போது புரிந்து இருக்குமே இதில் உள்ள அரசியலும் வியாபாரமும்,இந்தக் கோபம் தான் இன்று ஜல்லிக்கட்டு மாணவர்கள் போராட்டம் போராட தூண்டி உள்ளது
இந்த வலைப்பதிவில் தேடு
ஜல்லிக்கட்டு மாணவர்கள் போராட்டம் ஒரு புதிய எழுச்சி
H I'm Syed Abutahir from Chennai, Addicted to Learn & teaching SEO
ஜல்லிக்கட்டு மாணவர்கள் போராட்டம் ஒரு புதிய எழுச்சி
Reviewed by Tamilan Abutahir
on
9:17 PM
Rating: 5
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக