ஜல்லிக்கட்டு போரட்டம் மிக அதிகமான ஆதரவையும் எப்போதும் இது கண்டிராத கூட்டத்தை கூட்டி இருக்கிறது .இதற்கு மேல் என்ன எதிர்ப்பு இருந்தாலும் கூட்டம் அடங்காது , இவையெல்லாம் ஒரு புறம் நடந்து கொண்டு இருந்தாலும் அங்கே பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கிறது என்ற கேள்விக்கு இன்று சமூக வலைத்தளத்தில் ஒரு பெண் பதிவு இங்கே தருகிறோம்
இது_ஒரு_சகோதரியின்_பதிவு
3 நாட்களாகப் பகலில் மட்டும் போராட்டத்தில் கலந்து கொண்டேன். நேற்று இரவுப் போராட்டம் தீவிரமடைய அங்கயே இரவு முழுவதும் அமர்ந்திருந்தேன்…
வித்தியாசமான பல கோஷங்கள்.
இளைஞர்களின் உற்சாகம்.
இளைஞர்களின் உத்வேகம்…
“ஏம்மா காலேஜ் கிளம்பிட்டியா… இந்தப் பக்கமா போகாத… பக்கத்துல இருக்குற பொறுக்கி பசங்க போற வரப் பொண்ணுங்கள கிண்டல் பண்ணிட்டு திரியுதுங்க. பாத்து போ”
இந்த மாதிரியான ஆண்களைப் பார்த்துப் பார்த்து ஆண்கள் எல்லாருமே இப்படித்தானோ.? என்ற எண்ணம்…
நம்ம அப்பா கூட அம்மாவ கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி இப்படித்தான் இருந்திருப்பாரு போல. என்றெல்லாம் எண்ண தோன்றும்.
டெல்லி, கேளம்பாக்கம் போன்ற இடங்களில் நிகழ்ந்த கற்பழிப்பு போன்ற கோர சம்பவங்களைக் கேள்விபடும்போதெல்லாம் ஆண்களைப் பற்றிய தவறான எண்ணம் கொழுந்து விட்டு எரியும்.
ச்சா… என்ன ஆண்கள் இவர்கள்…. எப்படி சலித்துக் கொள்வேன்.
ஆனால் நேற்று ஒரு இரவில்., என் தந்தையுடன் அமர்ந்திருந்தேன். இளைஞர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்…
ஒரு பக்கம் மைக்கில் ஒருவர் ஒருவராகத் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படித்தி பேசிக் கொண்டிருந்தார்கள்… கைத்தட்டல் விசில் சத்தமுமாக இருந்தது… ஒருபுறம் வாட்டர் பாக்கெட்டுக்களும், மற்றொரு புறம் இரவு உணவு பொட்டலங்களும் பிஸ்கெட் பாக்கெட்டுக்களும் பறந்து கொண்டிருந்தன…
4 நாட்களாகத் தொடர் போராட்டத்திலும் சற்றும் சோர்வடையாமல் அங்கும் இங்குமாகக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர்.
“சாப்பாடு எல்லாருக்கும் வந்துருச்சா? வரலைன்னா கைய தூக்குங்க”
வியப்பு…
இரத்த உறவு இல்லை… முன் பின் தெரியாது… இப்படியிருந்தும் அவ்வளவு பாசம்…
“பாஸ் நாங்க சாப்பிட்டோம்… சாப்பிடாதவங்களுக்கு கொடுங்க… பர்ஸ்ட் நீங்கச் சாப்பிட்டீங்களா.?”
என்னையும் அறியாமல் கண்கள் கலங்கியது.
ஆயிரம் தந்தைகளுடனும் லட்சக்கணக்கான சகோதர சகோதரியுடனும் ஒருபிடி சாதம் உண்ட உணர்வு எப்படி இருந்தது தெரியுமா.
அப்படி இருந்துச்சு. சொல்ல வார்த்தை இல்லை. சாப்பிட்டு முடிப்பதற்குள் 2 வாட்டர் பாக்கெட்டுகள் என்னிடத்தில்….
லட்சக்கணக்கான ஆண்களைக் கடந்தே இயற்கை உபாதைகளுக்குச் செல்ல நேர்ந்தாலாலும் ஒருவரின் நிழல் கூட என்மீது விழவில்லை…
முதல் முறை எழுந்து செல்லும்போது அப்பா கூடப் பாதுகாப்புக்கு வந்தார்… 2 வது முறை செல்கையில் எழுந்திருக்க முயற்சி செய்த தந்தையின் தோளில் அழுத்தி நீ இங்கயே இருங்க நாப்போயிட்டு வந்துடுறேன்னு சொல்லிட்டு தனியாவே கூட்டத்தில் சென்றேன்…
அன்றைய இரவிலும் கூட அனைத்து ஆண்களும் என் கண்களுக்கு அழகாகவே காட்சியளித்தனர்…
வித்தியாசமான அடுக்குமொழி வசனங்கள்.
விடியும் வரை ஒலித்துக் கொண்டே இருந்தது…
விடியற்காலையில் வீடு திரும்புகையில்
அப்பா வண்டி எடுத்திட்டு வர்றேன். இங்கயே இரு’னு சொல்லிட்டு போனாரு.
குப்பைகளை அகற்ற சில இளைஞர்கள் பைகளுடன் சுற்றி கொண்டிருந்தனர்…
குப்பை அள்ளும் ஒருவன்… என்னைக் கண்டு புன்னகைத்தான்… அவ்வளவு கூட்டத்திலும் என்னை அடையாளம் கண்டு… அப்பா செல்லும் வரை கவனித்திருப்பான் போல.
அப்பா அன்று சொன்ன பொறுக்கி பசங்கள்ல ஒருத்தன்… பதிலுக்கு நானும் புன்னகைத்து அங்கிருந்து நகர்ந்தேன்…
ஆண்களைப் பற்றிய அத்துனை தவறான எண்ணங்களையும் உடைத்தெறிந்தது…
காலை 8.30 க்கு வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்…
தமிழன்டா.
இந்த வலைப்பதிவில் தேடு
ஜல்லிக்கட்டு போரட்டம் எப்போதும் கண்டிராத கூட்டம்
Tags
Tamil Political news
H I'm Syed Abutahir from Chennai, Addicted to Learn & teaching SEO
ஜல்லிக்கட்டு போரட்டம் எப்போதும் கண்டிராத கூட்டம்
Reviewed by Tamilan Abutahir
on
3:35 AM
Rating: 5
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக