- ஜல்லிக்கட்டு தடை வீராவேசம் காட்டி வந்த ஹிப் ஆப் தமிழாவை ஆப் செய்து விட்டார்கள் தேச பக்தகோடிகள்.
- தேசியக் கொடியைக் கீழே போட்டு இழிவுபடுத்தினார்கள், முஸ்லிம்களுக்கு மத்திய அரசு பல விசயங்களில் உரிமை மறுக்கிறது என்று சொல்கிறார்கள்,
- காவிரி பிரச்சினையில் பிரதமர் மோடி துரோகம் செய்து விட்டார் என்கிறார்கள்,
- சொல்லப்போனால் மோடிஜீயை நார் நாராகக் கிழிக்கிறார்கள், சில அமைப்புகள் போராட்டத்தைத் திசை திருப்புகின்றன அதனால்தான் நான் போராட்டத்திலிருந்து வாபஸ் வாங்கி விட்டேன் என்று ஹிப் ஆப் தமிழா ஆதி சொல்ல,
- சபாஷ் நீதான்டா உண்மையான தமிழன் என்று பாஜக எச்சி.ராசா சொல்ல, ஒரே கூத்தும் கும்மாளமுமா கெடக்குது.
- முதலில் ஒன்றை இங்கே புரிந்து கொள்ள வேண்டும், ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டம் மத்திய அரசின் துரோகத்தையும் மாநில அரசின் நாடகத்தையும் எதிர்த்துதான்
- துவக்கப்பட்டது. பீட்டா என்ற அமைப்பிற்கு எதிராகப் போராட்டம் துவக்கப்படவில்லை.
- காரணம் பீட்டா என்ற அமைப்பு ஒரு தனியார் அமைப்பு, அதில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் அனைவரும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலும் உறுப்பினர்களாக உள்ளவர்கள்
- . ஆகப் பீட்டா என்ற அமைப்பு வெறும் பேனர் மட்டும்தான்.
இந்த நிலையில் மத்திய அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த மக்களை இந்த ஹிப் ஆப் தமிழா ஆதி போன்ற சோமாரிகள் உள்ளே புகுந்து என்னவோ பீட்டா என்ற அமைப்புதான் எல்லாவற்ற்கும் காரணம் என்பது மாதிரியும், - மத்திய அரசு ஐஸ் குச்சியைச் சப்பிக் கொண்டு போஸ் கொடுக்கும் சின்னக் குழந்தை மாதிரியும் பீட்டா மட்டும்தான் ஜல்லிக்கட்டை தடை செய்தது மாதிரியும் பீட்டா பீட்டா எனப் பீட்டாவை மட்டும் வில்லனாக்கி மக்களைத் திசை திருப்பி விட்டார்கள்.
- ரயில் நிலையத்தில் வேகமாக வரும் ரயிலை ஸ்டேசனில் ட்ராக் மாற்றி விடுவதைப் போல ஹிப் ஆப் தமிழா ஆதி போன்ற பாஜக புல்லுருவிகள் போராட்டத்திற்குள் புகுந்து மக்களைத் திசை மாற்றி விட்டனர். பீட்டா என்பது வெறும் கிளைதான், அதன் ஆணிவேர் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் என்பதை மக்கள் இப்போதுதான் புரிந்து கொண்டுள்ளார்கள். பீட்டாவைத் தடை செய்தால் அடுத்து டாட்டா என்ற பெயரில் வேறு அமைப்பு வரும். ஆகக் கிளையை வெட்டுவதை விட ஆணி வேரைப் பிடுங்குவதுதான் சரியானது என்பதை உணர்ந்துதான் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீண்டும் போராட்டத்தை மத்திய அரசை நோக்கித் தங்களை போராட்டத்தை மீண்டும் திருப்பினார்கள்.
- தேசியக் கொடியை அவமதித்தார்கள் என்று ஆதி சொல்கிறார். ஆனால் மரத்தமிழர்கள் எப்போதும் தேசியக் கொடியை அவமதித்தார்கள் என்று சொல்வதெல்லாம் பச்சைப் பொய். தேசியக் கொடியைத் தலைகிழாக ப்ரொபைலாக வையுங்கள் என்று சிலர் சொன்னார்கள்,
- அதைத்தான் அவமதித்து விட்டார்கள் என்று சொல்கிறார் ஆதி. இது அவமதிப்பது அல்ல! நாட்டு மக்களின் கொந்தளிப்பில் எழுந்த ஒரு வகையான எதிர்ப்பு. இதைத்தான் ஆதி அவமரியாதை என்கின்றார்.
- ஆனால் இன்றைக்கு அவர் போய்ச் சேர்ந்திருக்கும் இடத்தில் உள்ளவர்கள் அதே தேசியக் கொடியை விரித்து வைத்துச் சீட்டு விளையாடினார்களே! அதைக் கேட்டாரா?
- பிரதமர் மோடி தேசியக் கொடியில் முகம் துடைத்தாரே! அதைக் கேட்டாரா?
- மலேசியாவிற்கு உல்லாசப் பயணம் சென்ற இடத்தில் இந்தியாவின் தேசியக்கொடி தலைகீழாக இருந்ததை ஜப்பான் நாட்டு அதிபர் சுட்டிக் காட்டி கொட்டு வைத்தாரே! அது அவமரியாதையாகத் தெரியவில்லையா?
- ஹிப் ஆப் தமிழா ஆதியைப் பாராட்டும் எச்.ராசா உறுப்பினராக இருக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அலுவலகங்களில் இன்றுவரை தேசியக் கொடியை ஏற்றக் கூடாது என்ற கொள்கை வைத்துள்ளார்களே! அது அவமரியாதையாகத் தெரியவில்லையா ஹிப் ஆப் தமிழா ஆதி?
- பாவம் நீலச்சாயம் வெளுத்துப் போன நரியைப் போல ஹிப் ஆப் தமிழா ஆதியின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது.
அஹ்மத் கபீர்.
இந்த வலைப்பதிவில் தேடு
ஜல்லிக்கட்டு தடை வீராவேசம் காட்டி வந்த ஹிப் ஆப் தமிழா
H I'm Syed Abutahir from Chennai, Addicted to Learn & teaching SEO
ஜல்லிக்கட்டு தடை வீராவேசம் காட்டி வந்த ஹிப் ஆப் தமிழா
Reviewed by Tamilan Abutahir
on
11:46 PM
Rating: 5
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக