- லெனின் பற்றிய கட்டுரை எழுதியது கலை மார்க்ஸ்
- பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்ற சொற்பதத்தை, ட்ராஸ்கிஸ்டுகள் “பாட்டாளிவர்க்க ஜனநாயகம்” என்று திரித்து சொல்லி வருகின்றனர். இது சர்வாதிகாரம், ஜனநாயகம் போன்ற சொற்களுக்கு முதலாளித்துவம் கொடுக்கும் விளக்கத்தை அனுசரித்துப் போவதாக உள்ளது.
- ட்ராஸ்கிஸ்டுகள் எப்போதும் தம்மை லெனினிஸ்டுகள் என்றும் சொல்லிக் கொள்வார்கள். ஆனால், அவர்களது அரசியல் கொள்கைக்கும் லெனினின் கொள்கைக்கும் நிறைய முரண்பாடுகள் உள்ளன. அந்தக் காலத்தில் லெனினுடன் கருத்து முரண்பாடு கொண்ட மென்ஷெவிக் என்ற சமூக ஜனநாயகவாதிகளின் கொள்கையும், ட்ராஸ்கிஸ்டுகளின் கொள்கையும் ஒன்று தான்.
- “சர்வாதிகாரப் பிரச்சினையின் வரலாற்றைப் பற்றி” என்ற தலைப்பில் லெனின் எழுதிய சிறிய நூலில், சர்வாதிகாரம் என்ற சொல்லுக்கு முதலாளியவாதிகளின் விளக்கத்தை மறுத்துரைக்கிறார். அந்த வகையில், அப்போது மென்ஷெவிக்குகள் தன் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கும் பதில் சொல்கிறார்.அதாவது, “ஆட்சிக்கு வந்தால் தான் ஒரு சர்வாதிகாரியாக நடந்து கொள்வதற்காகவே, லெனின் இப்போதே சர்வாதிகாரம் பற்றி பேசி வருகின்றார்…” என்று மென்ஷெவிக் பத்திரிகைகளில் குற்றம் சாட்டினார்கள். (இதையும் லெனின் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.) லெனின் அந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் கூறுவதற்காக, சர்வாதிகாரம் தொடர்பாக மார்க்ஸின் கூற்றுக்களையும் எடுத்துக் காட்டி இருக்கிறார்
கொச்சையான முதலாளித்துவக் கருத்தோட்டத்தின் படி சர்வாதிகாரம், ஜனநாயகம் என்ற சொற்கள் ஒன்றுக்கொன்று எதிரானவை. வர்க்கப் போராட்டத் தத்துவத்தை புரிந்து கொள்ள முடியாமல்அ. - ரசியல் களத்தில் பல்வேறு முதலாளித்துவக் குழுக்கள், கோஷ்டிகளின் அற்பத்தனமான சச்சரவுகளையே பார்த்து அனுபவப் பட்ட முதலாளித்துவ வர்க்கத்தினர்.
- சர்வாதிகாரம் என்றதுமே ஜனநாயகத்தின் உரிமைகள், உத்தரவாதங்கள் ரத்துச் செய்யப் படுவதையும், ஒரு சர்வாதிகாரியின் தனிப்பட்ட நலனுக்காக எல்லா வகையான சர்வாதிகாரங்களும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் எல்லா வகையான அத்துமீறல்களையுமே புரிந்து கொள்கின்றனர்.
- உண்மையில் இந்தக் கொச்சையான முதலாளித்துவக் கருத்தையே மென்ஷேவிக்குகளிடம் பார்க்கிறோம்.// – லெனின்
(சர்வாதிகாரப் பிரச்சினையின் வரலாற்றைப் பற்றி)
லெனின் பற்றிய கட்டுரை எழுதியது கலை மார்க்ஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக