- அன்பார்ந்த மாணவர்களே, இளைஞர்களே,
ஓர் அறப் போராட்டம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை நாடு முழுமைக்கும் நீங்கள் காட்டியிருக்கிறீர்கள். - கடந்த ஒரு வாரக் காலமாக எந்தவொரு அசம்பாவித சம்பவமும் இல்லாமல், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் போராட்டத்தை நடத்திக் காட்டியிருக்கிறீர்கள்.
- இது தமிழக வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றிலேயே குறிப்பிடத் தக்க போராட்டமாக இடம் பெறும் என்பது நிச்சயம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என வயது வித்தியாசமின்றி இப்படி ஒன்றுபட்டு நின்று போராடியதற்கு முன்னுதாரணம் ஏதும் இருக்கிறதா என்று தெரியவில்லை. அதற்காக உங்கள் அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
- போராட்டத்தின் துவக்கத்தில் ஜல்லிக்கட்டு மட்டுமே கோரிக்கையாக இருந்தது, பிற்பாடு அது பல்வேறு பிரச்சினைகளையும் உள்ளடக்கியதாக மாறியது.
- காவிரி நீர், விவசாயிகள் தற்கொலை, நீட் நுழைவுத் தேர்வு எனப் பல பிரச்சினைகளுக்காகவும் குரல்கள் எழுந்தன. அனைத்துக்கும் மையமாக ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதி என்ற கோரிக்கையே இருந்தது.
- உங்கள் கோரிக்கையின்படி அரசு இறங்கிவந்து, மத்திய அரசுடன் கலந்து பேசி, ஓர் அவசரச் சட்டத்தை இயற்றி ஜல்லிக்கட்டை நடத்த வழிசெய்து விட்டது. ஆக, உங்கள் போராட்டத்துக்கு நேற்றே வெற்றி கிட்டி விட்டது.
- இந்தச் சூழலில் போராட்டத்தை நிறுத்தாமல் பொதுமக்களை வாட்டும் மிக முக்கிய பிரச்சனைகள் குறித்தும் நீங்கள் கவனம் செலுத்த ஆரம்பித்தது உங்கள் நல்ல மனதைக் காட்டும் அடையாளமாகவே பார்க்கிறோம்
- . ஆயினும், இது மிகவும் அபாயகரமான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.
எந்தவொரு போராட்டத்தையும் எப்போது நடத்த வேண்டும் என்பது மட்டுமல்ல, எப்போது முடித்துக்கொள்ள வேண்டும் என்பதும் முக்கியமான ஒன்றாகும். - அது தவறிப்போகும்போது, போராட்டத்தைச் சீர்குலைக்க நினைக்கும் சக்திகள் உள்ளே நுழையக்கூடும். அதன் காரணமாகத் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலை ஏற்படக்கூடும். அதன் பின்விளைவாகத் தமிழக அரசியல் சூழலே மாறக்கூடும்
- . அதனினும் முக்கியமாக, இத்தனை நாளும் அமைதியாகப் போராடியது எல்லாம் விழலுக்கு இழைத்த நீராகப் போகும்.
- நாட்டுக்கே முன்னுதாரணமாக நடைபெற்ற போராட்டம் என்பதெல்லாம் மறந்து போகும்,
- கடைசியில் நடந்த கசப்பான சம்பவங்கள் மட்டுமே நினைவில் பதியும்.
- ஆகவே, மாணவர்கள், இளைஞர்கள் தமது போராட்டத்தை இத்துடன் நிறுத்திக்கொண்டு இல்லம் திரும்புமாறு வேண்டுகிறோம்.
- உங்கள் முன்னே போராடுவதற்கு நிறையவே பிரச்சினைகள் இருக்கின்றன. இப்போது போராட்டத்தை முடித்துக்கொள்ளுங்கள்.
- இந்தப் போராட்டத்தில் கிடைத்த அனுபவங்களை மதிப்பிடுங்கள், பரிசீலியுங்கள்,
- எதை இன்னும் செம்மைப்படுத்தியிருக்கலாம், எதை இன்னும் தீவிரப்படுத்தியிருக்கலாம், வெற்றி கிடைத்தது எதனால் என்று யோசியுங்கள்.
- இன்னும் தெளிவடையுங்கள். அடுத்த போராட்டத்தில் இன்னும் தெளிவான கோஷங்களுடன், இன்னும் வீரியத்துடன் இறங்கலாம்.
- இந்த நாட்டின் எதிர்காலம் நீங்கள்தான். எதிர்காலத்தை அனுபவிக்கப் போகிறவர்கள் மட்டுமல்ல, தீர்மானிக்கப் போகிறவர்களும் நீங்கள்தான்.
- உங்கள் செயல் இனி வரும் தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும், ஒரு பாடமாக இருக்க வேண்டும். கசப்பான நினைவுகளின் பதிவாக இருந்துவிடக் கூடாது.
- நீங்கள் அடைந்திருப்பது உண்மையான – முழுமையான வெற்றி. அவசரச்சட்டமும், அதன் அடிப்படையில் சட்ட சபையில் நிறைவேற்றப்பட இருக்கிற சட்டமும் முழுமையானவை. உங்கள் கோரிக்கையை எந்தக் குறைவுமின்றி நிறைவேற்றக்கூடியவை.
- தகுந்த நேரத்தில் நீங்கள் செயல்பட வேண்டியது இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் எவ்வளவு முக்கியமோ அதுபோலத் தகுந்த நேரத்தில் நீங்கள் உங்கள் செயல்பாட்டைத் தற்காலிகமாய் நிறுத்தி வைப்பதும் மிக மிக முக்கியம்.
- இதனைப் புரிந்து கொண்டு, இத்தனை நாட்களும் உங்கள் போராட்டத்திற்கு ஆதரவளித்த, உங்களை நம்பியிருக்கும் பெற்றோர்,
- குடும்பத்தினரின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்வதற்காக, போராட்டத்தை முடித்துக்கொண்டு, இயல்புநிலைக்குத் திரும்புமாறு வேண்டுகிறோம்.
- இப்படிக்கு
உங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும்
நாளைய தமிழகம்
# வழக்கத்துக்கு மாறாக டேக் செய்வதற்கு நண்பர்கள் மன்னிக்கவும். அதிமுக்கியம் என்பதால் செய்கிறேன்.
# இது சரியென்று உடன்பட்டால் உடனே உங்கள் காலக்கோட்டில் காபி பேஸ்ட் செய்து பகிரவும்.
– Shan Karuppusamy
இந்த வலைப்பதிவில் தேடு
மாணவர்களே அறப் போராட்டம் எப்படி நடத்தப்பட வேண்டும்?
H I'm Syed Abutahir from Chennai, Addicted to Learn & teaching SEO
மாணவர்களே அறப் போராட்டம் எப்படி நடத்தப்பட வேண்டும்?
Reviewed by Tamilan Abutahir
on
4:17 AM
Rating: 5
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக