- ஜல்லிக்கட்டுக்கு பின்னால் உள்ள என்.ஜி.ஓ. க்கள், நிலவுடமையாளர்கள், மற்றும் ஆதிக்க சாதியினர் பற்றிய விபரம்இதுவும் ஒருவகையில் சிந்திக்க வேண்டிய கருத்து
- ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ் போன்ற கார்ப்பரேட் சாமியார்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளனர் என்பதற்கு தொலைக்காட்சி நேர்காணல்களும், அவர்களது ட்விட்டர் பக்கங்களும் ஆதாரமாக உள்ளன.
- பீட்டா என்ற பன்னாட்டு என்.ஜி.ஓ வுக்கு இணையாகப் பல நாடுகளிலும் கிளை பரப்பிச் செயல்படும், பிக்கி BICCI என்.ஜி.ஓ வும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் பல ஆண்டுகளாகப் பணியாற்றியிருக்கிறது.
- அந்த அமைப்பின் தலைவர் சீனிவாசன் ஒரு பார்ப்பனர். பொறுப்பாளர்களாகக் காங்கேயம் காளை ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் கார்த்திகேய சிவசேனாதிபதி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.வி.சாமி நாதன் அவர்களின் பேரன் எனப் பல பெரும் பணக்காரர்கள், நிலவுடைமையாளர்கள், இடைநிலைச்சாதி ஆதிக்கவாதிகள் உள்ளனர்.
- BICCI மட்டுமல்லாமல், Care and Welfare, JustVolunteerIndia, Arappor, thozhan, LitTheLight, thuvakkam, Dhagam ஆகிய என்.ஜி.ஓக்களும், இன்னும் வெளியில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாத சில என்.ஜி.ஓக்களும் கடந்த நான்கு? பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே ஆதரவைத் திரட்டியுள்ளனர். Bicci அமைப்பும், காங்கேயம் காளை ஆராய்ச்சி நிலையமும் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.டி. நிறுவனங்களில் பரப்புரை நடத்தியுள்ளன. பல்வேறு நாடுகளிலும் லாபி செய்துள்ளன
- நாம் தமிழர், நாங்கள் தமிழர்கள் என்பவை போன்ற தமிழ்த்தேசிய அமைப்புகளும் பணியாற்றியுள்ளன. உலகத் தமிழ் அமைப்புக்கும் இதில் பங்குண்டு.
- கடந்த பல ஆண்டுகளாகத் தமிழ் சினிமாக்களில் காமெடியன்களாக நடித்துக் கொண்டிருந்த துக்ளக் சோ, எஸ்.வி.சேகர் போன்றவர்கள் காரியக் கிறுக்கர்களாக இருந்தனர் என்பதை நாம் பார்த்திருப்போம்.
- இது டிஜிட்டல் காலம். காமெடியன்கள் டிஜிட்டல் அவதாரம் எடுத்துள்ளனர்.
- Chennai Memes, Smile Settai, Put Chutney என்று பல முகங்கள் எடுத்து, இவைகளை வைத்து இக்கால ஆப்ஸ் தலைமுறையைச் சிரிக்க வைக்கின்றனர்.
- சோ, சேகர் வகையறாக்களைப் போலவே, இந்து மதத்தைக் காப்பாற்றுவதில் முன்னணியில் நிற்கின்றனர்.
- ஜல்லிக்கட்டு என்ற இந்து ஆணாதிக்க, ஜாதி ஆதிக்கப் பண்பாட்டு விழாவைச் சமூக வலைத்தளங்கள் வழியாக மிகத்தீவிரமாகப் பரப்பினர்.
ஜல்லிக்கட்டை எதிர்ப்பது, ஆதரிப்பது என இரண்டு நிலைகளிலும் ஜல்லிக்கட்டுக்கு பின்னால் பார்ப்பனத் தலைமையிலான தொண்டு நிறுவனங்களும், பார்ப்பனக் கார்ப்பரேட் சாமியார்களும், அவர்களின் மறைமுகத் தொண்டர்களும், இடைநிலைச்சாதி வெறியர்களும் சம அளவில் இருக்கின்றனர். - பணமதிப்பு நீக்கம், பணமதிப்பு நீக்கத்தால் அழிவைச்சந்திக்கும் நாட்டின் பொருளாதார நிலை,
- மிரட்டும் தண்ணீர்ப்பஞ்சம், பருவமழை பொய்ப்பு, ஆற்றுமணல் கொள்ளை, நீர்நிலை ஆதாரங்கள் அழிப்பு போன்றவற்றால் அழிந்து வரும் விவசாயம், தற்கொலை செய்து கொள்ளும் விவசாயக்குடும்பங்கள்,
- மண், மரம், நீர் வள அழிப்புகள் போன்றவற்றிற்கு எதிராக நாம் அணிதிரளாமல், நமது கவனம் அங்குச் செல்லாமல் பார்த்துக்கொள்ள, பார்ப்பன – பன்னாட்டு நிறுவனங்கள் – பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்கள் – இந்திய தரகு முதலாளிகள் – பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகள், ஆர்.எஸ்.எஸ் – தேசிய இன உணர்வுக் குழுக்கள் – ஜாதிவெறிக் குழுக்களின் கூட்டுத்திட்டங்கள் தான் ஜல்லிக் கட்டுக்குத் தடையும், தடையை நீக்க நடக்கும் போராட்டங்களும்.//
(Whats app ல் பகிர்ந்து கொள்ளப் பட்ட தகவல்.) ஜல்லிக்கட்டுக்கு பின்னால் - பீட்டா இந்திய மண்ணை விட்டு விரைவில் காலியாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக