பீட்டா என்பது சந்தேகத்திற்கு இடமின்றி விளங்குகளிற்கு எதிரான ஒரு தீவிரவாத ? அமைப்புதான் இது வெறுமனே பீட்டா மீது உள்ள தனிப்பட்ட காழ்புணர்ச்சியோ அல்லது தனிப்பட்ட பீட்டா எதிர்ப்புக்காகவோ அல்ல, இதோ படியுங்கள் மற்றும் ஒரு தெளிவான பதிவ ,ஆனந்த விகடன் முதலில் நமது தளத்தில் தான் இதை பற்றித் தெளிவாக எழுதி இருந்தோம், அதற்கு முன்பு எந்த ஒரு பலம் வாய்ந்த பிரபலமான ஊடகமும் தமிழில் முதலில் வெளிப்படுத்தவில்லை, 18/1/2017 அன்று பதிவிட்டு இருந்தோம் ஆகவே நிச்சயமாகப் பீட்டா தடை செய்ய வேண்டிய அமைப்புதான்
தமிழக இளைஞர்களுக்குள் இருந்த போராட்ட குணத்தையும், இன உணர்வையும் வெளிக் கொண்டு வர முக்கிய பங்காற்றிய பீட்டா அமைப்பு தன்னை விலங்குகள் உரிமைக்காக போராடும் அமைப்பு என உலகம் முழுவதும் அடையாளப்படுத்திக் கொள்கிறது. ஆனால் அது அடையாளம் அல்ல, பீட்டாவின் ரத்த சாயம் பூசிய முகமூடி என்று அதிர்ச்சித் தகவல்களை போட்டு உடைக்கிறது Peta Kills Animals(PKA) என்ற அமைப்பு. பீட்டா எப்படி ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பாக உலகம் முழுவதும் இயங்கி வருகிறதோ, அதே அளவு பலத்துடன் Peta Kills Animals(PKA) அமைப்பும் பீட்டாவை எதிர்த்து முழு வீச்சில் இயங்கி வருகிறது.
அமெரிக்காவின் விர்ஜீனியாவில் பீட்டாவின் தலைமையகம் உள்ளது. இங்கு ஆதரவற்ற விலங்குகளுக்கான காப்பகத்தை இயக்கி வருவதாக பதிவு செய்திருக்கிறது பீட்டா. இங்கு தான், கடந்த 1978-ம் ஆண்டு முதல் 2015 வரை 27 ஆண்டுகளில் மட்டும் 34,970 நாய் மற்றும் பூனைகளை கொன்று குவித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியிடுகிறது (PKA).
விர்ஜீனியாவின் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம், மேற்கூறிய ஆண்டுகளில், பீட்டா எத்தனை விலங்குகளை எடுத்துக் கொண்டுள்ளது, அதில் எத்தனை விலங்குகளை வேறு காப்பகங்களுக்கு மாற்றியுள்ளது, தத்துக் கொடுக்கப்பட்டுள்ளது, எத்தனை கருணை கொலை செய்யப்பட்டது போன்ற தகவல்கள் பெறப்பட்டுள்ளது. அதில் கிடைத்த தகவல்கள் ஒவ்வொன்றும் அதிர்ச்சி ரகம்.
பீட்டாவுக்குள் நுழைந்த 40,328 நாய் மற்றும் பூனைகளில், 5468 மட்டுமே உயிருடன் வெளியே சென்றிருப்பது தெரியவந்துள்ளது. நாய் மற்றும் பூனைகளை சேர்த்து கொல்லப்பட்டவை மொத்தம் 34,970. அதாவது, பீட்டாவுக்குள் வரும் 87 – 90% விலங்குகள் கொல்லப்பட்டுள்ளன.
அந்நாட்டு சட்டப்படி, ஆதரவற்றதாக கருதப்படும் விலங்குகளை 15 நாட்களுக்கும் மேலாக யாரும் சொந்தம் கொள்ளவோ, தத்தெடுக்கவோ வராவிட்டால் கருணை கொலை செய்யலாம் என்கிறது. ஆனால், இந்த விதிமுறையை பீட்டா பின்பற்றவே இல்லை என்பது பட்டவர்த்தனமாக தெரியவந்துள்ளது. பீட்டா தலைமையகத்துக்கு கொண்டு வரப்பட்ட 84% விலங்குகள், 24 மணி நேரத்துக்குள் கொலை செய்யப்பட்டுள்ளன. இதனை கருணை கொலை என்கிறது PETA
கொண்டு வரப்பட்ட விலங்குகள் எதுவும் உடல் நலம் பாதிக்கப்பட்டவையோ, காயமடைந்து உயிருக்கு போராடும் வகையில் இருந்ததாகவோ பீட்டா கூறவில்லை. 15 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலையில், 24 மணி நேரத்துக்குள் விலங்குகளை கொலை செய்ய அப்படி என்ன தேவை வந்தது என்பதற்கு பீட்டாவிடம் பதில் இல்லை. ஆக, நன்றாக இருந்த நாய் மற்றும் பூனைகளை ஏன் பீட்டா! கொல்ல வேண்டும்?.
சரி கருணை கொலை செய்ததாகவே வைத்துக் கொள்வோம். சோறு போடும் சாமியாக தமிழர்கள் கருதும் காளைகளையும், அவற்றை சிறப்பிக்க நடத்தும் திருவிழாவான ஜல்லிக்கட்டையும் துன்புறுத்தல் என்று கூறும் பீட்டா அமைப்பு, கருணை கொலைக்கு பதில் அந்த விலங்குகளை காப்பாற்றுவதற்கான வழியை மேற்கொண்டிருக்கலாமே. இதை செய்வதற்கு பீட்டாவிடம் நிதி உதவி இல்லை என்று கூற முடியாது. உலகம் முழுதும் 3 கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள சினிமா மற்றும் விளையாட்டுத் துறை பிரபலங்களை இவர்கள் விளம்பரத் தூதர்களாக நியமிக்கிறார்கள். பல லட்சம் சம்பளம் வாங்கும் வழக்கறிஞர்களை வைத்து, வழக்குகள் நடத்த பல நூறு கோடிகளை செலவிடுகிறார்கள். அக்கவுண்டில் பல்க்காக பணம் வைத்திருக்கும் அந்த அமைப்புக்கு நாய், பூனைகளை காப்பாற்ற எவ்வளவு செலவாகி இருக்கப் போகிறது.
பீட்டாவின் நோக்கம் விலங்குகள் நலன் இல்லை, அதையும் தாண்டி அதில் வேறு ஏதோ காரணம் இருப்பதாக PKA அமைப்பு சந்தேகிக்கிறது. அதற்கும் ஒரு எவிடென்ஸை காட்டுகிறது அந்த அமைப்பின் இணையதளம்.
2010-ம் ஆண்டு, பீட்டாவிடம் நாய் ஒன்றை ஒப்படைக்க விர்ஜீனியாவை சேர்ந்த பெண் ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் “நாங்கள் எந்த விலங்கையும் ஏற்றுக் கொள்வதில்லை” என்று அதன் நிர்வாகிகள் பதிலளித்துள்ளனர். உடனே அந்த பெண், இந்தத் தகவலை விர்ஜீனியா விவசாயம் மற்றும் வாடிக்கையாள சேவை மையத்திடம் புகாராக தெரிவிக்கிறார்.
“தாங்கள் விலங்குகள் காப்பகத்தை நடத்தி வருவதாக பதிவு செய்துள்ள பீட்டா ஏன் இப்படி சொல்ல வேண்டும்” என்று யோசித்த அதிகாரிகள், பீட்டா தலைமை அலுவலகத்துக்கு திடீர் விசிட் அடித்தனர்.அந்த ஆய்வு பற்றிய அறிக்கையை டேனியல் கோவிச் என்ற அதிகாரி சமர்ப்பித்திருக்கிறார். அந்த அறிக்கையும் அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.
அதில் “ பீட்டாவின் வரவேற்பாளர், தாங்கள் எந்த வித விலங்குகளுக்கு அடைக்கலம் கொடுப்பது இல்லை என்று கூறியுள்ளனர். கீழ் மட்டத்தில் உள்ள அதிகாரிகளும் இதே பதிலை தந்தனர். ஆனால் சற்று நேரம் கழித்து வந்த, உயர் அதிகாரி ஒருவர், அங்கிருந்த மூன்று அறைகளைக் காட்டி இவற்றில் தான் விலங்குகள் பாதுகாக்கப்படுவதாக கூறினார். அந்த மூன்று சிறிய அறைகளைத் தவிர வேறு அறைகள் அங்கு இல்லை. இந்த காப்பகம் பொதுமக்களிடம் இருந்து விலங்குகளை ஏற்றுக்கொள்வதில்லை. Peta ஊழியர்கள் மூலம் கொண்டு வரப்படும் விலங்குகள் மட்டுமே இங்கு ஏற்றுக் கொள்ளப்படும் என்றார்” என்று ஆய்வில் நடந்தவற்றை அந்த அதிகாரி பதிவு செய்திருக்கிறார்.
மேலும் ஆய்விலிருந்து தெரியவருவது “ கடந்த சில ஆண்டுகளில் அந்த அமைப்பு கையாண்ட விலங்குகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. ஆனால், விலங்குகளை வைக்கும் இடம் சிறியதாக இருக்கிறது. இது அரசின் நெறிமுறைகளுக்கு உட்படாத வகையில் உள்ளது. PETA தனக்கென்று உருவாக்கிக் கொண்ட விதிமுறைகளைக் கூட இங்கு பின்பற்றவில்லை. இவ்வளவுக்கும் மேல், பீட்டாவின் ஊழியர்களுக்கு இங்கு விலங்குகள் காப்பகம் செயல்படுவதே தெரியாமல் இருந்திருக்கிறது. மேலும், பீட்டாவில் எடுத்துக் கொள்ளப்பட்ட 85% விலங்குகளை, 24 மணி நேரத்துக்குள் கருணை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும்போது, அந்த அமைப்புக்கு விலங்குகளை பராமாரித்து வேறு காப்பகங்களுக்கோ, தத்துக் கொடுக்க முயற்சிப்பதோ நோக்கம் இல்லை என்பது தெளிவாகிறது” என்று அறிக்கையில் போட்டு உடைத்திருக்கிறார் டேனியல்.
இது மட்டும் அல்ல, இன்னும் PETA திரைக்கு பின் செய்யும் அநீதிகள் ஏராளமாக இருப்பதாகவும் PKA அமைப்பு தெரிவிக்கிறது. இந்தியாவில் மட்டும் அல்ல, உலக அளவில் பீட்டாவுக்கு வழங்கப்பட்டுள்ள வரி விலக்கை நீக்கவும் அந்த அமைப்பு, அரசாங்கத்துக்கு குரல் கொடுக்க தனது இணையதளம் மூலம் அழைக்கிறது.
இந்த குற்றச்சாட்டுகள் எதற்கும் பீட்டா பதிலளிக்கவும் இல்லை, அஞ்சவும் இல்லை. ஒருவேளை, இது பீட்டா மீதான அவதூறாகவே இருந்தாலும், ஏன் சட்ட நடவடிக்கைகளை எடுக்கவில்லை. பீட்டாவுக்கு இருக்கும் பண பலத்துக்கு, சட்ட நடவடிக்கைகளால் அந்த இணையதளத்தை முடக்கி இருக்க முடியும். ஏன் இது எதையும் செய்யவில்லை PEEta? அப்படியானால் பீட்டாவின் கை ரத்தம் படிந்ததா?
இந்த வலைப்பதிவில் தேடு
பீட்டா ஒரு தீவிரவாத அமைப்புதான்! ஆதாரங்கள்
H I'm Syed Abutahir from Chennai, Addicted to Learn & teaching SEO
பீட்டா ஒரு தீவிரவாத அமைப்புதான்! ஆதாரங்கள்
Reviewed by Tamilan Abutahir
on
2:40 AM
Rating: 5
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக