ஜெர்மனியரை பற்றிச் சில குறிப்புகள்
- உலகில் தமிழரைத் தவிர மற்ற இனங்கள் எல்லாம் ஒற்றுமையாக வாழ்வதாக நினைத்துக் கொள்வது அறியாமை.
- உலகில் அப்படி எந்த இனமும் கிடையாது.
- சிலர் ஜேர்மனியரை உதாரணமாகக் காட்டப் பார்ப்பார்கள் அதனால் ஜெர்மனியரை பற்றிச் சில குறிப்புகள் சில குறிப்புகள்.
- 19 ம் நூற்றாண்டுவரையில் ஜெர்மானியர்கள் என்ற தேசிய இன அடையாளம் ஏற்படவில்லை. பண்டைய காலத்தில் பிராங், பிரஷியர், சாக்சன் என்று பல்வேறு இனங்களாகப் பிரிந்திருந்தார்கள்.
- பகைமை கொண்டு மோதிக் கொண்டார்கள். சக்கரவர்த்திகளின் ஆட்சிக் காலத்திலும் அது ஒரே நாடாக இருக்கவில்லை.
- – கத்தோலிக்க, புரட்டஸ்தாந்து ஜெர்மானியர்களுக்கு இடையிலான பகை முரண்பாடுகள் இருபதாம் நூற்றாண்டுவரையில் தொடர்ந்து கொண்டிருந்தன.
- ஒருவரை ஒருவர் நேரில் கண்டால் இரத்தம் குடிக்கும் அளவிற்கு பகை வளர்ந்திருந்தது.
இரத்தம் குடிக்கும் அளவிற்கு பகை வளர்ந்திருந்தது
கத்தோலிக்க பிரான்ஸில் இருந்து அகதியாகப் புலம்பெயர்ந்த புரட்டஸ்தாந்து பிரெஞ்சு மக்கள், ஜெர்மனியில் வாழ்ந்தனர். வடக்கே உள்ள ஹெஸ்ஸன் வரையில் குடியேறி இருந்தனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் பிரெஞ்சு மொழியில் தேவாலய வழிபாடு நடத்தினார்கள். - அவர்கள் அகதிகளின் வம்சாவளியினர் என்பதால் ஜெர்மனியில் இரண்டறக் கலந்து விட்டனர்.
– இன்றைய ஜெர்மன் நாட்டில் எல்லோரும் ஜெர்மன் மொழி பேசுவோர் அல்ல.
சிறுபான்மை இனங்களின் மொழி உரிமை மதிக்கப் படுவதில்லை - சிறுபான்மை இனங்களின் மொழி உரிமை மதிக்கப் படுவதில்லை ஜெர்மன் பேரினவாதம் அவற்றின் மீது மேலாதிக்கம் செய்கின்றது அங்குச் சிறுபான்மை மொழிகள் இருக்கும் விடயம் வெளியுலகில் தெரியாவதவாறு அடக்கப் பட்டுள்ளனர்.
– தென் கிழக்கு ஜெர்மனியில் வாழும் சேர்வர் மொழி உலகில் அழிந்து வரும் மொழிகளில் ஒன்று. (அவர்களைச் செர்பியர்களுடன் சேர்த்து குழப்பிக் கொள்ளக் கூடாது. - இது ஜெர்மன் போன்றதொரு மொழி பேசும் இனம்.) முன்னாள் சோஷலிச கிழக்கு ஜெர்மனியில் அவர்களுக்கு ஒரு தன்னாட்சிப் பிரதேசம் இருந்தது. இன்று அப்படி எதுவும் இல்லை.
– வட மேற்கு ஜெர்மனியில் பிரீசிய மொழி பேசும் சிறுபான்மை இன மக்கள் வாழ்கிறார்கள். அது தனித்துவமான மொழி. ஜெர்மன் மொழியைவிட டேனிஷ் மொழியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. ஆனாலும் என்ன? அவர்களுக்கென்று தனி மாநிலம் கூடக் கிடையாது - – முதலாம் உலகப்போருக்கு முன்பிருந்தே ஜெர்மானியர்கள் இடது சாரிகள், வலது சாரிகள் என்று கொள்கை அடிப்படையில் இரண்டாகப் பிரிந்திருந்தனர்.
- முதலாம் உலகப்போர் முடிந்தவுடனே, பல நகரங்களில் கம்யூனிஸ்டுகளின் புரட்சி நடந்தது. மியூனிச், ஹம்பூர்க், பெர்லின் போன்ற நகரங்களில் சோவியத் அரசு பிரகடனம் செய்யப் பட்டிருந்து.
- ஈவிரக்கமின்றி அடக்கினார்கள்
– தீவிர தேசியவாதிகளைக் கொண்ட வலது சாரி துணைப்படையினர் கம்யூனிஸ்ட் புரட்சிகளை ஈவிரக்கமின்றி அடக்கினார்கள். பல நூற்றுக் கணக்கானோர் சுட்டுக் கொல்லப் பட்டனர். ஜெர்மானியர்களுக்கு எதிராக ஜெர்மானியர்கள் போரிட்டனர் - அதாவது, ஜெர்மானியர்களுக்கு எதிராக ஜெர்மானியர்கள் போரிட்டனர்.
இப்போது கூறுங்கள்….
ஜெர்மானியர்கள் ஒற்றுமையாக ஒரே இனமாக வாழ்கிறார்களா? - ஜெர்மனியரை பற்றிச் சில குறிப்புகள் Written by Kalai Marx
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக