- டெல்லியின் கொம்பைப் பிடி”
தேவை ஜல்லிக்கட்டு அல்ல டில்லிக்கட்டு! - அன்பார்ந்த தமிழ் மக்களே,
தமிழ்நாட்டு கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்துவதா வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியவர்கள் தமிழ்நாட்டு மக்கள். அதை முடிவு செய்வதற்கு மோடி அரசு யார்? உச்ச நீதிமன்றம் யார்? அவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?. - அவசர சட்டம் இயற்றுங்கள்” என்ற கோரிக்கை மனுவை மோடியிடம் கொடுப்பதற்கு அதிமுக எம்பிக்கள் டில்லிக்கு படையெடுத்திருக்கிறார்கள். அந்த மனுவை வாங்குவதற்குக் கூட மோடி தயாராக இல்லை.
- ஆட்டு மந்தையைப் போல அமைதியாகத் திரும்பி வந்திருக்கிறார்கள் அதிமுக எம்பிக்கள்.
அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு போன்ற ஜல்லிக்கட்டு நடக்கும் ஊர்களிலெல்லாம் போலீசு குவிக்கப்பட்டுள்ளது. - “ஜல்லிக்கட்டு நடத்த மாட்டோம்” என்று காளை வளர்ப்பவர்களிடம் எழுதிக் கையெழுத்து வாங்குகிறது தமிழ்நாட்டு போலீசு. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாம்! நீதிமன்றத் தீர்ப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் இவர்கள் நிலைநாட்டுகிறார்களாம்!
- நீதி, நியாயம், சட்டத்தின் ஆட்சி என்ற சொற்களை உச்சரிப்பதற்கான யோக்கியதை இந்த உச்ச நீதிமன்றத்துக்கோ மோடி அரசுக்கோ உண்டா?
நீதி, நியாயம், சட்டத்தின் ஆட்சி என்ற சொற்களை உச்சரிப்பதற்கான யோக்கியதை இந்த உச்ச நீதிமன்றத்துக்கோ மோடி அரசுக்கோ உண்டா? - காவிரி டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர்களில் நெற்பயிர் அழிவதற்கும், விவசாயிகள் நெஞ்சடைத்து சாவதற்கும், உழவு மாடுகளும் பால்மாடுகளும் தண்ணீருக்குத் தவிப்பதற்கும் யார் காரணம்?
- காவிரி நீர் உரிமையைப் பறிப்பதற்கு கள்ளத்தனமாகக் கர்நாடக அரசுக்குத் துணை நின்றதுதான் இந்த உச்ச நீதிமன்றம். தமிழ்நாட்டு விவசாயிகள் தண்ணீருக்காகக் கதறிய போதும், “தீர்ப்பை அமல்படுத்த முடியாது” என்று கர்நாடக அரசு திமிர்த்தனம் செய்தபோது, வாயை மூடிக் கொண்டிருந்த உச்ச நீதிமன்றத்துக்குத் தமிழகத்தின் மீது அதிகாரம் செலுத்த என்ன அருகதை இருக்கிறது?
- தமிழகத்துக்கு வஞ்சகம் செய்வதில் கர்நாடக அரசையும் உச்ச நீதிமன்றத்தையும் விஞ்சிய கிரிமினல்தான் மோடி அரசு. காவிரி ஆணையம் அமைப்பதைத் தடுத்து, தமிழகத்துக்கு நிரந்தரமாகக் காவிரி நீர் கிடைக்காத நிலையை ஏற்படுத்தியிருக்கிறார் மோடி.
- தமிழ்நாட்டின் விவசாயத்தை அழித்த மோடியிடம், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தருமாறு கெஞ்சுவதும் மனுக் கொடுப்பதும் கேவலமில்லையா?
- “ஒரு நாடு – ஒரு சட்டம்” என்று சொல்லிக் கொண்டு இவர்கள் ஆடுகிற ஆட்டம் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. இந்தி, சமஸ்கிருதம், பார்ப்பனியம் ஆகியவற்றை எதிர்ப்பதில் தமிழகம் முன்னணியில் இருப்பதால், உச்ச நீதிமன்றம் என்று அழைக்கப்படும் உச்சுக்குடுமி மன்றத்தின் நீதிபதிகளுக்கும், உச்சுக்குடுமி கட்சியான பாரதிய ஜனதாவுக்கும் தமிழ்நாடு என்றாலே வேப்பங்காயாய்க் கசக்கிறது
- தமிழ் மக்களுக்குச் சொந்தமான சிதம்பரம் நடராசர் கோயிலை, அறநிலையத்துறையிடமிருந்து பிடுங்கி, அங்கே மணியாட்டும் பார்ப்பன தீட்சிதர்களுக்குச் சொந்தமாக்கி தீரப்பளித்தது உச்ச நீதிமன்றம்தான்.
சாதிப் பாகுபாடின்றி அனைத்து சாதி மாணவர்களுக்கும் பயிற்சி கொடுத்து அர்ச்சகராக நியமிக்க முயன்றது தமிழக அரசு - . “பார்ப்பன அர்ச்சகர்களைத் தவிர மற்றவர்கள் சாமி சிலையைத் தீண்டக் கூடாது”என்று தீர்ப்பளித்து, சாதியையும் தீண்டாமையையும் நிலை நாட்டியது உச்ச நீதிமன்றம்தான்.
“தமிழ்நாட்டு கோயில் தமிழ் மக்களுக்குச் சொந்தம். தமிழில் வழிபடுவதும் தமிழர்களை அர்ச்சகர்களாக நியமித்துக் கொள்வதும் தமிழ் மக்களின் உரிமை. அதில் தலையிடுவதற்கு உச்ச நீதிமன்றத்துக்கோ மத்திய அரசுக்கோ அதிகாரம் இல்லை” என்று நாம் குரல் எழுப்பவேண்டிய நேரம் இது. - தமிழ்நாட்டுப் பள்ளிகளுக்கு என்ன பாடத்திட்டம் என்பதை சொல்வதற்கு மத்திய அரசு யார்? சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திட்டத்தையும், செத்த மொழியான சமஸ்கிருதத்தையும் இந்தி திணிப்பையும் தூக்கி வெளியே வீச வேண்டிய நேரம் இது
- தமிழக மாணவர்கள் படிப்பதற்கு தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி கட்டினால், அதில் யாருக்கு சீட் கொடுப்பது என்று நீட் தேர்வு வைத்து டில்லி முடிவு செய்யும் என்கிறது உச்ச நீதிமன்றம்
- . அடுத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அதே முறையைக் கொண்டுவரப் போவதாகச் சொல்கிறது மோடி அரசு.
கேடி கிரிமினல்களும் ஹவாலா பேர்வழிகளும் வக்கீலாகத் தொழில் நடத்திக் கொண்டிருக்கையில், நீதிபதிகளின் ஊழலை எதிர்த்த தமிழ்நாட்டு வக்கீல்களுக்கு மட்டும் வாழ்நாள் தடை விதித்திருக்கிறது அனைத்திந்திய பார் கவுன்சில். பாரதிய ஜனதாக் கட்சிக்காரன்தான் இதற்கும் தலைவர் என்பதை நாம் கவனிக்க வேண்டும். - அணு உலை வேண்டாமென்று கேரள மாநிலம் விரட்டியடித்தால் அது கூடங்குளத்தில் திணிக்கப்படுகிறது. “கெயில் எரிவாயுக் குழாய் எங்கள் விவசாயத்தை அழிக்கும்” என்று தமிழக விவசாயிகள் முறையிட்டாலோ, அதனை நிராகரித்து விளைநிலத்தை ஒப்படைக்குமாறு உத்தரவிடுகிறது உச்ச நீதிமன்றம்.
- “சட்டத்தின் ஆட்சி” என்ற பெயரில் திணிக்கப்படும் நியாயத்துக்குப் புறம்பான இப்படிப்பட்ட தீர்ப்புகளுக்கு எதற்காக நாம் கட்டுப்பட வேண்டும்?
- “கரசேவை செய்யப்போகிறோம்” என்று சொல்லி உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி வாங்கிக் கொண்டு, கடப்பாரை சேவை செய்து, அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தவர்கள்தான் பாரதிய ஜனதாக் கட்சியினர். மசூதியை இடித்து மதவெறியைத் தூண்டி ஆட்சியையும் பிடித்து விட்டார்கள். ஆனால் மசூதியை இடித்த குற்றத்துக்கு இவர்களை இதுவரை நீதிமன்றம் தண்டிக்கவில்லை.
- டில்லியின் கொம்பைப் பிடித்து அடக்குவதுதான் இன்று தமிழகம் பயின்று கொள்ள வேண்டிய வீர விளையாட்டு. இதன் பெயர் ஜல்லிக்கட்டு அல்ல, டில்லிக்கட்டு.
- மகாராட்டிரத்தில் கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி நடக்கும் “உறியடித் திருவிழா”வில் மனிதக் கோபுரம் அமைப்பதற்கு உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடுகள் விதித்தபோது, “உச்ச நீதிமன்றத்துக்குக் கட்டுப்பட முடியாது” என்று வெளிப்படையாகவே அறிவித்து விழாவை வழக்கம்போல நடத்தியது பாஜக சிவசேனா அரசு. உச்ச நீதிமன்றம் அதைக் கண்டு கொள்ளவில்லை
- ஆனால் சேதுக்கால்வாய் திட்டத்துக்காகத் தமிழகத்தில் கடையடைப்பு நடந்தபோது மட்டும் “ஆட்சியைக் கலைப்போம்” என்று திமுக அரசை மிரட்டியது. இதுதான் உச்ச நீதிமன்றத்தின் நடுநிலை. சட்டத்தை மதிக்குமாறு தமிழகத்துக்கு உபதேசம் செய்யும் அருகதை பாஜக-வுக்கோ, இந்த நீதிமன்றத்துக்கோ கிடையாது.
- எல்லா விசயங்களிலும் இரட்டை வேடம் போடும் பாரதிய ஜனதா, வழக்கம்போல இந்தப் பிரச்சினையிலும் இரட்டை வேடம் போடுகிறது
- . “விஜில்” என்ற ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்பினைச் சேர்ந்த ராதா ராஜன் என்பவர்தான் ஜல்லிக்கட்டுத் தடைக்குக் குரல் கொடுப்பவர். மாடுகளின் மீது பெருங்கருணை கொண்டுள்ள இந்த அம்மையார், மாட்டுக்கறி வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டி அக்லக் என்ற இசுலாமிய முதியவரைக் கொலை செய்தார்களே, அந்தக் கொலையை நியாயப்படுத்துபவர்.
- மதத்தின் பெயரில் மனிதப் படுகொலை நடத்தும் இத்தகைய பார்ப்பன மேட்டுக்குடியினர்தான், விலங்குகளைப் பாதுகாப்பதாகச் சொல்லிக் கொள்ளும் “பீட்டா” போன்ற அமைப்புகளிலும் நிறைந்திருக்கின்றனர்
- . “விநாயகர் சதுர்த்திக்கு கறிக்கடையை மூடு, கோயில் நகரங்களில் கறிக்கடையே கூடாது, மாட்டுக்கறியை தடை செய்” என்பன போன்ற கோரிக்கைகளுக்கும் ஜல்லிக்கட்டுத் தடைக்கும் அதிக வேறுபாடு இல்லை
- . “மாட்டை அடக்குபவர்கள், மாட்டை வெட்டுபவர்கள், புலால் உணவு புசிப்பவர்கள் போன்றோர் கீழானவர்கள், அவர்களது பண்பாடும் கீழானது” – என்பதுதான் இவர்கள் சொல்ல வரும் கருத்து.
- மாட்டை அடக்குவதுதான் வீரம், அதுதான் உயர்ந்த பண்பாடு” என்பதல்ல நம் கருத்து. ஜல்லிக்கட்டு முதல் கோயில் திருவிழாக்கள்வரை தமிழகத்தின் பண்பாட்டு நடவடிக்கைகள் பலவற்றில் ஊடுருவியிருக்கும் சாதிப்பாகுபாட்டையும் தீண்டாமைக் கொடுமையையும் நாம் ஒருபோதும் “தமிழ் வீரம்” என்று கொண்டாட முடியாது.
- மாட்டுக்கொம்பால் குத்துப்பட்டு சாவதற்கும் தயாராக இருக்கும் வீரர்கள், உச்ச நீதிமன்றம் தடை விதித்தவுடனே மொட்டைப் போட்டு ஒப்பாரி வைப்பதேன்?
- காவிரியைத் தடுத்தும் மணற்கொள்ளை அடித்தும் தமிழகத்தின் விவசாயத்தை அழித்து, நூற்றுக்கணக்கான விவசாயிகளைக் கடனுக்கும் சாவுக்கும் தள்ளிய எதிரிகளுக்கு எதிராகத் தமிழ் வீரம் கிளர்ந்து எழாதது ஏன்? விவசாயம் அழிந்த பின், விவசாயி அழிந்த பின், மாடுகள் ஏது? மஞ்சு விரட்டு ஏது? சிந்திக்க வேண்டாமா?
- பொங்கல் விடுமுறையையே ரத்து செய்கிறது மோடி அரசு. “கம்ப்யூட்டரில் ஜல்லிக்கட்டு விளையாட வேண்டியதுதானே” என்று திமிராகக் கேலி பேசுகிறார் உச்ச நீதிமன்ற நீதிபதி.
- “திராவிட இயக்கத்தை அழிப்போம்” என்று பொங்கல் வாழ்த்து சொல்கிறார் பொன். ராதாகிருஷ்ணன். நாம் அடக்க வேண்டியது யாரை? காளையையா, டில்லியையா?
- உன்னுடைய அதிகாரம் தமிழகத்தில் செல்லாது” என்று டில்லியின் கொம்பைப் பிடித்து அடக்குவதுதான் இன்று தமிழகம் பயின்று கொள்ள வேண்டிய வீர விளையாட்டு.
- இதன் பெயர்ஜல்லிக்கட்டு அல்ல, டில்லிக்கட்டு.
இவண்.
ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு
இந்த வலைப்பதிவில் தேடு
டெல்லியின் கொம்பைப் பிடி” தேவை ஜல்லிக்கட்டு அல்ல டில்லிக்கட்டு
Related Post
- Next பி ஜே பி யின் டிஜிட்டல் படையின் ரகசியங்கள்
- Previous இரண்டாம் உலகப்போர் வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப் பட்ட உண்மை
H I'm Syed Abutahir from Chennai, Addicted to Learn & teaching SEO
டெல்லியின் கொம்பைப் பிடி” தேவை ஜல்லிக்கட்டு அல்ல டில்லிக்கட்டு
Reviewed by Tamilan Abutahir
on
3:34 AM
Rating: 5
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக