மாணவர் எழுச்சி அல்லது மக்கள் கிளர்ச்சி எப்படி வேண்டுமாலும் வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் நேரடியாக மெரினா விற்க்கு செல்லாதவரையில் அதை உங்களால் ஒரு வரம்புக்குள் அடைத்து உவமை சொல்ல முடியாது
- ஆகவே உங்களால் வரமுடிந்தால் அல்லது நீங்கள் மெரீனாவிற்கு அருகில் இருந்தால் தயவு செய்து மெரீனாவிற்கு வாருங்கள் வந்து எங்கள் மாணவச்செல்வங்கள் தங்களது உரிமைக்காகப் போராடும் அழகை பாருங்கள், மெரீனாவிற்கு வாருங்கள்.
- யாரும் யாருக்கும் தலைவன் கிடையாது ஆனாலும் அங்கே அடிமைகள் யாரும் இல்லை அல்லது வெற்று கோசம் இல்லை மேலும் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லை
- நீங்கள் வீட்டில் வசதியாக உக்கார்ந்தது கொண்டு டி வி பார்த்துக்கொண்டோ அல்லது இதைப்படித்து கொண்டோ இருக்கும் இந்தக் குளிர் இரவில் அங்கே கூடிய அணைத்து மக்களின் தேவை ஒன்றே ஒன்று தான் கோவமும் ஒன்றே ஒன்றுதான்,
- எங்களின் உரிமையை யாரும் பறிக்க முடியாது. எங்கள் அடையாளத்தை யாரும் அழிக்க முடியாது எங்களுக்கு வேண்டியது எல்லாம் ஜல்லிக்கட்டு நடத்த யாரும் தடை விதிக்க முடியாது நிரந்தரமாகத் தடையை நீக்க வேண்டும்.
- அதற்க்கு எந்த அரசியவாதியின் துணையும் அல்லது சினிமா நடிகரின் ஆதரவும் வேண்டாம் எங்கள் உரிமையை நாங்கள் மீட்டு எடுப்போம்
- அதில் சில சந்தோசமான நிகழ்வு என்னவென்றால் மக்களின் உறுதியான நோக்கத்தைப் புரிந்து கொண்ட காவல் துறை நண்பர்கள் சிலர் அங்கே கூடிய மக்களில் தாங்களும் ஒருவராய் நின்று போராட்டத்துக்குத் தங்களின் ஆதரவை வெளிப்படையாகவே காட்டியதுதான்
- ஆகவே மக்களே போராட்டம் மிகப்பெரிய வலுவடைந்து மிகமுக்கியமான கட்டத்திற்கு சென்று உள்ளது இப்போது தான் உங்களின் ஆதரவு அல்லது உங்களின் பங்களிப்பு ஏதாவது ஒரு ரூபத்தில் தேவை படுகிறது
- உங்களால் முடிந்தால் ஒருநாள் வந்து இருங்கள் அல்லது ஒருமணி நேரமாவது வந்து இருங்கள் அப்படி முடியாவிட்டால் உங்கள் வீட்டில் இருக்கும் இளைஞர்கள் ஆன் பிள்ளை யோ அல்லது பெண் பிள்ளையோ தயங்கமால் அவர்கள் அங்கே செல்வதற்க்கு ஊக்கம் அளியுங்கள் தடை போடாதீர்கள் மெரினாவில் அவர்களுக்குரிய பாதுகாப்பு நிச்சயம் கிடைக்கும்
- தயங்காமல் உங்கள் பிள்ளைகளை அனுப்புங்கள்.அல்லது உங்களால் முடிந்த உதவி எதுவாக இருந்தாலும் அங்கே போராடக்கூடியமக்களுக்கு உணவோ அல்லது ஒரு படுக்கை விரிப்பூ அல்லது ஒரு போர்வை அல்லது எதாவது அவர்களுக்கு தேவையான பொருள் அல்லது ஒரு பாட்டில் தண்ணீரோ கொண்டு போய்க் கொடுங்கள் அல்லது உங்கள் நண்பர்களுக்கு அங்கே போய் இருக்க ஊக்கம் அளியுங்கள்
- ஒன்று மட்டும் நிச்சயம் அங்கே கூடிய யாரும் ஒரு மதமாகவோ அல்லது ஜாதியாகக் கூடவில்லை அங்கே இருப்பவர்கள் எல்லாம் ஒரு தமிழின உணர்வாளர்களாகக் கூடி இருக்கின்றார்கள், ஏன் என்றால் முதலில் தங்கள் மொழியை திணிக்கத் தமிழை அழிக்க நினைத்தார்கள் அடுத்து தங்கள் கலாச்சாரத்தை மாற்ற நினைத்தார்கள் அதற்கும் தமிழன் பொறுத்து கொண்டான் மேலும் பல்வேறு விதமாகத் தமிழ் கலாச்சாரத்தை மறைத்து வடக்கத்திய கலாச்சாரத்தை உள்ளே நுழைக்க நினைத்தார்கள் அதற்கும் தமிழன் ஓர் அளவு போராடி விட்டுச் செய்வதறியாது பொறுத்து இருந்தான் ஆனாலும் அந்த வடக்கத்திய ஆவோஜிகல் ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கதையாக நிஜமாலுமே நமது நாட்டு மாடுகளை அளிக்க ஜல்லி கட்டு தடையைக் கொண்டு வந்ததன்நாள் இனியும் பொறுத்தால் நம்மளையே அளித்து விடுவார்கள் என்று தான் இன்று தமிழன் பொங்கி ஏழுந்து இருக்கிறான்
- ஆகவே வாருங்கள் மெரீனாவிற்கு உங்கள் இன அடையாளத்தை காக்க
- ஜல்லிக்கட்டு மாணவர்கள் போராட்டம் ஒரு புதிய எழுச்சி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக