மக்களின் உணர்வுகளோடு தமிழக பி.ஜே.பி விளையாடி வருகிறது
தமிழக மக்களின் உணர்வுகளோடு பி.ஜே.பி. விளையாடி வருகிறது. இதை நிறுத்தாவிட்டால் ஒருநாளும் தமிழகத்தில் பி.ஜே.பி. கால் ஊன்ற முடியாது,”
எனச்சொல்லி கட்சியை விட்டு வெளியேறுவதாகவும் அறிவித்திருக்கிறார் பி.ஜே.பி. மாநில இளைஞரணி துணை செயலாளர் சத்தியபாமா.
“நான் சிங்கப்பூர்ல சொந்தமாக கம்பெனி நடத்தீட்டு வந்தேன். அங்கே தமிழர்கள் படும் கஷ்டங்களை நேர்ல பார்த்திருக்கேன். அவங்க வாழ்க்கையில நல்லது நடக்கணும்னா இந்தியாவில் மாற்றம் வரணும்னு எதிர்பார்த்தேன். அப்போ தான் மோடி பத்தி கேள்வி பட்டேன். மோடி நிறைய மாற்றம் கொண்டு வருவாருன்னு சொன்னாங்க. அந்த நேரம் நான் இந்தியா வந்தேன். மோடி மேல இருந்த நம்பிக்கையில மோடி முன்னிலையில் பி.ஜே.பி.யில சேர்ந்தேன். கட்சியில நல்ல செயல்பட்டதால மாநில செயற்குழு உறுப்பினர் பொறுப்பு கொடுத்தாங்க. அப்புறம் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பதவியும் கொடுத்தாங்க.
அதேபோல் ஜல்லிக்கட்டு விஷயத்தில் பி.ஜே.பி. அரசு மவுனம் சாதிப்பது. காவிரி பிரச்னையில் தமிழகத்துக்கு ஆதரவாக தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சட்டம் கொண்டு வர தயாராக இருக்கும் பி.ஜே.பி. அரசு, ஜல்லிக்கட்டு விஷயத்தில் அவசர சட்டம் கொண்டு வரமுடியாது என்பது ஏற்கத்தக்கதல்ல. தமிழர்களின் உணர்வுகளை மதிக்காமல் பி.ஜே.பி. அரசு செயல்படுகிறது.”
– Thanks by vikatan Money Demonstration
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக