ஜல்லிக்கட்டு தடை நீக்க மாணவர்கள் போராடியது ,அரசியல் ஆக்கப்பட்டது , அதாவது மாணவர்கள் போராடியது தங்கள் அரசியல் உரிமைக்காக தான் ஆனாலும் அவர்கள் அந்த நோக்கத்திற்காக எந்த அரசியல் கட்சி அல்லது எந்த ஒரு தனிப்பட்ட நபரை முன் நிறுத்தி அவர்கள் போராட வில்லை ஆனால் அவர்கள் போராட்டம் அரசியல் ஆக்க பட்டு விட்டது நேற்று இரவு அதற்கான முதல் அத்யாயம் ஆரம்பம் ஆனது. இன்று காலை முதல் மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ள பட்டது , மாணவர்கள் தங்கள் உரிமைக்காக ஜன நாயக முறையில் போராடி கொண்டு இருக்கையில் காட்டு மிராண்டி தனமாக அவர்கள் தாக்க பட்டர்கள் மாணவர்கள் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் தான் பார்த்து கொண்டார்கள் மாணவர்கள் மேற்கொண்டது அரசியல் அற்ற அரசியல் , ஆனாலும் ஆளும் வர்க்கம் இப்படி தங்கள் சுயரூபத்தை காட்டி விட்டது ஆனாலும் சென்னையில் கோடம்பாக்கம், கீழ்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போன்று தரமணியில் டைடல் பார்க் முதல் சோழிங்கநல்லூர் வரை ஆங்காங்கே சாலை மறியலில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்த சாலையில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவொற்றியூர், எண்ணூர் ஆகிய பகுதிகளிலும் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, இந்தப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு, பதற்றமும் நிலவி வருகிறது
பீட்டா தடை செய்யப்படும் வரை போராட்டம்!..
மெரினாவில் உள்ள காவல்துறையினரை சிதரிக்கடிக்க வேண்டும் என்றால், சென்னை முழுக்க சாலைமறியல் நடத்தப்பட வேண்டும். அதுவும் அமைதியான முறையில் நடத்தப்பட வேண்டும்,
இனி மெரினாவிற்கு யாரும் செல்ல இயலாது, அத்தனை வழிகளும் அடைக்கப்பட்டு உள்ளன. அண்ணாசாலையில் கூடுங்கள், அண்ணா சாலை மொத்தமாக ஸ்தம்பித்தால், காவல்துறை அங்கே அதிகம் தேவைப்படும்.
சென்னையில் எந்த நேரமும் வன்முறை நிகழலாம், அதற்காக சில சமூக விரோதிகள் காத்திருக்கின்றார்கள்.
நமக்கு வன்முறை தேவையில்லை, போராட்ட களம் என்பது மெரீனா மட்டும் அல்ல, அது சென்னை மொத்த நகரமும் போராட்டக்களம்தான் என்ற நிலை உருவாக வேண்டும்.
– பீட்டா என்ற அமைப்பு தடை செய்யப்படும் வரை நமது போராட்டம் ஓயாக் கூடாது.
அந்த நாய்கள் எப்படியும் தடை வாங்கிவிடுவார்ர்கள்.
.https://www.facebook.com/SunNewsTamil/videos/1332033723520007/
இந்த வலைப்பதிவில் தேடு
பீட்டா தடை செய்யப்படும் வரை போராட்டம்!..
பீட்டா தடை செய்யப்படும் வரை போராட்டம்!..
Reviewed by Tamilan Abutahir
on
12:11 AM
Rating: 5

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக