- பீட்டா தமிழின எதிரி / “TAMILS vs PETA” “தமிழ் நாட்டின் அரபு வசந்தம்”
- “TAMILS vs PETA” என்றெல்லாம் வட இந்திய ஊடகங்கள் ஜல்லிக்கட்டு போராட்டங்களைச்சித்தரிக்கின்றன.
- சந்தேகத்திற்கிடமின்றி பீட்டா ஒரு என்.ஜி.ஓ. தான். ஆனால், பெரும் முதலாளிகளுக்கு தலையிடியாக இருந்த என்.ஜி.ஓ. மேற்கத்திய நாடுகளில் அதன் நடவடிக்கைகளால் பல பெரிய நிறுவனங்கள் பாதிக்கப் பட்டன.
- உதாரணத்திற்கு, முயல், மான் போன்ற வளர்ப்பு மிருகங்களின் தோல்களிலிருந்து தயாரிக்கப் படும் உடைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்தது. அதனால், பணக்கார வீட்டுப் பெண்கள் அணியும் விலை உயர்ந்த உடைகளின் விற்பனை வீழ்ச்சி கண்டது.
- இதற்கு முன்னர் ஸ்பெயின் நாட்டில் நடக்கும் மாடு பிடிக்கும் விளையாட்டைத் தடை செய்ய வேண்டுமென பீட்டா போராட்டம் நடத்தியது
- . ஸ்பெயினில் விளையாட்டின் முடிவில் மாட்டை விரட்டி ஈட்டி எறிந்து கொல்வார்கள். அதனோடு ஒப்பிடும்பொழுது தமிழக ஜல்லிக்கட்டு குரூரமானது அல்ல.
- இந்திய பீட்டா அமைப்பில் இந்துத்துவா – பிராமணர்கள் இருப்பது ஒரு சந்தர்ப்பவாதம். அதாவது, பிராமணர்களின் வழக்கமான மாமிச உணவின் மீதான வெறுப்புணர்வு, கோமாதா வழிபாடு போன்றன பீட்டாவின் கொள்கையுடன் ஒத்துப் போகின்றன. ஆனால், சர்வதேச மட்டத்தில் பீட்டாவின் அனைத்து நடவடிக்கைகளுடனும் ஒத்துப் போவார்கள் என்று சொல்ல முடியாது.
- யாழ்ப்பாணத்தில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டத்தில், “பீட்டாவின் பெயரில் பன்னாட்டு வணிக நிறுவனங்கள் தமிழின மரபுரிமையை அழிப்பதாக” அறிக்கை வாசித்தார்கள்.
சர்வதேச மட்டத்தில், பீட்டா பன்னாட்டு வணிக நிறுவனங்களின் வெறுப்புக்கு ஆளாகி உள்ளது. - இங்கே என்னவென்றால் அதையே பன்னாட்டு நிறுவனமாக காட்டும் அபத்தம் நடக்கிறது.
இது அறியாமையில் நேர்ந்த தவறாக தெரியவில்லை. - இந்துத்துவா பிராமணர்கள் பீட்டாவுக்குள் மறைந்து நிற்பது அவர்களது சுயநலம். அதே மாதிரி, பன்னாட்டு நிறுவனங்கள் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களின் பின்னால் மறைந்து கொள்ளலாம்.
- IT ஊழியர்கள் போன்ற மத்தியதர வர்க்கத்தினரும் தெருவுக்கு வந்து போராடுகிறார்கள் என்றால், அங்கே அவர்களது வர்க்க நலன்களும் பாதுகாக்கப் படுகின்றது என்று அர்த்தம். அவர்களது வேலைக்கு உத்தரவாதம் உண்டு என்று அர்த்தம்.
- தமிழக விவசாயிகளின் தற்கொலை மரணத்திற்கு காரணமான மான்சாண்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களை எதிர்த்து இவர்கள் போராடவில்லை.
- இனிமேலும் போராடப் போவதில்லை. “தமிழர்களை இனப்படுகொலை செய்த மான்சாண்டோ பன்னாட்டு நிறுவனத்தை எதிர்ப்போம்” என்று வழமையான தமிழ்த் தேசிய கோஷத்தின் கீழ் போராடலாம். அதெல்லாம் நடக்கப் போவதில்லை.
- இப்போதும் தமிழ் விவசாயிகளின் தற்கொலை பற்றி எதுவும் அறிய விரும்பாதவர்கள் தான், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக “தன்னெழுச்சியாக” வந்து போராடினார்கள். பீட்டாவை தமிழின எதிரி யாக சித்தரிப்பது, உண்மையான எதிரியின் திசைதிருப்பும் உத்தி. பல தமிழர்கள் அந்தப் பொறிக்குள் விழுந்து கொண்டிருக்கிறார்கள்.
- பீட்டா தமிழின எதிரி
- பீட்டா தமிழின எதிரி என்றால், மான்சாண்டோ தமிழின நண்பனாக இருக்க முடியாது. முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையை ஆதரித்த IMF தமிழரின் நண்பனாக இருக்க முடியாது. தனது எதிரியைச் சரியாக இனம் காண முடியாத கும்பலுக்குள், எதிரி இலகுவாக ஒளிந்து கொள்ள முடியும். அது தான் நடக்கிறது
- பீட்டா தமிழின எதிரி Written By Kalai Marx ஜல்லிக்கட்டுக்கு பின்னால் உள்ள ஆதிக்க சாதியினர்
இந்த வலைப்பதிவில் தேடு
பீட்டா தமிழின எதிரி / "TAMILS vs PETA"
H I'm Syed Abutahir from Chennai, Addicted to Learn & teaching SEO
பீட்டா தமிழின எதிரி / "TAMILS vs PETA"
Reviewed by Tamilan Abutahir
on
8:07 PM
Rating: 5
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக