Shalin Maria Lawrence :
ஜெயலலிதா பதவிக்கு வந்தவுடன் ஒரு விஷயம் மட்டும் கண்டிப்பாக செய்திருப்பார் . அது தன் அரசியல் எதிரிகளை பழிவாங்குவது . அதில் மட்டும் தான் அவர் தீவிரமாக இருந்திருப்பார் .
சொத்துக்குவிப்பும் , ஜோசிய பைத்தியக்காரத்தனங்களும் , மக்கள் நலன் புறக்கணிப்பும் 1989 ஆம் ஆண்டு சசிகலாவுடன் போயஸ் தோட்டத்தில் வந்து குடியேறிவைகள் .
தன் alter – ego வாக சசியை பார்க்கிறார் ஜெயலலிதா .
கிடைக்காத அன்பு கிடைத்த பூரிப்பில் ஆளகிடைத்த மாநிலத்தை தோழியின் காலடியில் சமர்பிக்கிறார் ‘Iron lady ‘
1991 ஆண்டு முதல் 2016 வரை அதிமுக ஆட்சி என்ற பெயரில் நம்மை ஆண்டது இன்று ‘வேலைக்காரி’ என்று பலரால் விமர்சிக்கப்படும் சசிகலா மற்றும் அவரது குடும்பம் .
கூட்டணியாய் செய்த அனைத்து அநீதிகளுக்கு ஜெயலலிதாவின் sticker மட்டுமே ஒட்டப்படுகிறது .
புதியதாய் கிடைத்த குடும்பத்தின் அரவணைப்பில் நாடு நாசமாய்ப்போய்
கொண்டிருப்பதை மறந்து ஆழ்ந்த நித்திரையில் தள்ளப்படுகிறார் முதல்வர் .
நித்திரை தெளிந்த நேரம் எல்லாமே
முடிந்திருந்தது . திருத்தி கொள்ள நேரம் கிடைக்கவில்லை , சுதந்திரமும் கிடைக்கவில்லை .
33 வருடங்களாக நடத்தப்படும் சதுரங்க நாடகம் முடிவு பெறுகிறது .
ராணி சாய்கிறது .
இந்த 33 வருடங்களாக மக்களை எலி கறி சாப்பிடவைத்ததும் , கஞ்சி தொட்டி திறப்புகளும் , சாதி கலவரங்களும் , சசி பெருமாளை பலிவாங்கியதும் , கோவனை ஜெயிலில் தள்ளியதும் , மாற்று திறனாளிகளை கொன்றதும் , நீரில் என் நகரத்தை அழித்ததற்கும் ,உயிர் காக்கும் மருத்துவமனையை சதிகூடாரமாக மாற்றியதும் இன்னும் லட்சம் ஆராஜகங்களை செய்ததும் இந்த ஒற்றை நாற்காலிக்காக என்றால் … அது உங்களுக்கு வாய்க்காமல் போகட்டும் .
Shalin
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக