தமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சம்
தமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சம் குறித்து ஆவணப்படுத்தலாம் என்ற முயற்சியில் இறங்கினோம்..குடிநீர் பஞ்சம் பெரிய அளவில் இருப்பது அனைவரும் அறிந்ததே..ஆயினும், களத்திற்கு சென்ற போதுதான் புரிந்தது நிலைமை நாம் நினைப்பதை விட பன்மடங்கு மோசமாக உள்ளது..
களத்தில் சகோதரிகளும் தாய்மார்களும் பேசிய சில வார்த்தைகளை மட்டும் கனத்த இதயத்தோடு இங்கு பதிவிடுகிறேன்..
3 நாள் கழித்து 1 குடம் தண்ணீர் பத்து ரூபாய்னு வாங்கிட்டு வந்து அதுல சமைச்சு நானும் பேரப்பிள்ளைகளும் சாப்பிட்டிருக்கோம்…3 நாளா சமைக்கிறதுக்குக் கூட தண்ணியில்ல…
சாக்கடை தண்ணீரைத்தான் பயன்படுத்த வேண்டியிருக்குது…வேற வழி…காசு இருக்கிறவங்க காசு கொடுத்து தண்ணீரை வாங்கிக்கிறாங்க…நாங்க ஏழைங்க என்ன செய்ய முடியும்…
ராமாநாதபுரம், சிவகங்கை அருகே உள்ள கிராமங்களில் குழந்தைகள் ஆழமான கிணற்றில் இருந்து தண்ணீர் இறைக்கும் காட்சியைப் பார்த்த உடன் உள்ளமெல்லாம் அப்படி ஒரு வலி…அனைத்துக் குழந்தைகளும் தர்ஷிணியாகவே என் கண்களில் பட்டனர்…
குடிநீர் பஞ்சம் மிகப்பெரிய அளவில் தமிழகத்தில் நிலவுகின்றது என்பதை அரசு உடனே புரிந்து கொண்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்…டாஸ்மாக் கடைகளை திறப்பதில் காட்டும் ஆர்வத்தை தண்ணீர் பிரச்னையை தீர்ப்பதிலும் காட்ட வேண்டும்….இத்தனை பிரச்னைகளுக்கு இடையிலும் கூட பல இடங்களிலும், தங்களுக்குக் கிடைக்கும் சொற்ப நீரையும் ஆடுகளுக்கும், மாடுகளுக்கும் கொடுக்கும் சகோதரிகளையும், தாய்மார்களையும் பார்க்க முடிந்தது…ஆட்சியாளர்கள் கவனத்திற்கு நாம் குடிநீர் பிரச்னையில் அபாயகரமான கட்டத்தில் இருக்கின்றோம் என்பதை இப்போதாவது உணர்ந்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்கள்..
தமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சம் Written by Senthil Velu
இன்று பிற்பகல் 1.30 மணிக்கு புதிய தலைமுறையின் சாமானியரின் குரல் நிகழ்ச்சியில்..” தண்ணீர் கண்ணீர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக