அகண்ட இந்து பாரதக் கனவு நனவாகத் தொடங்கியுள்ளது
அகண்ட இந்து பாரதக் கனவு நனவாகத் தொடங்கியுள்ளது.. விரைவில், யாழ்ப்பாணத்தில் மாட்டுக்கறி சாப்பிட்டதற்காக மனிதர்கள் அடித்துக் கொல்லப் படலாம். மாடு திருடியவனை சாகும் வரை அடித்ததை நியாயப்படுத்தும் கனவான்கள், திடீரென மாட்டின் மீது பாச மழை பொழிவது கவனிக்கத் தக்கது.
முகநூல் எங்கும் “மாடு எங்கள் குடும்ப உறுப்பினர்” என்று உணர்ச்சிகரமான ஸ்டேடஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். சக மனிதனின் உயிரை விட, மாட்டின் உயிர் மேலானது என்று வாதாடுகின்றனர். மாடு திருடினால் கடுமையான தண்டனை வழங்குவது சரிதான் என்கிறார்கள். விரைவில், திருட்டுக்கு கை வெட்டும் “இந்து – ஷரியா” சட்டத்தை முன்மொழிவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
சிரியாவில் உள்ள ஐ.எஸ். என்ற இஸ்லாமிய தேசம் மாதிரி, யாழ்ப்பாணத்தில் இந்து தேசத்தை உருவாக்கலாம். சிரியா, ஈராக் இரண்டு நாடுகளினதும் எல்லைகளை அகற்றி ஒன்று சேர்க்கும் நோக்குடன் தொடங்கப் பட்டது தான் ஐ.எஸ்.
ISIS என்ற அதன் ஆரம்ப கால பெயரே அந்த நோக்கத்தை வெளிப் படுத்துகின்றது. அதே பாணியில் இந்தியா, இலங்கை எல்லைகளை அகற்றி இரண்டையும் ஒன்றாக்கும் நோக்கில் இந்துத்துவா சக்திகள் செயற்படுகின்றன. இனி என்ன? அகண்ட இந்து பாரதக் கனவு நனவாகத் தொடங்கியுள்ளது
Written By Kalai Marx
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக