ஸ்டாலின் என்ற ஒரு தனி மனிதர் தான் காரணம் உக்ரைனில் பஞ்சம் ஏற்பட்டதற்கு, ஸ்டாலின் என்ற ஒரு தனி மனிதர் தான் காரணம் என்ற, அறிவுஜீவிகளின் கண்டுபிடிப்பு அபாரமானது.
ஸ்டாலின் கொண்டு வர விரும்பிய கூட்டுத்துவ பண்ணை முறையை, கூலாக்குகள் என்ற பணக்கார விவசாயிகள் தீவிரமாக எதிர்த்து வந்தனர். ஏனென்றால் அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப் படவிருந்தன. நிலவுடமையாளர்கள், கூலாக்குகள் கைது செய்யப் பட்ட காலத்தில், அவர்கள் தம்மிடம் இருந்த பயிர்களை அழித்து, கால்நடைகளை கொன்றனர்.
சோவியத் மக்களுக்கு, அதனால் ஏற்பட்ட சொத்து இழப்புக்களை யாராவது கணக்கிட்டார்களா? ஸ்டாலின் ஆட்சியை பிடிப்பதற்கு முன்னர், உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்தது. தோல்வியடைந்து பின்வாங்கிக் கொண்டிருந்த வெண் படைகளும், அவர்களுக்கு உதவியாக போர் புரிந்த பன்னாட்டுப் படைகளும், கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருந்தார்களா?
அவர்கள் செய்த நாச வேலைகள் எத்தனை? அவர்களால் அழிக்கப் பட்ட கிராமங்கள் எத்தனை? தீ மூட்டி எரிக்கப் பட்ட வயல்களினால், விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு? கொள்ளையடிக்கப் பட்ட பயிர்கள், கால்நடைகளால், இளம் சோவியத் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு? அவற்றை யாராவது கணக்கிட்டார்களா?
உலகம் முழுவதும், எதிரிக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்துவதற்காக, படையினர் இவ்வாறான நாச வேலைகளில் ஈடுபடுவது வழமையானது. வெண் படையினர், கூலாக்குகள் செய்த நாச வேலைகள், அதனால் உண்டான பொருளாதார இழப்புக்கள் குறித்த தகவல்கள் எங்கே? ஏன் அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை? அப்படி ஒன்று நடந்ததை கூட சொல்லாமல் மறைப்பது ஏன்?
எதிர்ப்புரட்சியாளர்களின் நாசவேலைகள், பயங்கரவாத நடவடிக்கைகள், அழித்தொழிப்புகள் எல்லாவற்றையும், அவற்றை எதிர்த்துப் போராடிய ஸ்டாலின் என்ற தனி மனிதனின் கணக்கில் எழுதும், அறிவுஜீவிகளின் திறமை வியக்க வைக்கிறது
Written & Thanks By Kalai Marx
சராசரி மக்களை சுரண்டித் தின்று, கார்பரேட்டுகளுக்கு மட்டுமே ஊழியம்
இந்த வலைப்பதிவில் தேடு
ஸ்டாலின் என்ற ஒரு தனி மனிதர் தான் காரணம்
H I'm Syed Abutahir from Chennai, Addicted to Learn & teaching SEO
ஸ்டாலின் என்ற ஒரு தனி மனிதர் தான் காரணம்
Reviewed by Tamilan Abutahir
on
6:57 AM
Rating: 5
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக