வீட்டுமனை அளவுகளை கணக்கிடும் எளிய முறைகள்
பழைய காலங்களில் நிலத்தின் அளவுகள் குழி, வேலி, மா என பேச்சு வழக்கத்திலும், ஏக்கர், ஹெக்டேர் என்ற அளவீட்டு முறையிலும் குறிக்கப்பட்டு வந்தது.
வீட்டு மனைகளை பொறுத்தவரை சதுர அடி கணக்குகளில் சொல்லப்படுவது இப்போது நடைமுறையாகும். சென்னை போன்ற நகர்ப்
Add caption |
வெவ்வேறு அளவுகள்
குறிப்பாக வீட்டு மனைகள் வாங்கும்போது சதுர அடி, சென்ட் மற்றும் கிரவுண்டு அளவுகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு நிலமானது சதுர அடி, சென்ட் அல்லது கிரவுண்டு போன்ற அளவுகளில் இருக்கும்போது அதை வேறொரு அடிப்படை அளவாக எவ்வாறு மாற்றி, அறிந்து கொள்வது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கும். வீட்டு மனை அளவானது சதுர அடியில் இருந்தால், அதை எவ்வாறு சென்ட் அளவில் மாற்றுவது..? அல்லது சென்ட் அளவை எவ்வாறு சதுர அடியாக மாற்றுவது..? என்ற சுலபமான வழிமுறையை இங்கே காணலாம்.
வித்தியாசமான அளவுகள்
பொதுவாக, சம்பந்தப்பட்ட இடம் எவ்வகையாக இருந்தாலும் அதற்கு நான்கு எல்லைகள் இருப்பது வழக்கம். ஒரு சில இடங்களில் நான்கு எல்லைகளுக்கும் மேற்பட்டு ஐந்து அல்லது ஆறு பக்கங்கள் கொண்ட நிலங்கள் அல்லது மனைகள் இருப்பதும் உண்டு. இன்னும் சில இடங்களில் மூன்று பக்க அளவுகள் மட்டும் கொண்ட முக்கோண வடிவ மனைகளும் இருப்பதுண்டு. அவற்றின் மொத்த அளவை கணக்கிடுவது சற்று சிக்கலான முறையாக இருப்பதால், நான்கு பக்கங்கள் உள்ள மனை அல்லது இடங்களுக்கான கணக்கீட்டு முறைகளை மட்டும் இங்கே காணலாம்.
சம அளவு மனை
வழக்கமாக, மனையின் அளவுகள் நான்கு பக்கங்களிலும் சமமாக இருக்கும் பட்சத்தில், அதன் நீளம் மற்றும் அகலத்தை பெருக்கி வரும் அளவுதான் அதன் மொத்த அளவாகும். அதாவது, ஒரு மனை நீளவாக்கில் இரு புறங்களிலும் 50 அடிகள் இருப்பதாகவும், அகலவாக்கில் இரு புறங்களிலும் 25 அடிகள் இருப்பதாகவும் கொண்டால் அந்த மனையின் ஒட்டு மொத்த அளவானது 1250 சதுர அடியாகும்.
ஒரு இடம் அல்லது மனையானது தனது நான்கு பக்கங்களிலும் வெவ்வேறு அளவுகளை கொண்டதாக இருக்கும் பட்சத்தில், அதன் எதிரெதிரான பக்கங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது மனையில் நீளவாக்கில் எதிரெதிராக உள்ள இரு பக்கங்களிலும் உள்ள அளவுகளை கூட்டிக்கொள்ள வேண்டும். அவ்வாறு கூட்டி வரக்கூடிய விடையை இரண்டால் வகுத்து அந்த எண்ணை குறித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக, மனையின் அகல வாக்கில் எதிரெதிராக உள்ள இரு பக்கங்களிலும் உள்ள அளவுகளை கூட்டிக்கொள்ளவேண்டும். வரக்கூடிய விடையை இரண்டால் வகுத்து அந்த எண்ணை குறித்துக்கொள்ளவேண்டும். மேற்கண்ட முறைகளில் கிடைத்த இரண்டு எண்ணிக்கைகளையும் பெருக்கினால் வரக்கூடிய அளவுதான் மனையின் மொத்த அளவாகும்.
அதாவது, மனையின் இரு பக்க நீளங்கள் முறையே 48 மற்றும் 54 என்று இருப்பதாகவும், இரு பக்க அகலங்கள் முறையே 28 அடி மற்றும் 24 அடி என்று இருப்பதாகவும் கொள்வோம். நீள வாக்கில் உள்ள அளவுகளை கூட்டினால் 102 அடி வரும். அதை இரண்டால் வகுத்தால் 51 அடி வருகிறது.
அகல வாக்கில் உள்ள அளவுகளை கூட்டினால் 52 அடி வரும். அதை இரண்டால் வகுத்தால் 26 அடி வருகிறது. ஆக, மேற்கண்ட 51 மற்றும் 26 ஆகியவற்றை பெருக்கினால் வரக்கூடிய விடையான 1326 என்பதுதான் மனையின் மொத்த சதுர அடி அளவாகும்.
சென்ட் அளவு
பொதுவாக, ஒரு சென்ட் என்பது 435.6 சதுர அடியாக கணக்கிடப்படுகிறது. ஒரு ஏக்கர் என்பது 100 சென்ட் கொண்டதாகும். அதையே சதுர அடியில் குறிப்பிடுவதென்றால், ஒரு ஏக்கர் என்பது 43560 சதுர அடிகள் கொண்டதாகும். குறிப்பிட்ட மனையின் மொத்த சதுர அடி அளவை 435.6 என்ற அளவால் வகுத்தால் கிடைக்கும் அளவானது அந்த மனையின் மொத்த சென்ட் அளவாகும். அதாவது, 1326 சதுர அடி கொண்ட மனையின் அளவை 435.6 என்ற அளவால் வகுத்து கிடைக்கும் 3.04 (3 சென்ட்) என்பதுதான் மனையின் சென்ட் அளவாகும்.
கிரவுண்டு அளவு
ஒரு கிரவுண்டு என்பது 2400 சதுர அடிகள் கொண்டதாகும் எனவே, குறிப்பிட்ட மனையின் மொத்த சதுர அடி அளவை 2400 என்ற அளவால் வகுத்தால் கிடைப்பது மனைக்கான கிரவுண்டு அளவு ஆகும். மேற்கண்ட மனையின் மொத்த சதுர அடியான 1326 என்பதை 2400 என்ற அளவால் வகுத்தால் வரக்கூடிய 0.55 என்ற விடை (அரை கிரவுண்டுக்கு சற்று கூடுதல்) மனையின் கிரவுண்டு அளவாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக